BSNL
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு 4G VoLTE மற்றும் அதன் டெக்நோலாஜி சேவையை மேம்படுத்து வகையில் குறைந்த விலையில் வொயிஸ் சென்ட்ரிக் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இதில் ஒரு திட்டத்தின் விலை ரூ,99 மற்றும் ஒரு திட்டத்தின் விலை ரூ,439 ஆகும் இந்த திட்டத்தின் விவரங்கள் பார்க்கலாம் வாங்க.
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டத்தின் விலை ரூ,99 ஆகும், இது ஒரு வொயிஸ் சென்ட்ரிக் ப்ரீபெய்ட் திட்டம் ஆகும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், லோக்கல் மற்றும் நேஷனல் ரோமிங் கால் வசதி வழங்குகிறது. இந்த திட்டமானது டெல்லி மற்றும் மும்பை வட்டாரங்களிலும் அன்லிமிடெட் டேட்டா நன்மை கிடைக்கும் மேலும் இதில் இதை தவிர 50MB டேட்டா கிடைக்கும் ஆனால் டேட்டா முடிடிதது இதன் ஸ்பீட் to 40 kbps இருக்கும் மற்றும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் இருக்கும்.
பிஎஸ்என்எல் யின் ரூ,439 திட்டமானது வொயிஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டமாகும் இந்த திட்டத்தின் நன்மை என்ன வென்றால் இந்த திட்டத்தின் கீழ் அணைத்து நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் (Local/STD) போன்ற சேவை கிடைக்கும் இதனுடன் இந்த திட்டத்தில் நேஷனல் ரோமிங் சேவையும் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த திட்டத்தில் 300 SMS.மற்றும் 80 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
இதையும் படிங்க பக்கா மாஸ் காட்டும் Airtel தினமும் 2.5GB டேட்டாவுடன் சூப்பர் திட்டம் ரூ,399 யிலிருந்து ஆரம்பம்
முதன்மையாக வாய்ஸ் காலிங் தேவைப்படும் மற்றும் குறைந்தபட்ச டேட்டா தேவைகளைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்காக, BSNL தற்போது இந்த இரண்டு விருப்பங்களை வழங்குகிறது. செப்டம்பர் 12, 2026 வரை செல்லுபடியாகும் ‘ஃப்ரீடம் 2.0’ சலுகையின் கீழ் நீங்கள் BSNL-க்கு மாறி, ஒரு ரூபாய்க்கு சிம் பெற்றிருந்தால் , ஆரம்ப 24-நாள் செல்லுபடியாகும் காலம் முடிந்தவுடன் இந்தத் திட்டங்களைப் பரிசீலிக்கலாம்.