Karbonn Rebel Pro vs Vivo T5e:இந்த இரண்டு பட்ஜெட் ப்ரெண்ட்லி செக்மண்டில் எது பெஸ்ட்?

Karbonn இந்திய சந்தையில் நேற்று அதன் Karbonn Rebel சீரிஸ் அறிமுகம் செய்தது. இந்த சீரிஸ் கீழ் Karbonn Rebel Pro மற்றும் Karbonn Rebel ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கொண்டு வரப்பட்டது இப்பொழுது இந்த இரு போனின் மிக சிறந்த டஃப் கொடுக்க Vivo T5e ஸ்மார்ட்போன் வந்துள்ளது இப்பொழுது Karbonn Rebel Pro matrum Vivo T5e இந்த இரு போனின் டிஸ்ப்ளே, கேமரா, ப்ரோசெசர், மற்றும் பேட்டரி போன்றவற்றை ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
Karbonn Rebel Pro vs Vivo T5e: விலை தகவல்.
Karbonn Rebel Pro போனின் 4GB+128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ,11,499க்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதுவே இதன் மறுபக்கம் Vivo T5e யின் 4GB+64GB வகையின் விலை ரூ,13,999 ஆகா இருக்கிறது.
Karbonn Rebel Pro vs Vivo T5e:டிஸ்ப்ளே
Karbonn Rebel Pro, 6.7-இன்ச் HD+ டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 720 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் சப்போர்ட் செய்கிறது. விவோ T5e மாடலில், 720x1600 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.74-இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது.
Karbonn Rebel Pro vs Vivo T5e: ப்ரோசெசர் மற்றும் ஒப்பரேட்டிங் சிஸ்டம்
கார்பன் ரெபெல் ப்ரோ, மீடியாடெக் ஹீலியோ G81 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 16 பிளாட்பார்மில் இயங்குகிறது.. அதுவே விவோ T5e, ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆரிஜின்ஓஎஸ் 6-இல் இயங்குகிறது மற்றும் ஆக்டா-கோர் யூனிசாக் T7225 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது.
Karbonn Rebel Pro vs Vivo T5e கேமரா அமைப்பு
கார்பன் ரெபெல் ப்ரோவில் 64 மெகாபிக்சல் AI பின்புற கேமரா உள்ளது. அதே சமயம், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 16 மெகாபிக்சல் முன்புற கேமரா வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் விவோ T5e-யில் பின்புறத்தில் f/2 அபெர்ச்சர் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா உள்ளது. இந்த ஃபோனில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக f/2.2 அபெர்ச்சர் கொண்ட 5 மெகாபிக்சல் முன்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க EPFO யின் WhatsApp சேவை அறிமுகம் பேலன்ஸ் முதல் கடைசி ஐந்து
Karbonn Rebel Pro vs Vivo T5e: பேட்டரி பேக்கப்
கார்பன் ரெபெல் ப்ரோ, 20W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,000mAh பேட்டரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. . விவோ டி5இ, 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 5,500mAh பேட்டரியுடன் வருகிறது.
