OPPO Enco X4 with LHDC lossless premium audio features
Oppo நிறுவனம் Enco X4 ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்பட்ஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இயர்பட்ஸ்களில் 11mm டைனமிக் டிரைவர்கள் மற்றும் 6mm ட்வீட்டர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், இவை ஹை-ரெஸ் ஆடியோ வயர்லெஸ் மற்றும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) வசதிகளையும் சப்போர்ட் செய்கின்றன சார்ஜிங் கேஸுடன் சேர்த்து, இந்த TWS இயர்பட்ஸ் மொத்தம் 53 மணிநேரம் வரை பிளேபேக் வழங்கும்
Oppo Enco X4 இந்தியாவில் ரூ. 19,999 விலையில் , அரோரா வயலட் மற்றும் கிளேசியர் ஒயிட் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. முதல் விற்பனைச் சலுகையின் ஒரு பகுதியாக, வாங்குபவர்கள் இந்த இயர்பட்ஸை மாதம் ரூ. 1,667 என்ற தவணையில் இஎம்ஐ (EMI) மூலம் வாங்கிக்கொள்ளலாம்.
இவை தற்போது ஓப்போ இந்தியா வெப்சைட் மூலம் ரூ. 18,999 விலையில் முன்பதிவுக்குக் கிடைக்கின்றன , மேலும் விற்பனை அக்டோபர் 29 அன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Oppo Enco X4 இயர்பட்ஸ்களில் 11mm டைனமிக் வூஃபர்கள் மற்றும் 6mm ட்வீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை ஹை-ரெஸ் ஆடியோ வயர்லெஸ் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோவை ஆதரிக்கின்றன. மேலும், AAC, SBC, LHDC மற்றும் LC3 உள்ளிட்ட பல ஆடியோ கோடெக்குகளை இவை ஆதரிக்கின்றன. இந்த இயர்பட்ஸ்கள், டீப், மீடியம் மற்றும் லைட் மோட்கள், அத்துடன் டிரான்ஸ்பரன்சி மற்றும் அடாப்டிவ் மோட்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷனையும் வழங்குகின்றன. இந்த நாய்ஸ் கேன்சலேஷன், அன்றாட இரைச்சலில் 99.8 சதவீதம் வரை தடுக்கும் என்று ஓப்போ நிறுவனம் கூறுகிறது.
ஓப்போவின் Enco X4, கால்களுக்காக மூன்று சிலிக்கான் மைக்ரோஃபோன்கள் மற்றும் ஒரு VPU மைக்ரோஃபோன் உட்பட நான்கு மைக்ரோஃபோன்களைப் பயன்படுத்துகிறது. காலில் தெளிவை மேம்படுத்த உதவும் வகையில், இவை AI அடிப்படையிலான கால் நோய்ஸ் குறைப்பு வசதியையும் சப்போர்ட் செய்கிறது. கனெக்ஷன் வசதிக்காக, இந்த இயர்பட்ஸ் 10 மீட்டர் வரையிலான லிமிட்டுடன் புளூடூத் 6.1-சப்போர்ட் செய்கிறது, மேலும் ஒரே நேரத்தில் இரண்டு போன்களுடன் இணைக்க முடியும். இவை ஆண்ட்ராய்டு மற்றும் iOS போன்கள் இரண்டிற்கும் பொருந்தும் .
ஒவ்வொரு Enco X4 இயர்பட்டிலும் 65mAh பேட்டரி உள்ளது, அதே சமயம் சார்ஜிங் கேஸில் 576mAh பேட்டரி உள்ளது. ANC அணைக்கப்பட்ட நிலையில், AAC கோடெக்கைப் பயன்படுத்தும்போது, ஒருமுறை சார்ஜ் செய்தால் 13 மணிநேரம் வரையிலும், கேஸுடன் 53 மணிநேரம் வரையிலும் பிளேபேக் கிடைக்கும் என்று ஒப்போ கூறுகிறது. LHDC இயக்கப்பட்டிருக்கும்போது, இயர்பட்களில் பேட்டரி ஆயுள் 10 மணிநேரம் வரையிலும், கேஸுடன் 42 மணிநேரம் வரையிலும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சார்ஜிங் கேஸ் USB Type-C மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய இரண்டையும் ஆதரிக்கிறது. வயர்டு இணைப்பு மூலம் இயர்பட்களை சுமார் 55 நிமிடங்களிலும், கேஸை சுமார் 65 நிமிடங்களிலும் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என்று ஒப்போ கூறுகிறது.
ஒவ்வொரு இயர்பட்டும் 5.6 கிராம் எடை கொண்டதுடன், IP55 தூசி மற்றும் நீர் எதிர்ப்புத் திறனையும் கொண்டுள்ளது. அதே சமயம், சார்ஜிங் கேஸின் எடை 41.8 கிராம் ஆகும், இதனால் மொத்த எடை 53 கிராமாகிறது. இயர்பட்கள் 32.11 x 18.19 x 21.03 mm அளவிலும், கேஸ் 63.40 x 49.50 x 25.55 mm அளவிலும் உள்ளன.