பக்கா மாஸ் காட்டும் Airtel தினமும் 2.5GB டேட்டாவுடன் சூப்பர் திட்டம் ரூ,399 யிலிருந்து ஆரம்பம்
Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு தினமும் 2.5ஜிபி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, நீங்கள் தினமும் 2.5ஜிபி டேட்டாவை அனுபவிக்க விரும்பினால், ஏர்டெல்லின் புதிய திட்டங்கள் சிறந்த தேர்வுகளை வழங்குகின்றன. இந்நிறுவனம், வ வ்வேறு பட்ஜெட்டுகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்றவாறு மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர ரீசார்ஜ் பேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது . இந்தத் திட்டங்கள் வெறும் ரூ,399-யில் லிருந்து தொடங்குகின்றன
SurveyAirtel ரூ. 399 திட்டம்
மாதாந்திர ரீசார்ஜ்களை விரும்பும் கஸ்டமர்களுக்கு, ரூ. 399 திட்டம் ஒரு சிறந்த தேர்வாகும். இந்த பேக் முழு 28 நாட்கள் வேலிடிட்டி காலத்தை வழங்குகிறது. ஒரு நாளைக்கு 2.5GB அதிவேக டேட்டா வீதம், இது மொத்தம் 70GB டேட்டாவை வழங்குகிறது. மேலும், இது அன்லிமிடெட் லோக்கல் , STD மற்றும் ரோமிங் கால்களுடன் தினமும் 100 இலவச SMS மெசேஜ்களையும் வழங்குகிறது. ஏர்டெல்லின் 5G நெட்வொர்க் உள்ள பகுதிகளில் உள்ள தகுதியான பயனர்கள் அன்லிமிடெட் 5G டேட்டா சப்போர்ட்டை வழங்குகிறது . அதுமட்டுமின்றி, இதில் ஜியோஹாட்ஸ்டார் மொபைல், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே, ஹலோடியூன்ஸ் மற்றும் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் ஆகியவற்றிற்கான 28 நாள் சப்ஸ்க்ரிப்ஷன் அடங்கும்.
Airtel ரூ,1,199 காலாண்டுத் திட்டம்
அடிக்கடி ரீசார்ஜ் செய்வதைத் தவிர்க்க, ரூ. 1,199 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நல்ல தேர்வாகும். இந்த பேக் 84 நாட்கள் நீண்ட கால வேலிடிட்டியுடன் வருகிறது. இதன் கஸ்டமர்களுக்கு தினமும் 2.5GB அதிவேக டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS ஆகியவை கிடைக்கும். 5G வசதி உள்ள பகுதிகளில் டேட்டா வரலிமிட் ம்பு இல்லை. இந்தத் திட்டம் குறிப்பாக என்டர்டைன்மென்ட் பிரியர்களுக்கு முக்கியமானது, ஏனெனில் இது முழு 84 நாட்களுக்கும் அமேசான் பிரைம் லைட் இலவச சப்ஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது. தினசரி டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64Kbps ஆகக் குறைக்கப்படும்.
Airtel ரூ,3,999 வருடாந்திர ரீசார்ஜ் பேக்
ஆண்டு முழுவதும் கவலையின்றி பயன்படுத்தக்கூடிய திட்டத்தைத் தேடும் கஸ்டமர்களுக்கு , ஏர்டெல்லின் ரூ. 3,999 ஆண்டு ரீசார்ஜ் திட்டம் மிகவும் ஸ்டேண்டர்ட் தேர்வாகும். இந்த ஆண்டு பேக் 365 நாட்கள் வேலிடிட்டி காலத்தையும், தினமும் 2.5GB டேட்டாவையும் வழங்குகிறது. நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வைஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS ஆகியவை இந்தத் திட்டத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகின்றன. கூடுதலாக, பயனர்கள் 3 மாத ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது , இது ஆண்டு முழுவதும் அதிவேக டேட்டா மற்றும் என்டர்டைமென்ட் அனுபவிக்க உங்களை அனுமதிக்கிறது.
உங்கள் தேவைகளுக்கு எந்தத் திட்டம் சிறந்தது?
குறைந்த பட்ஜெட்டில் அதிக தினசரி டேட்டா மற்றும் இலவச OTT செயலிகளைப் பயன்படுத்த விரும்பினால், ரூ. 399 மாதாந்திரத் திட்டம் சிறந்ததாக இருக்கும். அமேசான் பிரைம் மற்றும் மூன்று மாதங்களுக்கு ரீசார்ஜ் இல்லாத அணுகலை நீங்கள் விரும்பினால், ரூ. 1,199 பேக் மிகவும் பொருத்தமானது. இருப்பினும், அடிக்கடி திட்டங்களை மாற்றுவதைத் தவிர்த்து, ஆண்டு முழுவதும் வரம்பற்ற 5G டேட்டா மற்றும் அழைப்புகளை அனுபவிக்க விரும்பும் பயனர்களுக்கு, ரூ. 3,999 ஆண்டுத் திட்டம் மிகவும் மலிவான மற்றும் வசதியான தேர்வாக அமைகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
