WhatsApp யில் இருக்கும் அந்த 7 ரகசிய அம்சம் உங்களின் சேட் ஆகிடும் செம்ம மஜா

WhatsApp யில் இருக்கும் அந்த 7 ரகசிய அம்சம் உங்களின் சேட் ஆகிடும் செம்ம மஜா

WhatsApp யில் இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நண்ம்பர்கள் மற்றும் உறவினர் உடன் சேட்டிங், வொயிஸ் மற்றும் வீடியோ காலிங் போன்ற பல வகையில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் WhatsApp நாளுக்கு நாள் பல புதிய அம்சங்கள் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் நமக்கே தெரியாமல் இருக்கும் அந்த 7 ரகசிய அம்சங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் மேலும் நம்முள் WhatsApp பயன்படுத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் மேலும் அவை என்ன என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

1.WhatsApp Disappearing Messages செட் செய்வது எப்படி?

நீங்கள் எந்த ஒரு மெசேஜும் எப்பொழுதும் சேட் Save ஆகாமல் இருக்க வேண்டும் என எண்ணினால் , WhatsApp யின் Disappearing Messages அம்சம் மிக சிறப்பாக வேலை செய்யும். இதன் கீழ் மெசேஜ் 24 மணி நேரம், 7 நாட்கள், 90 நாட்கள் என்ற ஆப்ஷன் வரும் இதன் மூலம் நீங்கள் செட் செய்த நாட்களுக்கு பிறகு தானாகவே மெசேஜ் காணமல் போகும். இந்த அம்சத்தின் கீழ் சேட் அல்லது க்ரூப் திறந்து மேலே இருக்கும் Disappearing Messages தட்டி ட்யூரேஷன் செட் செய்யலாம்.

2. குறிப்பிட்ட சேட்டை லோக் செய்ய Chat Lock அம்சம்.

WhatsApp யில் நீங்கள் மறைக்க நினைக்கும் அந்த குறிப்பிட்ட மெசேஜை மட்டும் லோக் செய்ய விரும்புவோருக்கு WhatsApp யின் Chat Lock அம்சம் மிகவும் சிறப்பனதாக இருக்கும், அதாவது முழு WhatsApp ஆப்பை லோக் செய்யாமல் , நீங்கள் மறைக்க நினைக்கும் அந்த குறிப்பிட்டதை மட்டும் Chat Lock செய்யலாம். நீங்கள் WhatsApp யில் லோக் செய்ய விரும்பும் நீங்கள் லோக் செய்ய விரும்பும் நபர் அல்லது க்ரூப் சேட்டை திறந்து அதில் Chat Lock என்ற ஆப்ஷனை தட்டி லோக் செய்யலாம்.

3.அனுப்பிய மெசேஜை எடிட் செய்யும் அம்சம்.

சில நேரங்களில், அவசரமாக ஒரு மெசேஜை அனுப்பும்போது, ​​நாம் டைப்பிங் பிழை செய்கிறோம் அல்லது சில முக்கியமான தகவல்களைத் தவறவிடுகிறோம். அத்தகைய சூழ்நிலையில், மெசேஜை நீக்கிவிட்டு மீண்டும் அனுப்புவதற்குப் பதிலாக, நாம் 'திருத்து' (Edit) அம்சத்தைப் பயன்படுத்தலாம். இதற்காக, அனுப்பப்பட்ட மெசேஜை நீண்ட நேரம் அழுத்திப் பிடித்து, 'திருத்து' (Edit) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். ஆண்ட்ராய்டில், தேவைப்பட்டால், இந்த விருப்பத்தை மூன்று-புள்ளி மெனுவில் காணலாம். மெசேஜை திருத்திய பிறகு, மறுமுனையில் இருப்பவர் அதில் 'திருத்தப்பட்டது' (Edited) என்ற லேபிளைக் காண்பார், ஆனால் அவர்களால் அசல் மெசெஜின் டெக்ஸ்ட்டை பார்க்க முடியாது. இருப்பினும், இந்த விருப்பம் மெசேஜை அனுப்பிய பிறகு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே கிடைக்கும்.

4. ஒவ்வொரு சேட்டுக்கு ஒவ்வொரு நோட்டிபிகேஷன் சவுண்ட்.

WhatsApp யில் வரும் அணைத்து மெசேஜும் நோட்டிபிகேஷன் சவுண்ட்ம் ஒரே மாதுரியாக வந்தால், அதில் முக்கியமானது மற்றும் சாதரணமானது எது என்பதை பற்றி கண்டறிவது கடினமாகிறது எனவே நீங்கள் உங்கள் தேவைக்கு ஏற்ப மெசேஜ் நோட்டிபிகேஷன் சவுண்ட் செட் செய்யலாம். இதற்க்கு நீங்கள் சேட்டை திறந்து பெயரை தட்டவும் மற்றும் அதில் Notifications அல்லது Notification tone ஆப்ஷன் வரும், இப்பொழுது உங்களுக்கு பிடிதமானவுருக்கு ஒரு சேட் டோன், முக்கியமானவர்கள் மற்றும் க்ரூப், ஆபிஸ் போன்றவைகளுக்கு ஒரு சேட் டோன் செட் செய்யலாம்.

5. தனக்கு தானே சேட் அனுப்பும் அம்சம்.

WhatsApp-ஐ மற்றவர்களுடன் தொடர்புகொள்வதற்கு மட்டுமின்றி, குறிப்புகளைச் சேமித்து வைக்கவும் நினைவூட்டல்களை உருவாக்கவும் பயன்படுத்தலாம். இந்தச் செயலியில் உங்களுக்கு நீங்களே செய்திகளை அனுப்பிக்கொள்ளும் வசதி உள்ளது. இதைச் செய்ய, புதிய உரையாடலைத் தொடங்கி, உங்கள் பெயர் அல்லது தொலைபேசி எண்ணுடன் தொடர்புடைய தொடர்பைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு, முக்கியமான தகவல்கள், ஷாப்பிங் பட்டியல்கள், இணைய இணைப்புகள், புகைப்படங்கள் அல்லது குரல் குறிப்புகளை உங்களுக்கு நீங்களே அனுப்பி வைத்துக்கொள்ளலாம். பயணத்தின்போதும் கூட, முக்கியமான விஷயங்களை ஓரிடத்தில் சேமித்து வைத்துக்கொள்ள இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

6. Status Hide அம்சம்.

WhatsApp-இல் நீங்கள் எப்போது ஆன்லைனில் இருக்கிறீர்கள் அல்லது கடைசியாக எப்போது ஆப்பை பயன்படுத்தினீர்கள் என்பதை உங்கள் காண்டேக்டில் உள்ள அனைவரும் பார்ப்பதை நீங்கள் விரும்பவில்லை என்றால், உங்கள் ப்ரைவசி செட்டிங்க்ஸ் (privacy settings) மாற்றியமைக்கலாம். இதைச் செய்ய, 'செட்டிங்கில்' (Settings) பகுதிக்குச் சென்று, 'ப்ரைவசி ' (Privacy) என்பதைத் தேர்ந்தெடுத்து, 'கடைசியாகப் பார்த்தது மற்றும் ஆன்லைன்' (Last seen and online) என்ற விருப்பத்தைத் திறக்கவும். இங்கே, 'எனது தொடர்புகள் (இவர்களைத் தவிர…)' (My contacts except…) என்ற விருப்பத்தைப் பயன்படுத்தி, இந்தத் தகவலை மறைக்க விரும்பும் குறிப்பிட்ட நபர்களைத் தேர்ந்தெடுக்கலாம். இதே போன்ற நடைமுறையைப் பின்பற்றி, உங்கள் ஆன்லைன் ஸ்டேட்டஸ் (online status) தொடர்பான செட்டிங்களை நீங்கள் மாற்றியமைக்க முடியும்.

7.WhatsApp pinned மெசேஜ்

நீங்கள் ஒரு மெசேஜை முன்னாடி வைக்க விரும்பினால் pinned messages அம்சம் மூலம் மெசேஜை பின் செய்ய முடியும் இதன் மூலம் உங்களின் மெசேஜ் குறிப்பிட்ட நேரம் நாள் வரை Pin செய்து வைக்கலாம் அது 24 மணி நேரம், 7 நாட்கள் அல்லது 30 நாட்கள் வரை மெசேஜை pin செய்யலாம்

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile

Recommended Articles