ஆதார் கார்டில் திருத்தம் செய்ய எங்கயும் அலையை தேவை இல்லை உங்க வீட்டிற்க்கே வருவார்கள்.
ஆதார் அட்டை திருத்தம் செய்வது இனி சுலபம்
வீடுகளுக்கே சென்று ஆதார் அட்டையில் இருக்கும் திருத்தங்கள் சரிசெய்து தரப்படும்
UIDAI தற்போது 48,000 இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் தபால்காரர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
Aadhaar Card Update: ஒன்றிய அரசு கொண்டுவந்த ஆதார் கட்டாயம் என்ற உத்தரவைத் தொடர்ந்து, முக்கிய ஆவணங்களில் ஆதாரும் ஒன்றாக மாறியது. இந்த ஆதார் கார்டில் திருத்தங்களை மேற்கொள்ள மக்கள் சேவை மையத்தை நோக்கி அலைவதால், அவற்றிற்கு தீரிவு காண அரசு ஆலோசனை மேற்கொண்டுவருகிறது.
Surveyஅதன்படி, வீடுகளுக்கே சென்று ஆதார் அட்டையில் இருக்கும் திருத்தங்கள் சரிசெய்து தரப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வெளியான அறிக்கையின்படி, UIDAI தற்போது 48,000 இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் தபால்காரர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
பயிற்சிக்குப் பிறகு, தபால்காரர்கள் உங்கள் வீட்டிற்கே வந்து ஆதார் சேவைகளை வழங்குவார்கள். தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் அதிகமான மக்களைச் சென்று தொடர்புகொள்வதற்கும், மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது, ஆதார் விவரங்களைப் புதுப்பித்தல், குழந்தைகளுக்கு ஆதார் அட்டை என பல சேவைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தபால்காரர்களுக்குப் பயிற்சி
அறிக்கையின்படி, 1.5 லட்சம் அஞ்சல் அலுவலர்களுக்கு 2 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. தபால்காரர்களுக்கு மடிக்கணினி அல்லது டேப்லெட் அடிப்படையிலான ஆதார் கிட் உள்ளிட்ட பொருத்தமான டிஜிட்டல் உபகரணங்களை UIDAI வழங்கும்.
விரிவுப்படுத்தப்படும் ஆதார் மையம்
இது தவிர, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பொது சேவை மையத்தில் பணிபுரியும் சுமார் 13,000 பணியாளர்களும் இந்த சேவைக்காக அங்கீகரிக்கப்படுவார்கள்.
தரவுகள் விரைவாகப் புதுப்பிப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக, நாட்டின் 755 மாவட்டங்களிலும் ஆதார் சேவை மையத்தை நிறுவ யுஐடிஏஐ திட்டமிட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile