Tecno AI பவர் கொண்ட இரண்டு போன் கம்மி விலையில் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

HIGHLIGHTS

Tecno இந்திய சந்தையில் அதன் Tecno POVA 7 ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுகம் செய்துள்ளது.

இதில் Tecno POVA 7, Tecno POVA 7 Pro ஆகியவை அடங்கும்

இந்த இரண்டு போன்களும் AI அம்சங்கள் கொண்டிருக்கும்

Tecno AI பவர் கொண்ட இரண்டு போன் கம்மி விலையில் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

Tecno இந்திய சந்தையில் அதன் Tecno POVA 7 ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுகம் செய்துள்ளது. இதில் Tecno POVA 7, Tecno POVA 7 Pro ஆகியவை அடங்கும். இந்த இரண்டு போன்களும் AI அம்சங்கள் கொண்டிருக்கும் மேலும் இந்த போனில் இருக்கும் சுவாரஸ்யமான அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Tecno POVA 7, POVA 7 Proவிலை தகவல்

டெக்னோ POVA 7 இன் 8GB + 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.12,999 மற்றும் 8GB + 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.13,999. இந்த போன் மேஜிக் சில்வர், ஓயாசிஸ் கிரீன் மற்றும் கீக் பிளாக் கலர் விருப்பங்களில் வருகிறது. அதே நேரத்தில், POVA 7 Pro இன் 8GB + 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.16,999 மற்றும் 8GB + 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.17,999. இந்த போன் டைனமிக் கிரே, நியான் சியான் மற்றும் கீக் பிளாக் வண்ணங்களில் வருகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும் .

Tecno POVA 7, POVA 7 Pro சிறப்பம்சம்.

டிஸ்ப்ளே:-டெக்னோ POVA 7 ப்ரோ 6.78-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது அல்ட்ரா-ஸ்மூத் 144Hz ரெப்ராஸ் ரேட் வீதத்தை வழங்குகிறது. அதே நேரத்தில், POVA 7 6.78-இன்ச் FHD + LTPS IPS டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது அல்ட்ரா-ஸ்மூத் 144Hz ரெப்ராஸ் ரேட்டை வழங்குகிறது.

ப்ரோசெசர்:-TECNO Pova 7 5G மற்றும் TECNO Pova 7 Pro 5G இரண்டு போனிலும் MediaTek Dimensity 7300 Ultimate சிப்செட் 4nm ப்ரோசெசரின் கீழ் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போன் ஆண்ட்ரோய்ட் 15 அடிபடையின் கீழ் HiOS 15 உடன் இனைந்து வேலை செய்கிறது.

ரேம் ஸ்டோரேஜ் :TECNO Pova 7 சீரிஸ் இந்த இரண்டு போனிலும் யில் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் மற்றும் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:Oppo Reno 14 சீரிஸ் யின் புதிய போன் 6200Mah பேட்டரியுடன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

கேமரா :-கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், POVA 7 ப்ரோவின் பின்புறம் 64-மெகாபிக்சல் சோனி IMX682 ப்ரைமரி கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் இரண்டாவது கேமரா உள்ளது, இது vlog மோட் மற்றும் இரட்டை வீடியோ செயல்பாட்டை சப்போர்ட் செய்கிறது, இது க்ரிஎட்டர்களுக்கு சிறந்தது. POVA 7 50-மெகாபிக்சல் AI கேமராவைக் கொண்டுள்ளது மற்றும் செல்பிக்கு இந்த இரு போனிலும் ஒரே மாதுரியான 13MP முன் கேமரா வழங்கப்படுகிறது.

பேட்டரி :-இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 6,000mAh பேட்டரி உள்ளது, இது 45W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது , அதே நேரத்தில் POVA 7 ப்ரோ 30W வயர்லெஸ் சார்ஜிங்கையும் சப்போர்ட் செய்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo