115-இன்ச் கொண்ட Vu Mini LED Smart TV அறிமுகம், இது இருந்தால் நீங்கள் தியேட்டர் போக வேண்டாம் வீடு தியேட்டர் ஆகிவிடும்

Highlights

Vu நிறுவனம் சமீபத்தில் இந்தியச் சந்தையில் 100 இன்ச் QLED ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது

(Masterpiece AEye TV) சீரிஸ் கீழ் 115 இன்ச் மினி-LED (MiniLED) ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது

இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ₹13 லட்சம் ஆகும்

Vu நிறுவனம் சமீபத்தில் இந்தியச் சந்தையில் 100 இன்ச் QLED ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவைச் சேர்ந்த இந்நிறுவனம், தனது 'அல்ட்ரா லார்ஜ்' (Ultra Large) சீரிச்ன் ஒரு பகுதியாக இந்த ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியது. தற்போது, ​​'மாஸ்டர்பீஸ் ஏ-ஐ டிவி' (Masterpiece AEye TV) சீரிஸ் கீழ் 115 இன்ச் மினி-LED (MiniLED) ஸ்மார்ட் டிவியை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ₹13 லட்சம் ஆகும்.மேலும் இதன் முழு தகவல் பார்க்கலாம் வாங்க.

Vu Masterpiece AEye TV சீரிஸ் யின் விலை

இந்தத் தொடரில், நிறுவனம் 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச், 85 இன்ச், 98 இன்ச் மற்றும் 115 இன்ச் அளவிலான மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை ₹75,000 ஆகும். இந்தத் சீரிஸ் உள்ள மற்ற மாடல்களின் விலைகள் முறையே ரூ,95,000, ரூ,1,30,000, ரூ,1,75,000, ரூ,2,95,000 மற்றும் ரூ,13,00,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த ஸ்மார்ட் டிவியை இன்று, நவம்பர் 12 முதல் ஆன்லைனிலும் ஆஃப்லைன் கடைகளிலும் வாங்கலாம்.

Vu Masterpiece AEye TV sirappmsam.

Vu-வின் புதிய Masterpiece AEye TV சீரிசானது , 100% BT.2020 கலர் ரேஞ்சை கொண்ட RBG மினி LED பேனலைப் பயன்படுத்துகிறது. இதன் 55-இன்ச் முதல் 98-இன்ச் வரையிலான மாடல்களின் டிஸ்ப்ளேயின் ஹை ப்ரைட்னஸ் 2500 நிட்ஸ் வரை உள்ளது. அதேசமயம், 115-இன்ச் மாடலின் ஹை ப்ரைட்னஸ் 3,000 நிட்ஸ் வரை உள்ளது. இதில் 2000 மண்டலங்கள் வரையிலான லோக்கல் டிம்மிங் வசதி உள்ளது. 115-இன்ச் மாடலில் 2696 மண்டலங்களுக்கான லோக்கல் டிம்மிங் ஆதரவு உள்ளது. நிறுவனம் இதில் அலுமினிய அலாய் பாடியைப் பயன்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவி சீரிசானது 288Hz ஃப்ளூயிட் மோஷன் மற்றும் ஹைப்பர் மோஷன் AI இன்ஜின்களால் இயக்கப்படுகிறது. 55-இன்ச் முதல் 98-இன்ச் வரையிலான மாடல்களில், நான்கு ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு பின்புற வூஃபர்களுடன் கூடிய 110W VuFX சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. 115-இன்ச் மாடலில், எட்டு ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு பின்புற சப்வூஃபர்களுடன் கூடிய 240W 10-டிரைவர் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இதில் டாப், சைட் மற்றும் டவுன்-ஃபயரிங் டிரைவர்கள் உள்ளன.

இந்த Vu ஸ்மார்ட் டிவி சீரிஸ் Dolby Atmos சப்போர்ட் செய்கிறது மற்றும் டால்பி AC-4 கான்வேர்செஷன் மேம்படுத்தியைக் கொண்டுள்ளது. இது கூகுள் டிவி இயங்குதளத்தில் இயங்குகிறது, மேலும் கூகுள் ஜெமினி AI-ஐயும் சப்போர்ட் செய்கிறது. இது 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது இரண்டு புளூடூத் வாய்ஸ் ரிமோட்டுகளையும் சப்போர்ட் செய்கிறது .

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile

Recommended Articles