ஆப்பிளின் முதல் போல்டபில் Apple iPhone Duo போனின் விற்பனை ஆரம்பம் பேங்க் ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம்

ஆப்பிளின் முதல் போல்டபில் Apple iPhone Duo போனின் விற்பனை ஆரம்பம் பேங்க் ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம்

ஆப்பிளின் முதல் போல்டபில் போனின் Apple iPhone Duo விற்பனை ஆரம்பாமகியது இந்த போனின் விற்பனையானது இன்று காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது இந்த போனை அதன் அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் அமேசானில் லைவ் செய்யப்பட்டுள்ளது இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Apple iPhone Duo பேங்க் ஆபர் மற்றும் நன்மை

iPhone Duo யின் அறிமுக விலையை பற்றி பேசும்போது இதன் . 256GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ,2,99,900, அதன் 512GB ஸ்டோரேஜ் ரூ,3,24,900, இதன் 1TB: ரூ,3,74,900 மற்றும் 2TB: ரூ,4,49,900 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது

பேங்க் ஆபர் நன்மை.

ஆப்பிள் நிறுவனம், பங்கேற்கும் வங்கிகள் மூலம் ஐபோன் டியோவிற்கு ஆறு மாதங்கள் வரை வட்டியில்லா EMI வசதியை வழங்குகிறது. தகுதியான அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் ICICI பேங்க் கார்ட் களைப் பயன்படுத்தும் கஸ்டமர்கள் ரூ.7,000 வரை உடனடி கேஷ்பேக்கையும் பெறலாம்.

ஆப்பிளின் டிரேட்-இன் திட்டத்தின் மூலம், தகுதியான போனை எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது வாங்குபவர்கள் ரூ. 81,500 வரை டிஸ்கவுண்ட்பெறலாம். எக்ஸ்சேஞ்ச் செய்யப்படும் சாதனத்தின் சரியான மதிப்பு, அதன் மாடல் மற்றும் நிலையைப் பொறுத்து மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளவும். மேலும், இந்தத் தொழில்நுட்ப ஜாம்பவான், போனை வாங்குவதன் மூலம் ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் டிவி+ மற்றும் ஆப்பிள் ஆர்கேட் ஆகியவற்றிற்கான மூன்று மாத இலவசஅக்சசையும் வழங்குகிறது.

iPhone Duo சிறப்பம்சம்.

iPhone Duo யில் 7.6-இன்ச் கொண்ட சூப்பர் ரெட்டினா XDR இன்டெர்னல் ஸ்க்ரீன் , 5.4-இன்ச் கவர் ஸ்க்ரீன் இடம்பெற்றுள்ளன. இரண்டு ஸ்க்ரீன்களும் புரோமோஷன், ஆல்வேஸ்-ஆன் செயல்பாடு மற்றும் 3,000 நிட்ஸ் வரையிலான ஹை ப்ரைட்னாஸ வழங்குகிறது. மேலும் இந்த போனில் மடிப்புகளை அவ்வளவாகத் தெரியாமல் செய்யவும் ஆப்பிள் நிறுவனம் இன்டெர்னல் ஸ்க்ரீனில் நானோ-டெக்ஸ்சர் பினிஷ் ஒன்றைச் சேர்த்துள்ளது.

போட்டோ எடுப்பதற்காக, ஐபோன் டியோவில் சென்சார்-ஷிஃப்ட் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 2x ஆப்டிகல் தர ஜூம் கொண்ட 48-மெகாபிக்சல் ஃப்யூஷன் ப்ரைம் கேமராவும், அதனுடன் 48-மெகாபிக்சல் ஃப்யூஷன் அல்ட்ரா வைட் கேமராவும் இடம்பெற்றுள்ளன. இது டால்பி விஷனில் 120fps ஸ்பீடில் 4K வீடியோவைப் ரெக்கார்டிங் செய்யும் பவர் கொண்டது. இதன் போல்டபில் டிசைன், டியோ பிரிவியூ, ஸ்மார்ட் டேக் மற்றும் டூயல் கேப்சர் போன்ற அம்சங்களையும் செயல்படுத்துகிறது.

இதன் உள்ளே, ஆறு கோர் சிபியு, ஏழு கோர் ஜிபியு மற்றும் இரட்டை 16 கோர் நியூரல் இன்ஜின் கொண்ட 2 நானோமீட்டர் A20 ப்ரோ சிப் உள்ளது. ஐபோன் 17 ப்ரோவை விட 35 சதவீதம் வரை சிறந்த தொடர்ச்சியான பர்போமான்ஸ் வழங்குவதாக ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது. இந்த போனில் இன்டெர்னல் ஸ்க்ரீன் 31 மணிநேரம் வரையிலும், வெளிப்புறத் ஸ்க்ரீனை பயன்படுத்தி 44 மணிநேரம் வரையிலும் வீடியோவை இயக்கும் பவர் கொண்டது.

இதையும் படிங்க200MP கேமரா உடன் Oppo Find X10 மற்றும் Find X10 Pro Max அறிமுகம் விலை மற்ற சுவாரஸ்ய அம்சங்கள் பாருங்க

இந்த ஃபோன் கிரேடு 5 டைட்டானியத்தால் ஆனது மற்றும் செராமிக் ஷீல்டு பாதுகாப்பைப் பயன்படுத்துகிறது, மேலும் இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்டிர்க்காக IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. ஃபேஸ் ஐடிக்கு பதிலாக, டச் ஐடி சிட் பட்டனில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, அதே சமயம், ஃபோனைத் திறப்பதற்கும் மூடுவதற்குமான இயக்கத்தைக் கட்டுப்படுத்த அதன் கீழ் 100க்கும் மேற்பட்ட பாகங்களைப் பயன்படுத்துகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile