கார் விலையில் iPhone Duo போன், நாளை அமேசானில் விற்பனை,ஆரம்ப மாடலின் விலையே 3 லட்சத்தை நெருங்குகிறது

HIGHLIGHTS

iPhone Duo வாங்க விரும்பினால் Amazon Great indian Festival sale குறைந்த விலையில் வாங்கலாம்

அக்டோபர் 23 அன்று காலை 8AMக்கு விற்பனைக்கு வருகிறது

ஆரம்ப மாடலான 256GB ஸ்டோரேஜ் மாடலை வெறும் ரூ,2,93,900க்கு வாங்கலாம்

நீங்கள் Apple யின் இந்த iPhone Duo வாங்க விரும்பினால் Amazon Great indian Festival sale மூலம் இந்த போன் நாளை அதாவது அக்டோபர் 23 அன்று காலை 8AMக்கு விற்பனைக்கு வருகிறது இந்த போனின் விலை சுமார் 3 லட்சத்தை நெருங்குகிறது, இந்த விலையில் நாம் ஒரு கார் வாங்கி விடலாம், இந்த போனின் விலை அதிகருக்கு காரணம் இது நிறுவனத்தின் முதல் போல்டபில் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த போனின் விலை மற்ற தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

iPhone Duo விலை மற்றும் ஆபர் தகவல்.

iPhone Duo யின் அறிமுக விலையோ கீழே கொடுக்கப்பட்ட விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

  • 256GB: ரூ,2,99,900
  • 512GB: ரூ,3,24,900
  • 1TB: ரூ,3,74,900
  • 2TB: ரூ,4,49,900
iPhone Duo sale

நீங்கள் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் கொஞ்சம் குறைந்த விலையில் வாங்க நினைத்தால் நாளை அக்டோபர் 23 அன்று காலை 8AMக்கு விற்பனைக்கு வருகிறது, நீங்கள் அங்கு பேங்க் ஆபருக்கு பிறகு இதன் ஆரம்ப மாடலான 256GB ஸ்டோரேஜ் மாடலை வெறும் ரூ,2,93,900க்கு வாங்கலாம் அதாவது இந்த போனில் பேங்க்ஆபரின் கீழ் ரூ,6000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் கேஷ்பேக் போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம்

iPhone Duo சிறப்பம்சம்.

iPhone Duo யில் 7.6-இன்ச் கொண்ட சூப்பர் ரெட்டினா XDR இன்டெர்னல் ஸ்க்ரீன் , 5.4-இன்ச் கவர் ஸ்க்ரீன் இடம்பெற்றுள்ளன. இரண்டு ஸ்க்ரீன்களும் புரோமோஷன், ஆல்வேஸ்-ஆன் செயல்பாடு மற்றும் 3,000 நிட்ஸ் வரையிலான ஹை ப்ரைட்னாஸ வழங்குகிறது. மேலும் இந்த போனில் மடிப்புகளை அவ்வளவாகத் தெரியாமல் செய்யவும் ஆப்பிள் நிறுவனம் இன்டெர்னல் ஸ்க்ரீனில் நானோ-டெக்ஸ்சர் பினிஷ் ஒன்றைச் சேர்த்துள்ளது.

போட்டோ எடுப்பதற்காக, ஐபோன் டியோவில் சென்சார்-ஷிஃப்ட் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 2x ஆப்டிகல் தர ஜூம் கொண்ட 48-மெகாபிக்சல் ஃப்யூஷன் ப்ரைம் கேமராவும், அதனுடன் 48-மெகாபிக்சல் ஃப்யூஷன் அல்ட்ரா வைட் கேமராவும் இடம்பெற்றுள்ளன. இது டால்பி விஷனில் 120fps ஸ்பீடில் 4K வீடியோவைப் ரெக்கார்டிங் செய்யும் பவர் கொண்டது. இதன் போல்டபில் டிசைன், டியோ பிரிவியூ, ஸ்மார்ட் டேக் மற்றும் டூயல் கேப்சர் போன்ற அம்சங்களையும் செயல்படுத்துகிறது.

இதன் உள்ளே, ஆறு கோர் சிபியு, ஏழு கோர் ஜிபியு மற்றும் இரட்டை 16 கோர் நியூரல் இன்ஜின் கொண்ட 2 நானோமீட்டர் A20 ப்ரோ சிப் உள்ளது. ஐபோன் 17 ப்ரோவை விட 35 சதவீதம் வரை சிறந்த தொடர்ச்சியான பர்போமான்ஸ் வழங்குவதாக ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது. இந்த போனில் இன்டெர்னல் ஸ்க்ரீன் 31 மணிநேரம் வரையிலும், வெளிப்புறத் ஸ்க்ரீனை பயன்படுத்தி 44 மணிநேரம் வரையிலும் வீடியோவை இயக்கும் பவர் கொண்டது.

இதையும் படிங்க பிளிப்கார்டின் மெகா உத்சவம் Nothing யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,4000 டிஸ்கவுண்ட்

இந்த ஃபோன் கிரேடு 5 டைட்டானியத்தால் ஆனது மற்றும் செராமிக் ஷீல்டு பாதுகாப்பைப் பயன்படுத்துகிறது, மேலும் இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்டிர்க்காக IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. ஃபேஸ் ஐடிக்கு பதிலாக, டச் ஐடி சிட் பட்டனில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, அதே சமயம், ஃபோனைத் திறப்பதற்கும் மூடுவதற்குமான இயக்கத்தைக் கட்டுப்படுத்த அதன் கீழ் 100க்கும் மேற்பட்ட பாகங்களைப் பயன்படுத்துகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :