Oppo Find X10 vs Google Pixel 11 Pro XL: ரூ,1,30,000 பட்ஜெட்டில் வரும் இந்த இரண்டு போனில் எது எது பெஸ்ட்?

Oppo இந்திய சந்தையில் Oppo Find X10 சமிபத்தில் அறிமுகம் செய்தது. மேலும் இந்த போனுக்கு சரியாக போட்டியை தரும் வகையில் Google Pixel 11 Pro XL நாங்கள் தேர்ந்து எடுத்தோம் ஏன் என்றால் இந்த இரண்டு போனிலும் ஒரே மாதுரியான விலையில் இருக்கிறது. இப்பொழுது இந்த இரண்டு போனிலும் டிஸ்ப்ளே, ப்ரோசெசர், கேமரா மற்றும் பேட்டரி போன்றவற்றை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Oppo Find X10 vs Google Pixel 11 Pro XL: விலை

Oppo Find X10 இந்தியாவில் ரூ,1,39,999 (12ஜிபி+256ஜிபி வேரியன்ட்) மற்றும் ₹1,69,999 (12ஜிபி+512ஜிபி வேரியன்ட்) விலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் இந்திய சந்தையில் ₹1,34,999 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது .

Oppo Find X10 vs Google Pixel 11 Pro XL:டிஸ்ப்ளே

Oppo Find X10, 2768×1272 பிக்சல்கள் ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் கொண்ட 6.59-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL, 1344×2992 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட பெரிய 6.8-இன்ச் சூப்பர் ஆக்சுவ LTPO OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, ஆனால் அதே 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3600 நிட்ஸ் வரையிலான அதிக ஹை ப்ரைட்னஸ் உடன் வருகிறது.

Oppo Find X10 vs Google Pixel 11 Pro XL: ப்ரோசெசர்

Oppo Find X10, மீடியாடெக் டைமென்சிட்டி 9600M ப்ரோசெசர் இயக்கப்படுகிறது. இது கலர்ஓஎஸ் 17 இயங்குதளத்தில் இயங்குகிறது.

Google Pixel 11 Pro XL, நிறுவனத்தின் சொந்த கூகுள் டென்சர் ஜி6 செயலியால் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 17-இல் இயங்குகிறது.

Oppo Find X10 vs Google Pixel 11 Pro XL: கேமரா அமைப்பு

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10-ல், பின்புறத்தில் OIS ஆதரவுடன் கூடிய 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, OIS சப்போர்டுடன் கூடிய 200 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா ஆகியவை உள்ளன. மேலும், இதன் முன்புறத்தில் 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் உள்ளது.

கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல்-லும் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 48 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 48 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை உள்ளன. மேலும், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக இதில் 42 மெகாபிக்சல் முன்புற கேமராவும் உள்ளது.

Oppo Find X10 vs Google Pixel 11 Pro XL: பேட்டரி மற்றும் சார்ஜிங் சப்போர்ட்

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 8,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் சற்றே சிறிய 5,115mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:Samsung Galaxy F70 5G vs OnePlus N6: ரூ,20 ஆயிரம் பட்ஜெட் வரும் போனில் எது பெஸ்ட்

Oppo Find X10 vs Google Pixel 11 Pro XL:கனெக்ஷன்

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10, 5ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 6.2, யூஎஸ்பி டைப்-சி 3.2 ஜென் 1, என்எஃப்சி மற்றும் ஒரு ஐஆர் பிளாஸ்டர் ஆகியவற்றை ஆதரிக்கிறது.

கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல்-லும் 5ஜி, ப்ளூடூத் 6, வைஃபை 7, ஜிபிஎஸ், என்எஃப்சி, யுடபிள்யூபி, நேவிக் மற்றும் ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவை உள்ளன.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :