டிசம்பர் 1-க்குள் LPG e-KYC செய்யவில்லை என்றால் சப்சிடி வராது வீட்டிலிருந்து எப்படி செய்வது?

நாடு முழுவதும் சமையல் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் கஸ்டமர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக் அதேன்டிகேஷன் (e-KYC) முக்கிய அப்டேட் கொண்டு வந்துள்ளது. தற்பொழுது LPG சிலிண்டரில் சப்சிடி சப்சிடி விலையில் வீட்டு உபயோக சமையல் கேஸ் (LPG) சிலிண்டர்களைப் பெறுவதற்கு, பயோமெட்ரிக் அங்கீகாரம் (biometric authentication) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை அக்டோபர் 1, 2026 முதல் அமலில் உள்ளது. எனவே, இதுவரை இ-கேஒய்சி (e-KYC) நடைமுறையை முடிக்காத கஸ்டமர்கள், டிசம்பர் மாதத்தில் சிலிண்டர் புக்கிங் செய்வதற்கு முன்பாக அதனைப் பூர்த்தி செய்ய வேண்டும் டிசம்பர் ௧-க்கு பிறகு பிரச்னை வரலாம். ஏற்கனவே பயோமெட்ரிக் அதேண்டிகேஷன் முடித்தவர்கள், மீண்டும் இந்தச் LPG e-KYC செய்வது எப்படி?
LPG சப்சிடிக்கு பயோமெட்ரிக் இ-கேஒய்சி ஏன் அவசியம்?
பெட்ரோலியம் மற்றும் நேஜுரல் கேஸ் அமைச்சகத்தின்படி, ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரத்தின் மூலம் உண்மையான கஸ்டமர்களுக்கு LPG கனெக்ஷன் வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது சப்சிடி முறைகேடு, மோசடி மற்றும் போலி கனேக்ஷங்களை தடுக்க உதவும். உண்மையான கஸ்டமர்ர்களுக்கு கேஸ் சிலிடர் டெலிவரி மறுப்பது தங்களின் நோக்கம் அல்ல என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் விதிகள்: சப்சிடியுடன் நிர்ணயிக்கப்பட்ட விலையில் வீட்டு உபயோக LPG நிரப்பலை புக்கிங் செய்ய, பயோமெட்ரிக் அங்கீகாரம் கட்டாயமாகும்.
ஏற்கனவே e-KYC செய்தவர்களுக்கு நிவாரணம்: வெரிபிகேஷன் செயல்முறையை நிறைவு செய்த கஸ்டமர்கள், அதனை மீண்டும் செய்யத் தேவையில்லை.
(e-KYC) இல்லாமல் என்ன நடக்கும்: வெரிபிகேஷன் முழுமையாக முடிந்த பின்னரே, சப்சிடி விலையில் கேஸ் நிரப்புவதற்கான புக்கிங்கள் சாத்தியமாகும். அங்கீகாரம் இல்லாமல், கஸ்டமர்கள் அந்தந்த நிறுவனத்தின் விதிகளின்படி சந்தை விலையில் LPG வாங்கிக்கொள்ளலாம்.
மொபைலைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தே LPG e-KYC செய்வது எப்படி?
இன்டேன், பாரத் கேஸ் மற்றும் HP கேஸ் வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தி இ-கேஒய்சி (e-KYC) செய்யலாம். அவர்கள் அந்தந்த எரிவாயு நிறுவனத்தின் செயலியையும் ஆதார் ஃபேஸ்ஆர்டி (Aadhaar FaceRD) செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
ஸ்டேப் 1: உங்கள் LPG கனெக்ஷன் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆப்பை டவுன்லோட் செய்யவும். இன்டேன் வாடிக்கையாளர்கள் இந்தியன்ஆயில் ஒன் (IndianOil ONE), பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் ஹலோபிபிசிஎல் (HelloBPCL), மற்றும் ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் ஹெச்பி பே (HP PAY) ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
ஸ்டேப் 2: உங்கள் ஸ்மார்ட்போனில் ஆதார் ஃபேஸ்ஆர்டி (Aadhaar FaceRD) செயலியை நிறுவவும். இந்தச் செயலி ஆதார் அடிப்படையிலான முக அங்கீகாரத்திற்கு உதவுகிறது.
ஸ்டேப் 3: சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனத்தின் செயலியில் உள்நுழைந்து, இ-கேஒய்சி-ஐ (e-KYC) பூர்த்தி செய்யவும். அல்லது ஆதார் அங்கீகாரம் தொடர்பான விருப்பத்தைத் தேடவும்
ஸ்டேப் 4: ஆதார் அடிப்படையிலான பேஸ் அதேடிகேஷன் செயல்முறையை நிறைவு செய்ய, ஸ்க்ரீனில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றவும். உங்கள் பேஸ் கேமராவின் முன் வைத்து, ஆப்யின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
ஸ்டேப் 5: வெரிபிகேஷன் முடிந்ததும், செயலியில் அல்லது உங்கள் கேஸ் டெலிவரி செய்பவரின் நிலையை உறுதிப்படுத்தவும்.
கேஸ் சிலிண்டர் டெலிவரி போதும் நீங்கள் இ-கேஒய்சி செய்து கொள்ளலாம்.
கஸ்டமர்களால் மொபைல் மூலம் இ-கேஒய்சி (e-KYC) செயல்முறையை முடிக்க முடியாவிட்டால், அவர்களுக்கு வேறு வழிகள் உள்ளன. சிலிண்டர் பிசனசின் போது, டெலிவரி முகவரிடம் பயோமெட்ரிக் அதேன்டிகேஷன் அவர்கள் மேற்கொள்ளலாம். மாற்றாக, அவர்கள் தங்கள் LPG டெலிவரி அலுவலகத்திற்குச் சென்றும் இந்தச் செயல்முறையை முடிக்கலாம். LPG தொடர்பான உதவிக்கு, கஸ்டமர்கள் 1800 2333 555 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
எனவே, இதுவரை எல்பிஜி பயோமெட்ரிக் இ-கேஒய்சி செய்யாத கஸ்டமர்ர்கள், சப்சிடியுடன் கேஸ் நிரப்புதலை புக்கிங் செய்வதில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாத வகையில், தங்களின் அங்கீகார நிலையைச் சரிபார்த்து அந்தச் செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும்.
Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.
View full profile