மாஸ் காட்டும் Jio 1 திட்டத்தை ரீச்சார்ஜ் செய்தால், மற்றோன்று Free அது எப்படி பெறுவது? யாருக்கு கிடைக்கும்

HIGHLIGHTS

Jio கஸ்டமர்களுக்கு இது மிக சிறந்த திட்டமாக இருக்கும்

இந்த திட்டத்தின் கீழ் Buy One Get One என்ற பெயரின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டமானது ஒரு சில தேர்ந்து எடுக்கப்பட்ட கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும்

இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Relience Jio கஸ்டமர்களுக்கு மிக சிறந்த திட்டமாக இருக்கும். ஆனால் இந்த திட்டத்தின் கீழ் ஒரு ரீச்சார்ஜ் திட்டத்தை ரீச்சார்ஜ் செய்தால் மற்றொரு திட்டத்தை இலவசமாக பெற முடியும். நிறுவனம் இந்த திட்டத்தின் கீழ் Buy One Get One என்ற பெயரின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் எக்ஸ்ட்ரா கூடுதல் கட்டணம் இல்லாமல் இந்த நன்மையை பெறலாம். இருப்பினும் இந்த திட்டமானது ஒரு சில தேர்ந்து எடுக்கப்பட்ட கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும் அது யாருக்கு என பார்க்கலாம் வாங்க.

Jio ஒரு திட்டம் ரீச்சார்ஜ் செய்தால் மற்றொன்று இலவச.

கிடைத்த தகவல்களின்படி, இந்த ஜியோ சலுகையானது ரூ.299 மற்றும் ரூ.349 விலையுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் கிடைக்கிறது. இருப்பினும், கஸ்டமர்கள் நிறுவனம் அனுப்பிய மெசேஜில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஜியோவின் ரூ.299 திட்டம், 28 நாட்களுக்கு தினமும் 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS மெசேஜ்களைகளை வழங்குகிறது. ரூ.349 திட்டம், 28 நாட்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது.

இந்த திட்டத்தின் நன்மை எந்த கஸ்டமருக்கு கிடைக்கும்.

ஜியோவின் இந்த திட்டமானது அனைத்து கஸ்டமர்களுக்கும் கிடைக்காது, இந்த திட்டமானது Buy One Get One கால் அல்லது SMS கிடைத்துள்ளதோ அந்த கச்டமருக்கே கிடைக்கும்.

உங்களுக்கு அதுபோன்ற எந்த கால் அல்லது மெசேஜ் கிடைக்கவில்லை என்றால் 299ருபாய் அல்லது 349ருபாய் ரீச்சார்ஜ் திட்டம் இலவசமாக கிடைக்கும் என்பது கேரண்டி இல்லை, மேலும் நிறுவனத்தின் இந்த திட்டம் லிமிடெட் ஆகும்.

இந்த திட்டத்தின் நன்மை எப்படி கிடைக்கும்?

இந்தச் சலுகை குறித்து ஜியோவிடமிருந்து உங்களுக்குச் மெசேஜ் வந்திருந்தால், முதலில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விலை மற்றும் விதிமுறைகளைக் கவனமாகப் படியுங்கள். பிறகு, MyJio ஆப்க்குச் சென்று, சலுகையின் விவரங்களையும் உங்கள் நம்பருக்கான பொருத்தமான ரீசார்ஜ் திட்டத்தையும் சரிபார்க்கவும்.

தகுதி இருந்தால், மெசேஜ் குறிப்பிடப்பட்டுள்ள திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்யவும். அறிக்கைகளின்படி, முதல் மாதத்திலிருந்தே உங்களுக்கு இந்தப் பலன் கிடைக்காது; மாறாக, உங்கள் முதல் ரீசார்ஜின் வேலிடிட்டி காலம் முடிந்த பிறகுதான், கூடுதலாக ஒரு மாத சேவையைப் பெற முடியும். ரீசார்ஜ் செய்த பிறகு, MyJio ஆப்யில் வவுச்சர் அல்லது சலுகையின் ஸ்டேட்டஸ் தவறாமல் சரிபார்க்கவும்.

இதையும் படிங்க கலக்கும் BSNL ரூ,350க்கும் குறைந்த விலையில் 300GB டேட்டா, காலிங் போன்ற பல நன்மை

ரீச்சார்ஜ் செய்யுமுன் கவனிக்க வேண்டிய விஷயம்.

ரீச்சார்ஜ் செய்வதற்கு முன் இந்த திட்டம் இப்பொழுது செயலில் இருக்கிறதா, இல்லையா என்பதை சரி பார்ப்பது அவசியமாகும், ஏன் என்றால் இந்த திட்டம் ஒரு லிமிடெட் வேலிடிட்டி திட்டமாகும். மேலும் இந்த திட்டத்தை பற்றி தகவல் அதிகாரபூர்வ வெப்சைட் அல்லது ஆப் யில் சரி பார்க்க வேந்தும் தப்பி தவறி கூட எந்த லிங்க் அல்லது OTP போன்றவற்றை சேர் செய்ய கூடாது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :