EPFO வட்டி எவ்வளவு ஏறியுள்ளது என எப்படி சரி பார்ப்பது?
ஊழியர்களின் கட்டாய வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் வட்டி சரி பார்க்கலாம்
சட்டப்பூர்வ மாத ஊதிய உச்சவரம்பை, அரசு ₹15,000-லிருந்து ₹25,000 ஆக உயர்த்தியுள்ளது.
உங்களின் EPF வட்டி எவ்வளவு வந்துள்ளது என்பதை எப்படி சரி பார்ப்பது?
ஊழியர்களின் கட்டாய வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் வட்டி (intrest) பெறுவதற்கான சட்டப்பூர்வ மாத ஊதிய உச்சவரம்பை, அரசு ₹15,000-லிருந்து ₹25,000 ஆக உயர்த்தியுள்ளது. செப்டம்பர் 16 அன்று மத்திய அமைச்சரவை இந்த உயர்வுக்கு ஒப்புதல் அளித்தது. திருத்தப்பட்ட இந்த உச்சவரம்பு செப்டம்பர் 17 முதல் அமலுக்கு வரும் என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Surveyஅமைச்சகத்தின்படி, இந்த நடவடிக்கையின் மூலம் கூடுதலாக சுமார் 51 லட்சம் ஊழியர்கள் கட்டாய EPFO திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டியானது தானாகவே செயலாக்கப்பட்டு, பின்னர் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு, மெம்பர் அக்கவுன்ட் பெலன்சில் வரவு வைக்கப்பட்டு, உங்கள் பாஸ்புக்கிலும் பிரதிபலிக்கும்.
உங்களின் EPF வட்டி எவ்வளவு வந்துள்ளது என்பதை எப்படி சரி பார்ப்பது?
இப்பொழுது புதிய EPFO ரூளின் படி EPF வட்டி எவ்வளவு வந்துள்ளது மேலும் உங்கள் அக்கவுன்ட் வட்டி டெபாசிட் செய்யப்பட்டதும் மாதம் தோறும் எவ்வளவு வட்டி ஏறுகிறது என்பதை பார்க்க இந்த ஸ்டெப்பை போலோ செய்யலாம்.
- EPFO இந்தியா வெப்சைட்டிற்கு சென்று லோகின் செய்யவும் .
- மேல் நேவிகேஷன் லிஸ்ட்டில், ‘View’ என்பதை தட்டவும்.
- கீழ்தோன்றும் லிஸ்ட்டில் இருந்து ‘பாஸ்புக்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் UAN மற்றும் அதே பாஸ்வர்ட் பயன்படுத்தி பாஸ்புக் போர்ட்டலில் லோகின் செய்யவும் .
- உங்கள் மெம்பர் அடையாள நம்பர்கள் (வெவ்வேறு நிறுவனங்களின்) ஒரு பட்டியலாகக் காட்டப்படும். முழுமையான பரிவர்த்தனை வரலாற்றைக் காண, தொடர்புடைய மெம்பர் அடையாள நம்பருக்கும் அடுத்துள்ள ‘பாஸ்புக்கைப் பார்க்கவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- காப்பி சேமிக்க, பாஸ்புக் பக்கத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள “PDF டவுன்லோட்” பட்டனை கிளிக் செய்யவும்.
- குறிப்பாக, மெம்பர்கள் உமாங் ஆப் வழியாகத் தங்களின் பிஎஃப் பாஸ்புக்கைப் பார்க்கவும் டவுன்லோட் செய்யவும் வசதி உள்ளது .

UMANG ஆப் யிலும் செக் செய்யலாம்
- உங்கள் மொபைலில் Google Play ஸ்டோருக்கு சென்று Umang ஆப்பை டவுன்ட்லோத் செய்து அதன் பிறகு உங்களின் ரெஜிஸ்ட்டர் மொபைல் நம்பரை போட்டு டவுன்லோட் செய்யலாம்
- அதில் EPFO என சர்ச் செய்வதன் மூலம் Employee Centric சர்விஸ் என்பதில் பார்க்கலாம்.
- அதன் பிறகு அங்கு உங்களின் UAN நம்பரை போட்டு get OTP என்பதில் க்ளிக் செய்யவும்.
- இப்பொழுது உங்களின் ரெஜிஸ்ட்டர் மொபைல் நம்பரில் வந்த OTP-போட்டு லொகின் செய்யவும் மேலும் அதன் பிறகு EPF பற்றிய அணைத்து தகவலையும் பெறலாம்.
இதையும் படிங்க:Aadhaar நம்பரை ஷேர் செய்யும் முன் இந்த 2 விஷயத்தை தெருஞ்சிகொங்க மேலும் அதன் பயன் மற்றும் டவுன்லோட் எப்படி செய்வது?
WhatsApp, Missed Call, SMS யில் நீங்கள் வட்டி தகவலை பார்க்கலாம்.
- இப்பொழுது EPFO யில் WhatsApp நம்பர் மூலம் உங்கள் அக்கவுண்டில் எவ்வளவு பணம் வந்துள்ளது என பார்க்கலாம் அதில் இதோ இந்த WhatsApp நம்பர் சரிபார்க்கலாம்.
- சென்னை & புதுச்சேரி
- அம்பத்தூர் 6380131921
- சென்னை (North) 9345750916
- சென்னை (South) 6380366729
- புதுச்சேரி 6380023914
- தாம்பரம் 6380153667
- தமிழ்நாட்டின் நம்பர்
- கொயம்பதூர் 9994255012
- மதுரை 9489938487
- நககொவில் 6381122366
- சேலம் 9080433650
- திருநெல்வேலி 9489987157
- திருச்சி 6380109286
- வேலூர் 7397593330
- EPFO யின் ரெஜிஸ்ட்டர் மொபைல் நம்பர் 9966044425 யில் மிஸ்ட் கால் தருவதன் மூலம் நீங்கள் சரி பார்க்கலாம்.
- EPF பேலன்ஸ் நீங்கள் உங்களின் மொபைல் நம்பர் பயன்படுத்தி ‘EPFOHO UAN’ யின் 7738299899 இந்த நம்பருக்கு மெசஜ் அனுப்புவதன் மூலம் பெறலாம் .
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
