5,000mAh பேட்டரியுடன் Itel யின் புதிய 4G போன் அறிமுகம் விலை அம்சங்கள் பாருங்க
Itel இன்று அதன் Itel A100 4G புதிய போனை அறிமுகம் செய்தது, மேலும் இது லேட்டஸ்ட் 4G போன் ஆகும் இந்த போன் பார்க்க OnePlus 13s போன்ற டிசைன் கொண்டிருக்கும், மேலும் இந்த போனில் மிலிட்டரி கிரேட் ட்யூரேபிளிட்டி MIL-STD-810H சர்டிபைட் கொண்டுள்ளது மற்றும் 5,000mAh பேட்டரி கொண்டிருக்கும் மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
SurveyItel A100 4G விலை தகவல்
இந்தியாவில் Itel A100 4G ஸ்மார்ட்போனின் விலை 3GB RAM மற்றும் 64GB சேமிப்பு வசதியுடன் ரூ.6,799 இல் தொடங்குகிறது. மேலும், 4GB RAM உடன் ரூ.7,499 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சில்க் கிரீன், ப்யூர் பிளாக் மற்றும் டைட்டானியம் கோல்ட் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
Itel A100 4G சிறப்பம்சம்
Itel A100 4G போனில் 6.6-inch (720 x 1,612) பிக்ஸல் ரேசளுசன் வழங்கப்படுகிறது HD+ IPS LCD ஸ்க்ரீன் உடன் 90Hz ரெப்ரஸ் ரேட் 269PPI பிக்சல் டென்சிட்டி உடன் இந்த போனில் octa-core UniSoC T7100 சிப்செட் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் 4GB யின் ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் இதன் ரேமை அதிகரிக்க முடியும்.
இதையும் படிங்க: நீண்ட நாள் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த Samsung Galaxy F70e 5G போன் அறிமுகம் விலை அம்சங்கள் பாருங்க
கேமரா பொறுத்தவரை, Itel A100 4G ஸ்மார்ட்போனில் LED ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக இது 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமராவைக் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் 4G LTE, ப்ளூடூத், Wi-Fi, GPS, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், ஒரு IR பிளாஸ்டர் மற்றும் ஒரு USB டைப்-C போர்ட் ஆகியவை அடங்கும்.
இதில் கடைசியாக Itel A100 4G பேட்டரி பற்றி பேசுகையில் 5,000mAh பேட்டரியுடன் 10W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர இதில் IPX4 ஸ்ப்லாஷ் ரெசிஸ்டன்ட் MIL-STD-810H மிலிட்டரி சர்டிபிகேஷன் சப்போர்ட் வழங்குகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile