CMF Phone 2 Pro இந்த தேதியில் அதிரடியாக அறிமுகமாகும் என உருதி எப்போன்னு பாருங்க
Nothing அதன் புதிய அடுத்த பட்ஜெட் போன் அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது அது CMF Phone 2 Pro ஆகும்,
இந்த போன் ஏப்ரல் 28 அன்று அறிமுகம் செய்யப்படும் ப்ளிப்கார்டில் டீஸ் செய்யப்பட்டுள்ளது
CMF போன் 2 ப்ரோ இந்தியாவில் ரூ.20,000 க்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்தப்படும்
Nothing அதன் புதிய அடுத்த பட்ஜெட் போன் அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது அது CMF Phone 2 Pro ஆகும், மேலும் இந்த போன் ஏப்ரல் 28 அன்று அறிமுகம் செய்யப்படும் ப்ளிப்கார்டில் டீஸ் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த போனில் MediaTek Dimensity 7300 Pro ப்ரோசெசர் வழங்கப்படும் மேலும் இந்த போனின் அறிமுகத்திற்கு முன்னதாகவே பல தகவல் லீக் செய்யப்பட்டுள்ளது அவை என்ன என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
SurveyCMF Phone 2 Pro லீக் விலை தகவல்
Nothing யின் இந்த போனின் விலை பற்றி டிப்ஸ்டர் கூறும்போது டிப்ஸ்டர் யோகேஷ் பிராட் தனது X பக்கத்தில் CMF போன் 2 ப்ரோ இந்தியாவில் ரூ.20,000 க்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று பதிவிட்டுள்ளார் . நாம் இங்கே அடிப்படை அல்லது ஹை எண்டு வகைகளைப் பற்றிப் பேசவில்லை. இருப்பினும், சில அம்சங்கள் வெளியிட்டுள்ளது.
CMF Phone 2 Pro
— Yogesh Brar (@heyitsyogesh) April 19, 2025
– 6.7" AMOLED FHD+, 120Hz
– MediaTek Dimensity 7300 Pro
– 50MP + 8MP UW + 50MP 2x Tele
– 5,000mAh battery
– Android 15, Nothing OS
sub Rs 20k pricing
CMF Phone 2 Pro அறிமுக தகவல்
மேலும் இதை பற்றி டீசர் போட்டோ ப்ளிப்கார்டில் வெளியிடப்பட்டுள்ளது அதில் CMF Phone 2 Pro-விற்கான Flipkart ஹோம் பக்கம் சமீபத்தில் லைவ் வெளியிடப்பட்டது, இதில் போனை க்ரே நிறத்திலும் CMF-ன் தனிச்சிறப்பு ஆரஞ்சு நிற விருப்பங்களிலும் இரட்டை- பின்புற டிசைன் காட்டப்பட்டது. மேலும் இந்த போன் நீக்கக்கூடிய பின்புற பேனலுடன் வரும் என்பதைக் குறிக்கிறது. இது CMF ஃபோன் 1 ஐப் போலவே லேன்யார்டு அல்லது கார்டு ஹோல்டர் போன்ற கனேக்சங்களை அனுமதிக்கும் ஒரு துணைப் புள்ளியைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. மேலும் அதில் இந்த போன ஏப்ரல் 28,2025 மாலை 6:30மணிக்கு அறிமுகமாகும் என டீஸ் செய்யப்பட்டுள்ளது.

CMF Phone 2 Pro லீக் அம்சம்.
மேலும் இதன் டிப்ஸ்டரின் கூற்றுப்படி, CMF போன் 2 ப்ரோவில் 6.7-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும், இது 120Hz வரை ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது . நாம் குறிப்பிட்டது போல, இது MediaTek Dimensity 7300 Pro சிப்செட் மூலம் இயக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த போனில் 50-மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா செட்டிங் கொண்டிருக்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மற்ற இரண்டு கேமராக்கள் 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 50-மெகாபிக்சல் 2X டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகும். மேலும் இதில் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே உடன் வரும்.
இந்த போனில் 5,000mAh பேட்டரி பொருத்தப்படலாம் மற்றும் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ்ஸில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க 7,300mAh பேட்டரியுடன் Vivo இந்தியாவில் புதிய ஸ்லிம்மான போன் அறிமுகம் செய்தது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile