அட OnePlus இப்போ தான் ஒரு புது போன் கொண்டு வந்தாங்க, மறுபடியும் ஒரு புதிய போனா எந்த மாடல் பாருங்க

HIGHLIGHTS

OnePlus சமிபத்தில் அதன் OnePlus 15-அறிமுகம் செய்தது

அதன் பிறகு இப்பொழுது OnePlus 15R-இந்தியாவில் அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது

OnePlus 15R இந்தியாவில் டிசம்பர் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும்.

அட OnePlus இப்போ தான் ஒரு புது போன் கொண்டு வந்தாங்க, மறுபடியும் ஒரு புதிய போனா எந்த மாடல் பாருங்க

OnePlus சமிபத்தில் அதன் OnePlus 15-அறிமுகம் செய்தது அதன் பிறகு இப்பொழுது OnePlus 15R-இந்தியாவில் அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது OnePlus 13R போல இருக்கும் என வதந்தி வருகிறது மேலும் இந்த போனின் டிசைன், பர்போமான்ஸ் , கேமரா மற்றும் AI அம்சங்கள் என்ன இருக்கும் என்பதை பார்க்கலாம் இதனுடன் OnePlus Pad Go 2 அதே நாளில் அறிமுகமாகும் என தெரிகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OnePlus 15R இந்திய அறிமுக தேதி

OnePlus 15R இந்தியாவில் டிசம்பர் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும். இது சார்கோல் பிளாக் மற்றும் மிண்டி கிரீன் என இரண்டு கலர் விருப்பங்களைப் வரும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், கிடைக்கும் தன்மை, பேங்க் சலுகைகள் மற்றும் பிற விவரங்கள் இன்னும் ரகசியமாகவே உள்ளன.

OnePlus 15R எதிர்ப்பர்க்கபடும் அம்சங்கள்

OnePlus 15R ஆனது 165Hz ரெப்ரஸ் ரெட்டுடன் 6.7-இன்ச் 1.5K AMOLED பேனலைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 5 சிப்செட்டிலிருந்து அதன் சக்தியைப் பெறலாம் மற்றும் 12GB வரை LPDDR5x ரேம் மற்றும் 512GB UFS 4.1 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது 8,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 100W வயர்டு சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனம் ஆக்ஸிஜன் OS 16 ஐ அடிப்படையாகக் கொண்ட Android 16 யில் இயங்கும். இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் IP68 மற்றும் IP69 சர்டிபிகேஷன் பெறலாம்.

கேமரா பொறுத்தவரை, OnePlus 15R ஆனது 50MP ப்ரைம் சென்சார் மற்றும் 50MP செகண்டரி நிலை சென்சார் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனம் NFC, இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 3D அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனரையும் சப்போர்ட் செய்யும்..

இதையும் படிங்க:புதியதாக அறிமுகம் செய்த Realme யின் இந்த போன் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது

OnePlus 15R டிசைன்

OnePlus 15R ஆனது OnePlus 15 ஐப் போலவே ஒரு புதிய டிசைனை பெறலாம் . இந்த போன் ஒரு பிளாட்டன பிரேம் , சதுர கேமரா மாட்யுல் பெறக்கூடும். நிறுவனம் ஏற்கனவே சோசியல் மீடியா தளங்களில் இந்த போனை பற்றிய விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. இது விரைவில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள OnePlus Ace 6T போல இருக்கலாம் என்று லீக்கள் தெரிவிக்கின்றன.

OnePlus 15R எதிர்ப்பர்க்கபடும் விலை

OnePlus 15R விலை சுமார் ரூ.45,000 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ரூ.42,999க்கு அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 13R உடன் ஒப்பிடும்போது சற்று விலை அதிகம். இருப்பினும், விவரங்கள் தற்போது உறுதிப்படுத்தப்படவில்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo