மனசுக்கு பிடித்தவர்களிடம் மணி கணக்கா பேசலாம் Airtel ரூ,185 யிலிருந்து ஆரம்பம் அன்லிமிடெட் காலிங்,அதிக வேலிடிட்டி
Airtel அதன் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மையை கொண்டு வந்துள்ளது
. இந்த திட்டம் ஒரு TRAI யின் கட்டாயத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட முக்கிய திட்டமாகும்.
இந்த திட்டத்தின் விலை ரூ,185 யிலிருந்து ஆரம்பமாகிறது
இந்தியாவின் இரண்டாவது டெலிகாம் நிறுவனமான Airtel அதன் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மையை கொண்டு வந்தது. இந்த திட்டம் ஒரு TRAI யின் கட்டாயத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட முக்கிய திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் குறைந்த விலையில் அன்லிமிடெட் கால் நன்மையை பெற விரும்பினால் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த திட்டத்தின் விலை ரூ,185 யிலிருந்து ஆரம்பமாகிறது மேலும் வொயிஸ் ஒன்லி திட்டத்தின் கீழ் ரூ,500 வரையிலான விலையில் வரும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து காலிங் மற்றும் SMS போன்ற நன்மையும் பெறலாம்.
Airtel ரூ,185 திட்டம்
ஏர்டெலின் இந்த திட்டத்தின் விலை ரூ,185 யில் வருகிறது, இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 300 SMS இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டியோ 28 நாட்கள் காலத்துடன் வருகிறது. இந்நிறுவனம் அன்லிமிடெட் லோக்கல் , STD மற்றும் ரோமிங் கால்களை களை வழங்குகிறது. கஸ்டமர்கள் மொத்தம் 300 எஸ்எம்எஸ் நன்மையும் பெறுவார்கள். மேலும், இந்தத் திட்டத்துடன் ஏர்டெல் 30 நாட்களுக்கு ஹலோடியூன்ஸையும் வழங்குகிறது.
Airtel ரூ 203 திட்டம்
இதில் அடுத்த திட்டம் ரூ 203 யில் வருகிறது இந்த ஏர்டெல் வாய்ஸ்-மட்டும் திட்டத்தின் வேலிடிட்டி காலம் 30 நாட்கள் ஆகும். இந்தத் திட்டத்தில் நிறுவனம் டேட்டாவையும் வழங்குவதில்லை. இந்தத் திட்டம் அன்லிமிடெட் லோக்கல் , தேசிய மற்றும் ரோமிங் கால்களுடன் 300 எஸ்எம்எஸ் நன்மையுடன் மெசேஜ் அனுப்பும் வசதி வழங்குகிறது. மேலும், நிறுவனம் ரூ. 203 திட்டத்தில் ஹலோடியூன்ஸையும் வழங்குகிறது.
Airtel ரூ 206 திட்டம்
ஏர்டெல்லின் ரூ. 206 திட்டத்தின் விலையில் வருகிறது இதன் வேலிடிட்டி காலம் ஒரு மாதம் ஆகும். இந்தத் திட்டம் அன்லிமிடெட் கால்கள் லோக்கல் , தேசிய மற்றும் ரோமிங்) மற்றும் 300 SMS மெசேஜ்களையும் வழங்குகிறது. கஸ்டமர் இந்த திட்டத்தில் 30 நாட்களுக்கு ஹலோடியூன்ஸையும் பெறுகிறார்கள்.
Airtel ரூ 469 திட்டம்
ஏர்டெல்லின் ரூ. 469 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி காலத்துடன் வருகிறது. இந்தத் திட்டம் டேட்டா இல்லாமல் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 900 எஸ்எம்எஸ் உடன் மெசேஜ் அனுப்பும் வசதி வழங்குகிறது. இலவசப் பலன்களைப் பொறுத்தவரை, ஏர்டெல் கஸ்டமர்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம், ஏர்டெல் சேஃப் மற்றும் 12 மாதங்களுக்கு இலவச ஹலோடியூன்ஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன.