200MP ZEISS டெலிபோட்டோ கேமராவுடன் Vivo X500 மற்றும் X500 pro Max அறிமுகம் விலை மற்றும் அம்சங்கள் பாருங்க

Highlights

விவோ நிறுவனம் Vivo X500 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்தது

Vivo X500 pro மற்றும் X500 pro Max போனின் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பார்க்கலாம்

Vivo X500 Pro Max போனில் 200 மெகாபிக்ஸல் கேமரா வழங்கப்படுகிறது

விவோ நிறுவனம் Vivo X500 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த Vivo X500 சீரிஸ் கீழ் Vivo X500, Vivo X500 pro மற்றும் X500 pro Max ஆகிய ஸ்மார்ட்போன்கள் அடங்கும். இதில் நாம் இப்பொழுது Vivo X500 pro மற்றும் X500 pro Max போனின் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் இந்த இரு போனிலும் MediaTek Dimensity 9600 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதில் Vivo X500 Pro Max போனில் 200 மெகாபிக்ஸல் கேமரா வழங்கப்படுகிறது இதன் முழு தகவல் பார்க்கலாம் வாங்க.

Vivo X500 pro சிறப்பம்சம்.

Vivo X500 pro போனில் , 144Hz வரையிலான அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.36-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே உள்ளது. மேலும், இந்த டிஸ்ப்ளே 6,000 நிட்ஸ் வரையிலான லோக்கல் பீக் பிரைட்னஸை வழங்குகிறது. இந்தச் போனில் டஸ்ட் மற்றும் வாட்டர் ரேசிச்டன்ட் வசதியுடன்,இதில் இது IP68 மற்றும் IP69 ரேட்டிங்கை கொண்டுள்ளது.

விவோ தனது X500 ப்ரோவை , 2nm மிக சிறந்த பர்போமன்சுக்கு இதில் MediaTek Dimensity 9600 Pro சிப்செட் மற்றும் மாலி G2-அல்ட்ரா NX GPU உடன் வழங்குகிறது. மேலும், இதில் 12GB LPDDR5X அல்ட்ரா ரேம் மற்றும் 256GB UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவை உள்ளன,மிக சிறந்த ஒப்பரேட்டிங் சிஸ்டமுக்கு விவோ X500 ப்ரோ, ஆண்ட்ராய்டு 17-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆரிஜின்ஓஎஸ் 7 (OriginOS 7) ஸ்கின்னில் இயங்குகிறது.

புகைப்பட ஆர்வலர்களுக்காக, இந்தச் சாதனத்தில் ZEISS-ஆல் மேம்படுத்தப்பட்ட மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் OIS உடன் கூடிய 50MP முதன்மை கேமரா, 50MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 64MP ZEISS APO டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன. முன்புறத்தில், செல்ஃபிகள் அல்லது வீடியோ கால்களுக்காக பயனுள்ளதாக இருக்கும் 50MP சென்சாரும் உள்ளது. மேலும், கஸ்டமர் எடர்னல் பிளாக் மற்றும் அபெக்ஸ் ஆரஞ்சு ஆகிய கலர் ஆப்சனில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

பேட்டரியைப் பொறுத்தவரை, இந்த போனில் 6,510mAh பவர் கொண்ட பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது .

Vivo X500 Pro Max சிறப்பம்சம்.

Vivo X500 Pro Max போனில் , 144Hz வரையிலான அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5,000 நிட்ஸ் வரையிலான லோக்கல் பீக் பிரைட்னஸ் கொண்ட ஒரு பெரிய 6.85-இன்ச் 2K AMOLED பேனலைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் IP68 மற்றும் IP69 தரமதிப்பீடுகளையும் பெற்றுள்ளது, இது சாதனத்தை தூசி மற்றும் நீரிலிருந்து பாதுகாப்பதை உறுதி செய்கிறது.

இந்தக் போனில் , 2nm பர்போமன்சுக்கு உருவாக்கப்பட்ட MediaTek Dimensity 9600 Pro ப்ரோசெசர் சப்போர்ட் வழங்குகிறது. மேலும், இது 12GB LPDDR5X அல்ட்ரா ரேம் மற்றும் 512GB வரையிலான UFS 4.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 7,800mAh பேட்டரி, 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடனும் வருகிறது.

விவோ X500 ப்ரோ மேக்ஸ், ZEISS தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் OIS வசதியுடன் கூடிய 50MP ப்ரைமரி கேமரா, 200MP ZEISS APO டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 50MP அல்ட்ராவைடு லென்ஸ் ஆகியவை அடங்கும். முன்புறத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 50MP கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், ஏபெக்ஸ் ஆரஞ்சு மற்றும் எடர்னல் பிளாக் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.

Vivo X500 pro மற்றும் Vivo X500 Pro Max விலை

Vivo X500 Pro யின் ஆரம்ப விலை 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் விலை ரூ,1,49,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது.

Vivo X500 Pro Max போனின் விலை Vivo X500 Pro Max போனின் ஆரம்ப விலை ரூ,1,64,999க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இந்த இரு போனின் மாடலும் டிசம்பர் 3 விற்பனைக்கு வருகிறது நீங்கள் இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,15,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile

Recommended Articles