Microsoft யில் பெரிய கோளாறு Email முதல் எந்த சேவையையும் பயன்படுத்த முடியவில்லை என புகார்
வியாழக்கிழமை மைக்ரோசாஃப்ட் அவுட்லுக் (Microsoft Outlook) சேவையில் ஏற்பட்ட மிகப்பெரிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பல்லாயிரக்கணக்கான பயனர்களால் தங்களது ஈமெயில்களை அணுக முடியவில்லை. சேவையை மீண்டும் சீரமைக்கவும், பாதிப்புகளைக் குறைக்கவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தீவிரமாகப் வேலை செய்து வருகிறது.
சேவை முடக்கம் குறித்த தகவல்களைக் கண்காணிக்கும் Downdetector இணையதளத்தின் தரவுகளின்படி, அமெரிக்க கிழக்கு நேரப்படி பிற்பகல் 1 மணிக்குப் பிறகு (இந்திய நேரப்படி இரவு 11.30 மணியளவில்), சுமார் 1.30 லட்சம் பயனர்கள் அவுட்லுக் சேவையில் பிரச்சினை இருப்பதாகப் புகார் தெரிவித்தனர்.
அதன்பிறகு புகார்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்தது. அமெரிக்க கிழக்கு நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் (இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணியளவில்), சுமார் 60,000 பயனர்கள் தொடர்ந்து சேவை பாதிப்பைச் சந்தித்து வருவதாகத் தெரிவித்தனர்.
ஆரம்பத்தில், அமெரிக்கக் கண்டப் பகுதிகளில் அவுட்லுக் சேவையில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் குறித்த புகார்களை ஆய்வு செய்து வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்தது. பின்னர், இந்தத் தொழில்நுட்பக் கோளாறு அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள மைக்ரோசாஃப்ட் 365 (Microsoft 365) சேவையின் இணைப்பைப் பாதிக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தியது.
மைக்ரோசாஃப்ட் 365 (Microsoft 365) என்பது அந்நிறுவனத்தின் கிளவுட் அடிப்படையிலான சப்ஸ்கிறிப்பிஷன் சேவையாகும். இதில் அவுட்லுக் (Outlook), மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் (Microsoft Teams) உள்ளிட்ட பல்வேறு ஆப்கள் இடம்பெற்றுள்ளன.