OnePlus Nord 4 அறிமுக முன்பே தகவல் அம்பலமாகியது

OnePlus Nord 4 அறிமுக முன்பே தகவல் அம்பலமாகியது

OnePlus இந்தியாவில் நிறுவனம் Nord Series யின் புதிய ஸ்மார்ட்போன அறிமுகம் செய்வதற்க்கான தயார் வேகமாக நடந்து வருகிறது OnePlus Nord விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று நம்பப்படுகிறது, இருப்பினும் தொலைபேசியின் அறிமுகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விவரங்கள் வெளியிடப்படவில்லை. சீனாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Ace 3V ரீப்ரண்டேட் வெர்சனக அறிமுகப்படுத்தப்படலாம் என்று நம்பப்படுகிறது.

இது குறித்து ஒன்பிளஸ் நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. போன் பற்றிய தகவல்கள் சில லீக்கள் மற்றும் வதந்திகள் மூலம் பெறப்பட்டாலும், OnePlus Nord 4 யின் சில அம்சங்கள் இந்த லீக்கள் மற்றும் வதந்திகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மொபைலில் என்னென்ன இருக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

OnePlus Nord 4 லீக் சிறப்பம்சம்

OnePlus Nord 4 பற்றிய தகவல்கள் Geekbench இலிருந்து வருகிறது . உண்மையில், இந்த பெஞ்ச் மார்க்கிங் தளத்தில் இருந்து போனின் சில சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன. இது தவிர, இந்த தரப்படுத்தல் தளத்தில் ஃபோன் சிங்கிள் மற்றும் மல்டி-ஸ்கோரில் என்ன மதிப்பெண் பெற்றது என்பதை பற்றி பார்க்கலாம்.

Geekbench Certification யில் கிடைத்த தகவல்

சமீபத்தில் இந்த ஃபோன் கீக்பெஞ்ச் தரப்படுத்தல் தளத்தில் மாடல் எண் CPH2621 உடன் காணப்பட்டது. யாஷ் மாடல் எண் OnePlus Nord 4 உடன் இணைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த மாடல் எண் OnePlus Nord 4 உடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் கூறலாம். இந்த லிஸ்டிலிருந்து இந்த ஃபோன் பெற்ற ரேட்டிங்கள் ஈர்க்கக்கூடியவை. உண்மையில் இந்த ஃபோன் சிங்கிள் ஸ்கோரில் 1875 புள்ளிகளையும், மல்டிகோரில் 4934 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இந்த போனில் 12 ஜிபி ரேம் வரை இருக்கலாம் மற்றும் இது ஆண்ட்ராய்டு 14 யில் அறிமுகமஅகலம் என்ற தகவல் வெளியாகியது.

கீக்பெஞ்சில் லீக் செய்யப்பட்ட ப்ரோசெசர்

கீக்பெஞ்சில் லிஸ்ட்டிங் செய்யப்பட்ட ப்ரோசெசர் பற்றிய தகவல் கிடைத்துள்ளது ஒன்பிளஸ் நார்ட் 4 ஆனது ஆக்டா கோர் ப்ரோசெசர் கொண்டிருக்கப் போகிறது என்று உங்களுக்குச் சொல்கிறோம். இங்கிருந்து ஃபோன் CPU கோரில் 2.80GHz கிளாக் ஸ்பீடுடன் பொருத்தப்பட்டிருக்கும் என்று அறியப்படுகிறது, இது தவிர, இது 2.61GHz இல் இயங்கும் நான்கு கோர்களைக் கொண்டிருக்கும். இதை தவிர இதில் 1.90GHz கோரில் இயங்குகிறது இதன் சிறப்பம்சங்கள் பார்த்த்தில் இந்த போனில் Snapdragon 7+ Gen 3 ப்ரோசெசர் கொண்டுள்ளது இதே போன்ற ப்ரோசெசர் OnePlus Ace 3V காணப்பட்டது.

பேட்டரி மற்றும் சார்ஜிங் பற்றிய தகவல்

வேறு சில சிறப்பம்சங்கள் மற்றும் அம்சங்கள் போன்றவற்றைப் பற்றி நாம் பேசினால், இந்த தொலைபேசியில் சில கசிவுகள் மற்றும் வதந்திகளைப் பார்த்தால், அதாவது OnePlus Nord 4, இது 5430mAh பேட்டரியைக் கொண்டிருக்கப் போகிறது என்று கூறப்படுகிறது. இந்த பேட்டரி 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் திறன் கொண்டதாக இருக்கும். இதன் பொருள் பேட்டரி விரைவாக வடிந்தாலும், நீங்கள் அதை பாஸ்டாக சார்ஜ் செய்ய முடியும்.

கேமராவை பற்றி தகவல் வெளிவந்துள்ளது

FV 5 Database பற்றி பேசினால், OnePlus Nord 4 யில் ஒரு 50MP யின் Primary Camera இருக்கும், இதில் உங்களுக்கு OIS சப்போர்த்டன் வரும் இந்த கேமரா f/1.9 aperture உடன் வரப் போகிறது, இது தவிர, இதன் குவிய நீளம் பற்றி பேசினால், அது 26.4mm ஆக இருக்கும். இது தவிர, இந்த போனில் 16MP செல்ஃபி கேமரா இருக்கும்.

இருப்பினும், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை, எனவே இந்த அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஒரு குறிப்பை மட்டுமே பார்க்க வேண்டும். தொலைபேசியின் அறிமுகம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், OnePlus Nord 3 உடன் ஒப்பிடுகையில், இந்த போனில் மேம்பட்ட கேமரா, சிறந்த செயலி மற்றும் அனைத்து அம்சங்களையும் பார்க்கலாம்.

இதையும் படிங்க:1 கோடிக்கு அதிகமான SIM Cards ப்ளாக் சைபர் குற்றத்தை தடிக்க அதிரடி

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo