Airtel ரூ,185 VS ரூ,199 எது பெஸ்ட்? ரூ,14 ஏன் அதிகம் அப்படி என்ன எக்ஸ்ட்ரா நன்மை வழங்குகிறது?

இந்தியாவில் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Airtel அதன் கஸ்டமர்களுக்கு ரூ,200க்குள் 2 திட்டங்களை கொண்டு வந்துள்ளது அதில் ஒன்றின் விலை ரூ,185 மற்றும் இதன் மற்றொரு திட்டத்தின் விலை ரூ,199 ஆகும். இந்த இரு திட்டத்தின் விலையில் ரூ,14 வித்தியாசம் இருக்கிறது இப்பொழுது இந்த திட்டத்தையும் ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் மற்றும் கூடுதலாக இந்த திட்டத்தில் என்ன நன்மை வழங்குகிறது என பார்க்கலாம் வாங்க.

Airtel ரூ,185 திட்டம்.

Airtel rs 185 plan

ஏர்டெலின் இந்த திட்டத்தின் விலை ரூ,185 யில் வருகிறது, மேலும் இந்த திட்டதிப் கீழ் வரும் புதிய வொயிஸ் காலிங் நன்மை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து நெட்வர்க் கீழ் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மை வழங்குகிறது, இதன் கீழ் லோக்கல், STD மற்றும் வொயிஸ் ரோமிங் போன்ற பல நன்மையை பெறலாம் மற்றும் இந்த திட்டத்தில் மொத்தம் 300 SMS நன்மையை வழங்குகிறது கூடுதல் நன்மையாக இதில் HelloTunes நன்மையும் வழங்கப்படுகிறது.

Airtel ரூ,199 திட்டம்.

Airtel rs 199

ஏர்டெல்லின் ரூ. 199 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி காலத்துடன் வருகிறது. இது அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் கால்களை வழங்குகிறது. கூடுதலாக, கஸ்டமர்களுக்கு முழு வேலிடிட்டி காலத்திற்கும் தினமும் 100 SMS மற்றும் மொத்தம் 2ஜிபி இன்டர்நெட் டேட்டா கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில், ரூ,4,000 விலையுள்ள ஏர்டெல் எக்ஸ்பிரஸ் பிரீமியத்திற்கான 12 மாத சப்ஸ்க்ரிப்ஷன் அடங்கும். மேலும், ஏர்டெல் சேஃப் நெட்வொர்க், எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே மற்றும் ஹலோடியூன்ஸ் போன்ற பலன்களும் வழங்கப்படுகின்றன.

இதையும் படிங்க கலக்கும் BSNL ரூ,350க்கும் குறைந்த விலையில் 300GB டேட்டா, காலிங் போன்ற பல நன்மை

இந்த இரு திட்டத்தில் எது பெஸ்ட்?

ஏர்டெல்லின் ரூ.185 மற்றும் ரூ.199 ரீசார்ஜ் திட்டங்களுக்கு இடையே ரூ.14 மட்டுமே வித்தியாசம் உள்ளது, ஆனால் இரண்டின் பலன்களும் வேறுபட்டவை. ஏர்டெல்லின் ரூ.185 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி காலம், அன்லிமிடெட் லோக்கல் , STD மற்றும் ரோமிங் கால்கள், மொத்தம் 300 SMS மற்றும் இலவச HelloTunes ஆகியவற்றை வழங்குகிறது, ஆனால் அது இணைய டேட்டாவை வழங்காது. அதேசமயம், ரூ.199 திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலம், அன்லிமிடெட் கால்கள், தினமும் 100 SMS, திட்டம் முழுவதும் மொத்தம் 2GB டேட்டா மற்றும் சில கூடுதல் டிஜிட்டல் பலன்களை வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :