50MP கேமராவுடன் Samsung யின் புதிய போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க
Samsung இந்திய சந்தையில் அதன் Samsung Galaxy F16 5G போனை அறிமுகம் செய்தது,
புதிய Galaxy F16 5G ஆனது MediaTek Dimensity 6300 சிப்செட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது
இதன் விலை மற்றும் டாப் அம்சங்கள் பற்றி பாருங்க.
Samsung இந்திய சந்தையில் அதன் Samsung Galaxy F16 5G போனை அறிமுகம் செய்தது, புதிய Galaxy F16 5G ஆனது MediaTek Dimensity 6300 சிப்செட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 5,000mAh பேட்டரி மூலம் சப்போர்ட் செய்கிறது இதன் விலை மற்றும் டாப் அம்சங்கள் பற்றி பாருங்க.
SurveySamsung Galaxy F16 5G விலை தகவல் பாருங்க.
Samsung Galaxy F16 5Gயின் விலை அனைத்து சலுகைகளையும் சேர்த்து ரூ.11,499 யில் தொடங்குகிறது. இது மார்ச் 13 ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் நாட்டில் விற்பனைக்கு வரும் என்று Flipkart யின் விளம்பர பேனர் உறுதிப்படுத்தியுள்ளது. பிளிங் பிளாக், கிளாம் கிரீன் மற்றும் வைபிங் ப்ளூ நிறங்களில் இ-காமர்ஸ் தளம் மூலம் இந்த போன் வாங்கலாம்.

Samsung Galaxy F16 5G டாப் அம்சம்.
டிஸ்ப்ளே :-Samsung Galaxy F16 5G போனில் 6.7-inch AMOLED டிஸ்ப்ளே உடன் FHD+ (1080 x 2340 pixels) ரேசளுசன் கொண்டுள்ளது மேலும் இந்த போனில் 90Hz ரெப்ராஸ் ரேட் உடன் இந்த போனில் 800nits பீக் ப்ரைட்னாஸ் சப்போர்ட் வழங்குகிறது.
ப்ரோசெசர்:- Galaxy F16 5G போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில் MediaTek Dimensity 6300 SoC ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போன் 8GB of RAM மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது
சாப்ட்வேர் அப்டேட் : இந்த Samsung 5G போன் One UI 7 உடன் இணைந்து செயல்படும் சமீபத்திய Android 15 OS யில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனம் தனது புதிய மொபைலை 6 வது ஜெனரேசன் ஆண்ட்ராய்டு OS மேம்படுத்தலுடன் கொண்டு வந்துள்ளது, இது இனி ஆண்ட்ராய்டு 21 க்கு தயாராக உள்ளது. இது தவிர, இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் 6 வருட பாதுகாப்பு அப்டேட்களும் கிடைக்கின்றன.
கேமரா:- Galaxy F16 5G ஃபோன் போட்டோ எடுப்பதற்கு மூன்று பின்புற கேமராவை சப்போர்ட் செய்கிறது . அதன் பின் பேனலில் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் உள்ளது, இது 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவற்றுடன் கனேக்சனுடன் செயல்படுகிறது. இந்த 5ஜி ஃபோனில் செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்காக 13 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது.
பேட்டரி:- சாம்சங் கேலக்ஸி எஃப்16 5ஜி ஃபோனில் பவர் பேக்கப்பிற்காக வலுவான 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இந்த பெரிய பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய, இந்த ஸ்மார்ட்போனில் 25W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க iQOO Neo 10R அறிமுகம் கேமர்களுக்ககவே பார்த்து பார்த்து உருவாக்கப்பட்டுள்ளது டாப் அம்சங்கள் பார்த்தா அசந்து போவிங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile