Jio அம்பானி அசத்தல் கம்மி விலையில் AI மற்றும் OTT நன்மை இது தான் இருப்பதிலே சூப்பர்

HIGHLIGHTS

Jio அதன் கஸ்டமர்களுக்கு மிக குறைந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் OTT மற்றும் AI நன்மை கொண்ட திட்டத்தை வழங்குகிறது

இந்த திட்டத்தின் ஆரம்பத்தின் விலை ரூ,189 ஆகும்

அதில் ரூ,189 ரூ,799 மற்றும் ரூ,355 போன்ற திட்டங்கள் இருக்கிறது

Jio அம்பானி அசத்தல் கம்மி விலையில் AI மற்றும் OTT நன்மை இது தான் இருப்பதிலே சூப்பர்

Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு மிக குறைந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் OTT மற்றும் AI நன்மை கொண்ட திட்டத்தை வழங்குகிறது இந்த திட்டத்தின் ஆரம்பத்தின் விலை ரூ,189 ஆகும் இந்த திட்டத்தில் வொயிஸ் காலிங், டேட்டா போன்ற பல நன்மை இருக்கிறது இந்த திட்டத்தில் ஒரு மூன்று திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம் அதில் ரூ,189 ரூ,799 மற்றும் ரூ,355 போன்ற திட்டங்கள் இருக்கிறது இதில் JioTV, JioAICloud மற்றும் ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட பேக்கில் Google Gemini Pro போன்ற ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் போன்ற அம்சங்கள் வழங்குகிறது

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio ரூ.189 திட்டம் நன்மை

ரூ.189 திட்டம் மிகவும் குறைந்த விலை பிரிவில் ஜியோவின் அடிப்படை சலுகைகளில் ஒன்றாகும். இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், 300 SMS மற்றும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, இது 28 நாட்களுக்கு வேலிடிட்டி ஆகியவை வழங்குகிறது. அதிவேக டேட்டா லிமிட் தீர்ந்தவுடன், இதன் ஸ்பீட் 64 Kbps ஆகக் குறைகிறது. என்டர்டைமென்ட் மற்றும் ஸ்டோரேஜ் பயனர்கள் ஜியோடிவி மற்றும் ஜியோஏஐகிளவுடை அக்சஸ் வழங்குகிறது. இந்த திட்டத்தின் பயனுள்ள தினசரி செலவு ஒரு நாளைக்கு சுமார் ரூ.6.75 ஆகும்.

ஜியோ ஃப்ரீடம் திட்டம்

Jioரூ.355 திட்டம்

ஜியோ ரூ.355 திட்டம் 30 நாட்கள் ஃப்ரீடம் திட்டம் அன்லிமிடெட் கால்கள் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 30 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது இதை தகவிர இதில் 25 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதன் முக்கிய நன்மைகளுக்கு அப்பால், இந்த திட்டம் ஜியோவின் சிறப்பு சலுகை திட்டத்தின் கீழ் வருகிறது, இது கூடுதல் டிஜிட்டல் சலுகைகளை வழங்குகிறது:

  • புதிய பயனர்களுக்கு ஜியோஹோம் 2 மாத இலவச ட்ரையல்
  • ஜியோஹாட்ஸ்டார் மொபைல்/டிவி சந்தா 3 மாதங்கள்.
  • இலவச 50 ஜிபி ஜியோஏஐகிளவுட் ஸ்டோரேஜ்
  • கூகிள் ஜெமினி சலுகை: 18 முதல் 25 வயதுடைய பயனர்களுக்கு ஆரம்ப அக்சஸ்.
  • ரூ.35,100 மதிப்புள்ள 18 மாத கூகிள் ஜெமினி ப்ரோ திட்டம் இலவசம்.

இருப்பினும், ஜெமினி ப்ரோ சலுகைகளைத் தொடர்ந்து அனுபவிக்க, சலுகை காலம் முழுவதும் பயனர்கள் ரூ.349 அல்லது அதற்கு மேற்பட்ட விலையில் அன்லிமிடெட் 5G திட்டத்தில் இருக்க வேண்டும் என்று ஜியோ தெளிவுபடுத்துகிறது.

Jio ரூ.799 திட்டம் 84 நாட்கள்

அதிக நாள் வேலிடிட்டியை விரும்பும் கஸ்டமர்களுக்கு, ஜியோ ரூ.799 திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம் இதில் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இதில் அன்லிமிடெட் வொயிஸ் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா (மொத்தம் 126 ஜிபி) ஆகியவை அடங்கும். தினசரி டேட்டா லிமிட் முடிந்த பிறகு, இதன் ஸ்பீட் 64 கேபிபிஎஸ் ஆகக் குறைக்கப்படுகிறது. ஜியோவின் டிஜிட்டல் தளங்களில் குறைந்த விலையில் கிடைக்கும் பேக்காக வகைப்படுத்தப்பட்டுள்ள இது, ஜியோடிவி மற்றும் ஜியோஏஐகிளவுட் அக்சஸ் ஒருங்கிணைக்கிறது.

இதையும் படிங்க:Vodafone Idea இந்த ரூ,16 அதிகம் இருந்தும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது கூடுதல் நன்மை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo