Sim binding
மெசேஜிங் தளமான WhatsApp மற்றும் Telegram ஏக்டிவ் சிம் கார்ட் இல்லாமல் ஜனவரி 1,2027 முதல் வேலை செய்யாது டெலிகம்யூனிகேஷன் துறையின் (DoT) படி சிம் இணைப்பு (sim Binding) கட்டயமாக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் அனைத்து மெசேஜிங் தளங்களும் டிசம்பர் 31, 2026க்குள் தனது யூசர் அக்கவுண்ட் உடன் லைவ் சிம்மை லிங்க் செய்து இருக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் ரெஜிஸ்டர் சிம்முடன் லிங்க் செய்யப்படாத மெசேஜிங் தளம் ஏதும் வேலை செய்யது. இதன் முழு விவரம் பார்க்கலாம் வாங்க.
அரசின் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்க முக்கிய காரணம் எல்லை மீறி சைபர் மோசடிகள் நாளிக்கு நாள் அதிகம், அதிகரிப்பதே முதல் காரணமாகும். இதில் சைபர் மோசடி, டிஜிட்டல் மோசடி, மற்றும் ஃபிஷிங் போன்றவை இந்திய மொபைல் நம்பர்கள் பயன்படுத்தி அதிகம் நடை பெறுகிறது. இதன் காரணமாக டெலிகாம் பாதுகாப்பை வலுப்படுத்த இந்த நடவடிக்க எடுக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் சில ஆப் தொடர்பான சேவைகள் இந்திய மொபைல் நம்பர் மூலம் பயனர்களை சிம் கார்ட் இல்லாதபோதும் மெசேஜ்,, காலிங் போன்றவை செய்ய அனுமதிக்கிறது என்பதி DOT சுட்டி காட்டியது. இதன் மூலம் பல மடங்கு எளிதாக மோசடி நடைபெறுவதாக கூறியுள்ளது மற்றும் இதில் பல வெளிநாட்டு நபர்களும் இந்திய நம்பரை பயன்படுத்தி மோசடி நடத்துவதாக கூறப்படுகிறது.
டெலிகாம் சைபர் செக்யூரிட்டியின் (TCS) கீழ் 2024 கீழ் பாதுகாப்பு விதி வெளியிடப்பட்டது மற்றும் அதில் WhatsApp உட்பட டெலிக்ராம், snapChat, Arattai, Sharechat, Jiochat மற்றும் Signals போன்ற சேவைகள் தங்களின் அக்கவுண்ட் உடன்ரெஜிஸ்டர் சிம்மை லிங்க் செய்து இருக்க வேண்டும் என கூறியது. மேலும் அதன் வெப் வெர்ஷனுக்கு ஒவ்வொரு ஆறு மானி நேரத்திற்கும் லோக் செய்யப்பட வேண்டும் மற்றும் அதை செயல்படுத்த QR கோட் மூலம் மீண்டும் வெரிபை செய்து லோகின் செய்யவும்.
இதையும் படிங்க SBI டேட்டா தகவல் லீக் எப்படி நடந்தது இதிலிருந்து தன்னை பாதுகாத்து கொள்வது எப்படி?
ரெஜிஸ்ட்டர் செய்யப்பட்ட சிம் கார்டு இல்லாமல், டிவைஸ்களில் வைஃபை மூலம் மெசேஜிங் செயலிகளைப் பயன்படுத்துபவர்களையும், பல சாதனங்களில் கணக்குகளை இயக்குபவர்கள் அல்லது அடிக்கடி சிம் கார்டுகளை மாற்றுபவர்களையும் இந்த மாற்றம் பாதிக்கக்கூடும்இந்தப் புதிய தேவைக்கு இணங்க, ஒரு ஐபோன் பிசிக்கல் சிம் கார்டு இல்லாமல் இயங்கும்போது அதைக் கண்டறிய உதவும் ஒரு iOS சாப்ட்வேர் திருத்தத்தை ஆப்பிள் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் சிக்னல் இது தொடர்பான எந்த வித விக்கதையும் தெரிவிக்கவில்லை என அரசு கூறுகிறது.