7,300mAh பேட்டரியுடன் Vivo இந்தியாவில் புதிய ஸ்லிம்மான போன் அறிமுகம் செய்தது
Vivo அதன் Vivo T4 5G இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது
இந்த போனை Phantom Grey மற்றும் Emerald Blaze கலரில் வாங்கலாம்
பேங்க் ஆபருக்கு பிறகு இந்த போனின் ஆரம்ப விலை 19,999 ஆக இருக்கும்
சீனா ஸ்மார்ட்போன் நிறுவனமான Vivo அதன் Vivo T4 5G இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது இதில் ப்ரீமியம் டிசைன், மிக சிறந்த AMOLED டிஸ்ப்ளே உடன் இது 5000நிட்ஸ் ப்ரைட்னாஸ் இருக்கிறது இதனுடன் இதில் டுயல் கேமரா போன்ற பல சுவாரசிய அம்சங்கள் கொண்டுள்ளது மேலும் இந்த போனை Phantom Grey மற்றும் Emerald Blaze கலரில் வாங்கலாம் மேலும் இதன் விலை மற்றும் மற்ற சுவாரஸ்ய அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyVivo T4 5G யின் விலை மற்றும் ஆபர் விலை
Vivo T4 5G போன் மூன்று ஸ்டோரேஜ் மாடலில் வருகிறது அவை 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை வகையின் Vivo T4 5G விலை ரூ.21,999 யில் தொடங்குகிறது. 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட மிடரேன்ஞ் வகையின் விலை ரூ.23,999, 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட உயர்நிலை வகையின் விலை ரூ.25,999. இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 29 முதல் விற்பனைக்கு வரும். HDFC வங்கி, SBI பேங்க் மற்றும் Axis பேங்க் கார்ட்களில் பயன்படுத்தி வாங்கினால் கஸ்டமர்கள் ரூ.2,000 இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம். அதாவது பேங்க் ஆபருக்கு பிறகு இந்த போனின் ஆரம்ப விலை 19,999 ஆக இருக்கும் , கஸ்டமர்கள் ரூ.2,000 எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் 6 மாத நோ கோஸ்ட் EMI-நன்மையும் பெறலாம்.

Vivo T4 5G சிறப்பம்சம்
Vivo T4 5G அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 6.77-இன்ச் முழு -HD+ AMOLED குவாட்கர்வ்ட் பேணல் உடன் வருகிறது, மேலும் இதில் 120hz ரெப்ராஸ் ரேட்டுடன் இதில் 5,000நிட்ஸ் ப்ரைட்னாஸ் உடன் வருகிறது. இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் இந்த ஸ்மார்ட்போனில் 4 nm ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 7s ஜெனரல் 3 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 15 ஐ அடிப்படையாகக் கொண்ட ஃபன்டச் OS 15 யில் இயங்குகிறது.
VivoT4 5G யின் கேமரா பற்றி பேசுகையில் இதில் இரட்டை பின்புற கேமரா ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) சப்போர்ட் மற்றும் f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. இது தவிர, 2 மெகாபிக்சல் கேமரா f/2.4 அப்ரட்ஜருடன் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு இதன் முன்பக்கத்தில் 32 MP மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

T4 5G இன் 7,300 mAh பேட்டரி 90 W வயர்டு ஃபிளாஷ்சார்ஜ் மற்றும் ரிவர்ஸ் மற்றும் பைபாஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் செக்யுரிட்டிக்காக இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது.
கனேக்டிவிட்டிக்காக,இதில் இது 4G, 5G, Wi-Fi, Bluetooth, GPS மற்றும் USB Type-C போர்ட் விருப்பங்களைக் கொண்டுள்ளது. மேலும் இது 0.789CM இருக்கிறது.
இதையும் படிங்க:7000mah பேட்டரியுடன் Oppo யின் புதிய போன் அறிமுகம், மேலும் இதில் பல ஆபர் சலுகையுடன் இந்த தேதியில் விற்பனை
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile