Digit.in

EPFO சேவையின் மூலம் PF பணத்தை UPI மூலம் ஈசியா எடுக்கும் வசதி விரைவில் இதில் முக்கியமாக செய்ய வேண்டியது என்ன

EPFO சேவையின் மூலம் PF பணத்தை UPI மூலம் ஈசியா எடுக்கும் வசதி விரைவில்  இதில் முக்கியமாக செய்ய வேண்டியது என்ன

அறிக்கைகளின்படி, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO), டிசம்பர் மாத இறுதிக்குள் UPI அடிப்படையிலான வருங்கால வைப்பு நிதி பணம் எடுக்கும் வசதியைத் தொடங்கும் இறுதிக்கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த அம்சம், EPF பயனர்கள் BHIM ஆப் மூலம் தகுதியான PF பணத்தை எடுக்கலாம் , தாங்கள் எடுக்கக்கூடிய பேலன்ஸ் சரிபார்க்கவும், தங்களது பென்ஷன் அக்கவுண்டில் குறைந்தபட்சம் எவ்வளவு தொகை இருக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ளவும் வழிவகுக்கும்.

அறிக்கையின்படி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்களில் ஒன்றான UPI மூலம் பணம் எடுக்கும் வசதி, அறிமுகப்படுத்தும் இறுதிக் கட்டத்தில் உள்ளது. நடத்தப்பட்ட ஆய்வின்படி, அனைத்து சோதனைகளும் நிறைவடைந்து, சோதனைகளின் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டுள்ளன. இந்த வசதியானது, EPFO ​​3.0 திட்டத்தின் கீழ் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) மேற்கொள்ளப்படும் ஒரு பரந்த சீரமைப்பின் ஒரு பகுதியாகும். இத்திட்டம் பிப்ரவரி 2027-க்குள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

UPI மூலம் பணம் எப்படி எடுக்கலாம்

UPI மூலம் பணம் எடுப்பதற்க்கு உங்களின் EPFO யின் UAN நம்பர் மற்றும் UPI அக்கவுண்ட் உடன் லிங்க் செய்திருக்க வேண்டும். மேலும் இந்த அம்சமானது பேங்க் அக்கவுண்ட் வெரிபை செய்து EPFO அக்கவுண்ட் உடன் லிங்க் செய்யப்பட்டிருக்க வேண்டும் அப்பொழுது மட்டுமே இந்த அம்சம் வேலை செய்யும்.

UPI மூலம் எவ்வளவு பணம் எடுக்கலாம்?

கிடைத்த தகவல்களின்படி, சந்தாதாரர்கள் தங்களின் இபிஎஃப் பணத்தில் 75% வரை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்; இருப்பினும், இதுவரை அதிகாரப்பூர்வ வரம்பு எதுவும் அறிவிக்கப்படவில்லை. நவம்பர் 19 அன்று நடைபெற்ற தனது வாரியக் கூட்டத்தில், ஓய்வூதிய நிதி அமைப்பு, பிஎஃப் கணக்குகளில் கட்டாய குறைந்தபட்ச இருப்பை 25%-லிருந்து 10%-ஆகக் குறைக்கும் ஒரு முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை, பகுதியளவு பணம் எடுப்பதற்கான லிமிட்டை , தகுதியான பேலன்ஸ் பொருத்து 75%-லிருந்து 90%-ஆக அதிகரிக்கவும் கூடும்.

EPFO 3.0 என்றால் என்ன?

EPFO 3.0 என்பது பென்ஷன் சேமிப்பு பணத்தின் அமைப்பின் தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் ஒரு முழுமையான மறுசீரமைப்பு ஆகும். "தொழில்துறை தரத்திலான மைய வங்கித் திறன்கள் மூலம் சேவைகளை நவீனமயமாக்குவதே" இதன் முதன்மை நோக்கமாகும். ஆவணப் பணிகளைக் குறைப்பது, கோரிக்கை தீர்வினை விரைவுபடுத்துவது மற்றும் உறுப்பினர் சேவைகளுக்காக ஒரு ஒருங்கிணைந்த தளத்தை வழங்குவது என்பதே இதன் நோக்கமாகும். உடனடிப் பணம் எடுத்தல், பன்மொழி சுயசேவை மற்றும் தடையற்ற சம்பளப் பட்டியலுடன் இணைக்கப்பட்ட பங்களிப்புகள் ஆகியவை இதன் திட்டமிடப்பட்ட திறன்களில் அடங்கும்.

நீங்கள் EPFO மூலம் எவ்வளவு பணம் எதனை முறை எடுக்கலாம் என்பதை பற்றிய தகவல் தெரிந்து கொள்ள இதோ கீழே படிக்கலாம்.

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile

Recommended Articles