TCL புதிய 4K AI ஸ்மார்ட் மாடல் டிவிகள் அறிமுகம், ரூபாய் 27,990 ஆரம்பம்.

TCL  புதிய 4K  AI  ஸ்மார்ட் மாடல் டிவிகள்  அறிமுகம், ரூபாய்  27,990 ஆரம்பம்.

TCL . நிறுவனம் இந்தியாவில் புதிய 4K AI. ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய டி.வி.க்களில் ஃபிளாக்‌ஷிப் பி8எஸ் சீரிஸ், மிட்-ரேன்ஜ் p8E சீரிஸ் மற்றும் பட்ஜெட் ரக பி8 சீரிஸ் மாடல்கள் அடங்கும்.

புதிய TCL  டி.வி.க்கள்  .HDR 10 வசதி, மைக்ரோ டிம்மிங் உள்ளிட்ட தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. மேலும் இதில் ஆண்ட்ராய்டு பை சார்ந்த மென்பொருள் கொண்டிருக்கின்றன. இத்துடன் ஏ.ஐ. சார்ந்த அம்சங்கள், வாய்ஸ் இன்டராக்‌ஷன், ஏ.ஐ. பிக்சர் என்ஜின், ஸ்மார்ட் சவுண்ட் என்ஜின் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. 

உயர் ரக டி.சி.எல். பி9எஸ் சீரிஸ் 65 இன்ச் மற்றும் 55 இன்ச் வேரியண்ட்கள் ரூ. 44,990 விலையில் துவங்குகிறது. டி.சி.எல். பி8இ சீரிஸ் 43, 50 மற்றும் 55 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. இதன் 55 இன்ச் டி.சி.எல். பி8இ ஸ்மார்ட் ஏ.ஐ. டிவி. கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த டி.வி.க்களில் யூடியூப் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் டி.சி.எல். ஒப்பந்த அடிப்படையில் ஹாட்ஸ்டார், வூட், ஆல்ட்பாலாஜி மற்றும் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகிறது.புதிய டி.வி.க்களின் இமேஜ் மற்றும் சவுண்ட் அவுட்புட் மேம்படுத்தும் விதமாக இதில் ஏ.ஐ. ஃபார்ஃபீல்டு தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. 

TCL. P8 சீரிஸ் டி.வி.-க்கள் 43, 50 மற்றும் 55 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 27,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo