Gmail VS Zoho Mail
Email என்பது மக்களின் தினசரி அன்றாட வாழ்கையில் முக்கியமாக இருக்கிறது. கூகுளின் Gmail மக்கள் அதிகபடியாக பயன்படுத்தும் ஒன்றாகவும் இருக்கிறது. மேலும் இதை பயன்படுத்துவது எளிதாகவும் இருக்கிறது, ஆனால் இதன் மறுபக்கம் Zoho நிறுவனத்தின் Zoho Mail இந்தியாவின் சொந்த பிளாட்பாரம் ஆகும் மேலும் இப்பொழுது Gmail உடன் ஒப்பிடும்போது Zoho Mail என்ன என்ன அம்சம் இருக்கிறது Gmail லிருந்து Zoho Mail ஏன் மாற வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க?
Gmail யில் பல பயனுள்ள அம்சம் இருந்தாலும், இதில் இருக்கும் குறைபாடு என பார்க்கும்போது பல விளம்பரங்கள் வருகிறது, இதனுடன் இதில் இது கூகுளின் விரிவான சூழல் அமைப்போடு நெருங்கிய தொடர்புடையது. மேலும் ஈமெயில் ஸ்பேம் மற்றும் விளம்பரம் போன்ற ஈமெயில் மூலம் அடிகடி சுத்தம் செய்யவேண்டி இருக்கிறது. மற்றவர்கள் தனியுரிமை குறித்துக் கவலைப்படுகிறார்கள்; எனவே, விளம்பர நோக்கங்களுக்காகச் மேசெஜ்களை ஸ்கேன் செய்யாத ஈமெயில் சேவையையே அவர்கள் விரும்புகிறார்கள்.
ஆனால் Zoho மெயிலில் விளம்பரம் இருக்காது இதன் காரணமாக ஈமெயில் நிரம்பி வழியாது, எனவே அடிகடி ஸ்டோரேஜ் பிரச்சனை மற்றும் ஸ்பேம் ஈமெயில் போன்றவை வராது இது முக்கியமாக அதிகாரபூவமாக, பிஸ்னஸ் மற்றும் யார் ஒருவர் ஈமெயில் பாதுகாக்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு இது பெஸ்ட்டாக அமையும்.
Zoho Mail-மாறுவது மிகவும் சுலபமாகும்.
புதிய ஈமெயில்கள் எதையும் தவறவிடாமல் இருக்க, பயனர்கள் Gmail-லிருந்து Zoho Mail-க்கு ஈமெயில்களைத் தானாக அனுப்பி வைக்கும் (email forwarding) வசதியையும் செயல்படுத்திக்கொள்ளலாம்.
Gmail மற்றும் Zoho Mail இரண்டுமே பாப்புலரான பிளாட்பாரம் ஆகும். ஜிமெயில், ஆழமான மூன்றாம் தரப்பு ஒருங்கிணைப்புடன் கூடிய ஒரு பிரம்மாண்டமான உற்பத்தித்திறன் சூழலமைப்பில் கவனம் செலுத்துகிறது. ஆனால் Zoho Mail முதலில் ப்ரைவசியில் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறது.
Zoho Mail யில் Ad-Free அனுபவம் வழங்குகிறது மற்றும் இது முற்றிலும் இலவசம், இதன் மறுபக்கம் Gmail யில் விளம்பர (ad) சப்போர்ட் செய்கிறது விளம்பரங்களுக்காகச் மெசேஜ்களை ஸ்கேன் செய்கிறது; அதே சமயம், பேமன்ட் முறையிலான Google Workspace அக்கவுண்ட்களில் விளம்பரங்கள் இருக்காது.
இதையும் படிங்க: உங்கள் போன் சிறந்த ரகசிய ஸ்கேனர் எந்த ஆப்பையும் இன்ஸ்டால் செய்யாமல் இந்த 7 விஷயம் செய்யலாம்
ஜோஹோ மெயிலில் ( Zoho Mail) Custom Domain (Free Tier) கஸ்டம் டாமின் இலவசமாக வழங்கும், உதாரணமாக உங்கள் பெயருடன் சேர்த்து உங்கள் நிறுவனத்தின் பெயருடன்.com என குறிப்பிடப்படும் (e.g., name@yourcompany.com) அதும் நீங்கள் இலவசமாகவே பெறலாம், ஆனால் மறுபக்கம் Gmail யில் டொமின சேர்க்கப்படுவதில்லை மற்றும் இதில் எப்பொழுதும் @gmail.com மட்டுமே சேர்க்கப்படுகிறது.