Digit.in

Jio-யின் இந்த ஒரே ஒரு திட்டத்தை ரீச்சார்ஜ் செய்தால் போதும் 3 வருஷம் நோ டென்ஷன் காலிங், டேட்டா நன்மை பல

Highlights

Jio ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் 3 வருஷம் வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது

இந்த திட்டத்தின் விலை ரூ, 10,000 யில் வருகிறது

இந்த திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா நன்மையுடன் இதில் அன்லிமிடெட் 5G நன்மை

Jio-யின் இந்த ஒரே ஒரு திட்டத்தை ரீச்சார்ஜ் செய்தால் போதும் 3 வருஷம் நோ டென்ஷன்  காலிங், டேட்டா நன்மை பல

இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio, அதன் கஸ்டமர்களுக்கு ஒரே ஒரு முறை ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் 3 வருஷம் வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ, 10,000 யில் வருகிறது மேலும் இது வரை எந்த டெலிகாம் நிறுவனமும் 3 வருட வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வர வில்லை மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா நன்மையுடன் இதில் அன்லிமிடெட் 5G நன்மையும் வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் வரும் மற்ற நன்மைகள் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

Jio ரூ,10,000 திட்டம்.

இந்த ஜியோ திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் அதன் 3 வருட வேலிடிட்டி காலம் ஆகும். பொதுவாக, கஸ்டமர்கள் தங்கள் மொபைல் நம்பர்களைச் செயல்பாட்டில் வைத்திருக்கவும், டேட்டா மற்றும் காலிங் பலன்களைப் பெறவும் அவற்றை மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். இருப்பினும், இந்தத் திட்டத்தில், ரூ. 10,000 ஒருமுறை செலுத்துவதன் மூலம் 36 மாத வேலிடிட்டி காலத்தைப் பெறலாம்.

இந்த திட்டத்தின் நன்மைகள் என பார்த்தல் கஸ்டமர்களுக்கு இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்குடன், தினமும் 2.5GB அதிவேக டேட்டாவைப் வழங்கும் . வரம்பற்ற 5G டேட்டாவும் கிடைக்கிறது. இருப்பினும், தகுதியுள்ள கஸ்டமர்கள், 5G நெட்வொர்க் கிடைக்கும் தன்மை மற்றும் பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் அன்லிமிடெட் 5G டேட்டாவைப் பெறத் தகுதி பெறுவார்கள். இந்தத் திட்டத்தில் தினமும் 100 SMS மெசேஜ்கள் அடங்கும்.

என்டர்டைன்மென்ட் நன்மையும் உண்டு

ஜியோ இந்தத் திட்டத்தில் சில டிஜிட்டல் சேவைகளையும் சேர்த்துள்ளது. கஸ்டமர்கள் JioHotstar Mobile + Hollywood, Canva Pro Lite சப்ஸ்க்ரிப்ஷன் வழங்கப்படுகிறது, இதன் மூலம் அவர்கள் லைவ் ஸ்போர்ட்ஸ் மற்றும் பிரீமியம் என்டர்டைன்மென்ட் கன்டென்ட்களைக் காணலாம். கூடுதலாக, பிரீமியம் டெம்ப்ளேட்கள் மற்றும் டிசைன் டூல்களைப் பயன்படுத்த பயனர்களை அனுமதிக்கும் கேன்வா ப்ரோ லைட்-க்கான 12 மாத அக்சஸ் அவர்கள் பெறுவார்கள். போட்டோககள், வீடியோக்கள் மற்றும் பிற முக்கிய பைல்களைச் சேமிக்க 50ஜிபி ஜியோஏஐகிளவுட் ஸ்டோரேஜ் வழங்கப்படும்.

இந்த திட்டம் அனைவருக்கும் பயன்படுமா?

மேலும், மூன்று ஆண்டுகளுக்கான திட்டமாக இருந்தாலும், ரூ. 10,000 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்திற்குப் பணம் செலுத்தக்கூடியவர்கள் மிகச் சிலரே. போதுமான அளவு உபரி வருமானம் கொண்ட ஒரு குறிப்பிட்ட சதவீத மக்கள் மட்டுமே இதைச் செய்ய முடியும். இந்தத் திட்டம் 2026-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி முதல் பயனர்களுக்குக் கிடைக்கும். இதனை MyJio ஆப், Jio.com, ரீடைலர் விற்பனை நிலையங்கள், Jio ஸ்டோர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற Jio ரீசார்ஜ் தளங்கள் வாயிலாகப் பெற்றுக்கொள்ளலாம்.

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile