Motorola Signature 27 டஃப் கொடுக்க வரும் Google Pixel 11 Pro XL இந்த இரு போனுக்கு இருக்கும் வித்தியாசம் என்ன ?
Motorola உலகளவில் அதன் Motorola Signature 27 போனை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்க்கு சரியான போட்டியை தரும் வகையில் Google Pixel 11 Pro XL போனை இறக்கியுள்ளது இப்பொழுது இந்த இரு போனில் இருக்கும் டிஸ்ப்ளே, கேமரா, பேட்டரி மற்றும் இப்பொழுது Motorola Signature 27 மற்றும் Google Pixel 11 Pro XL போனில் இருக்கும் வித்தியாசம் என்ன.
Motorola Signature 27 VS Google Pixel 11 Pro XL விலை
Motorola Signature 27 போனின் உலகவிய விலை USD 1,599 ஆகும் இது இந்திய விலையின் படி (ரூ,1,51,090) இருக்கும். Google Pixel 11 Pro XL போனின் விலை ரூ,1,34,999 ஆகும்.
Motorola Signature 27 VS Google Pixel 11 Pro XL டிஸ்ப்ளே:-
மோட்டோரோலா சிக்னேச்சர் 27, 2772×1272 பிக்சல்கள் ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 12,000 நிட்ஸ் வரையிலான ஹை ப்ரைட்னஸ் உடன் கூடிய 6.78-இன்ச் 1.5K எக்ஸ்ட்ரீம் AMOLED டியோ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
அதுவே கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL, 1344x2992 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட பெரிய 6.8-இன்ச் சூப்பர் ஆக்டுவா LTPO OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இருப்பினும், இது அதே 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3600 நிட்ஸ் வரையிலான அதிக ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது.
Motorola Signature 27 VS Google Pixel 11 Pro XL ப்ரோசெசர் மற்றும் ஒப்பரேட்டிங் சிஸ்டம்:-
Motorola Signature 27 போனில் , குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் எக்ஸ்ட்ரீம் ஜென் 6 செயலியால் இயக்கப்படுகிறது. இதன் இயங்குதளம் ஆண்ட்ராய்டு 17-இல் இயங்குகிறது.
மறுபக்கம் . கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL, நிறுவனத்தின் சொந்த கூகுள் டென்சர் G6 ப்ரோசெசர் இயக்கப்படுகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 17-இல் இயங்குகிறது.
Motorola Signature 27 VS Google Pixel 11 Pro XL கேமரா அமைப்பு:-
மோட்டோரோலா சிக்னேச்சர் 27-ல், OIS ஆதரவுடன் கூடிய 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவை உள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 50 மெகாபிக்சல் முன்புற கேமரா உள்ளது.
இது தவிர, கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ல், 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 48 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை உள்ளன. செல்ஃபிகளுக்காக 42 மெகாபிக்சல் முன்புற கேமரா உள்ளது.
Motorola Signature 27 VS Google Pixel 11 Pro XLபேட்டரி:-
மோட்டோரோலா சிக்னேச்சர் 27, 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரியைக் கொண்டுள்ளது.
இதன் மறுபக்கம் கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் சற்றே சிறிய 5,115mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
