ஜியோவுக்கு போட்டியாக களமிறங்கிய BSNL ரூ.349 திட்டம் எந்த திட்டத்தில் அதிக நன்மை?
BSNL அதன் கஸ்டமர்களுக்கு ஒரு புதிய திட்டம் அறிமுகம் செய்துள்ளது
இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமருக்கு அன்லிமிடெட் காலிங் நன்மை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் விலை ரூ,349 ஆகும் , ஜியோவும் அதே திட்டம் இருப்பதால் என்ன வித்தியாசம் இருக்கு

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பார்த் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு ஒரு புதிய திட்டம் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமருக்கு அன்லிமிடெட் காலிங் நன்மை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இது பயனர்களுக்கு தினசரி டேட்டா லிமிட் எதையும் விதிப்பதில்லை. இந்தத் திட்டத்தின் மூலம், கஸ்டமர் தங்களுக்குத் தேவையான அளவு டேட்டாவை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் விலை ரூ,349யில் வருகிறது மேலும் இதன் மறுபுறம் Jio ரூ,349 யில் வருகிறது இந்த இரு திட்டத்தில் இருக்கும் வித்தியாசம் மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
BSNL ரூ,349 திட்டத்தின் நன்மை.
பிஎஸ்என்எல் இந்தியா தனது அதிகாரப்பூர்வ X ஹேண்டில் மூலம் இந்த புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் விலை 349 ஆகும், மேலும் இது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இதன் நன்மைகளில் இந்தியா முழுவதும் அன்லிமிடெட் வொயிஸ் கால் மற்றும் இலவச தேசிய ரோமிங் ஆகியவை அடங்கும். பயனர்கள் தினமும் 100 இலவச SMS மெசேஜுக்கு வழங்குகிறது . இந்தத் திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டாவும் உள்ளது, இதன் மூலம் பயனர்கள் இந்தியா முழுவதும் எந்த லிமிட் இல்லாமல் 3ஜி/4ஜி டேட்டாவைப் பயன்படுத்தலாம்.
Why put limits on your connectivity when you can enjoy more with BSNL! Recharge smart via #BReX 👉 https://t.co/41wNbHpQ5c #BSNLIndia #StayConnected #BSNLServices #SmartIndia #EverydayConnectivity #349plan @CMDBSNL @robertravi21 https://t.co/VZ5ievI5SG
— BSNL India (@BSNLCorporate) November 24, 2026
Jio ரூ,349 திட்டத்தின் நன்மை.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 349 திட்டத்தின் நன்மைகளைப் பற்றிப் பேசுகையில், கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் கால்களுடன் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆக மொத்தம் 56GB டேட்டா வழங்கப்படுகிறது.மேலும், இந்நிறுவனம் தினமும் 100 SMS மெசேஜ்களையும் வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் மற்றும் 50ஜிபி ஜியோஏஐகிளவுட் ஸ்டோரேஜ் அடங்கும். கூடுதலாக, இந்தத் திட்டத்தில் 12 மாத கேன்வா ப்ரோ லைட் சப்ஸ்க்ரிப்ஷன், ஜியோஏஐகிளவுட் சப்ஸ்க்ரிப்ஷன் மற்றும் ஜியோடிவி ஆகியவையும் அடங்கும். இந்த ரீசார்ஜ்களை MyJio ஆப் மூலம் செய்து கொள்ளலாம்.
Jio VS BSNL ரூ,349 வரும் இந்த திட்டத்தில் எது பெஸ்ட்?
பீஸ்என்எல் மற்றும் ஜியோ ரூ,349 யில் வரும் இரு திட்டத்திலும், அன்லிமிடெட் காலிங் நன்மை வழங்குகிறது, ஆனால் இந்த திட்டத்தின் கீழ் Jio யின் இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா கணக்கில் ஆக மொத்தம் 56GB டேட்டா வழங்கப்படுகிறது, ஆனால் இதன் மறுபக்கம் பீஸ்என்எல் அன்லிமிடெட் டேட்டா நன்மை வழங்குகிறது. அதாவது இந்த திட்டத்தின் கீழ் டேட்டாவுக்கு எந்த ஒரு லிமிட்டுமில்லை இஷ்ட்டம் போல் பயன்படுத்தலாம்.
இதில் சிறிய குறை என பார்த்தல் ஜியோவில் Unlimited 5G நன்மை வழங்கப்படுகிறது அதாவது 5G நெட்வொர்க் கவரெட் ஏரியாவில் அன்லிமிடெட் 5G நன்மை பெறலாம், ஆனால் மறுபக்கம் பீஸ்என்எல் தனது அன்லிமிடெட் டேட்டா நன்மை வழங்கினாலும் கஸ்டமர்கள் அன்லிமிடெட் 3ஜி/4ஜி நன்மையே பெற முடியும். மேலும் இதில் வேலிடிட்டி இந்த திட்டத்திலும் ஒரே மாதுரியாக 28 நாட்கள் வழங்கப்படுகிறது. கூடுதல் நன்மையின் கீழ் BSNL எக்ஸ்ட்ரா நன்மை ஏதும் வழங்கவில்லை, மறுபக்கம் ஜியோவோ JioAICloud இலவசமாக 50 GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மற்றும் Canva Pro Lite போன்ற அம்சம் வழங்கப்படுகிறது.
Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.
View full profile
