Motorola யின் புதிய போன் MediaTek Dimensity 8350 SoC உடன் அறிமுகம்

HIGHLIGHTS

Motorola இந்தியாவில் அதன் Motorola Edge 60 Pro புதிய போனை அறிமுகம் செய்தது

இந்த போனில் MediaTek Dimensity 8350 SoC சிப்செட் மற்றும் மூன்று கேமரா செட்டப் வழங்குகிறது

இதன் விலை மற்றும் அம்சங்களின் தகவலை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

Motorola யின் புதிய போன் MediaTek Dimensity 8350 SoC உடன் அறிமுகம்

Motorola இந்தியாவில் அதன் Motorola Edge 60 Pro புதிய போனை அறிமுகம் செய்தது மேலும் இந்த போன் Edge 50 Proயின் மிக பெரிய வெற்றியை தொடர்ந்து இந்த போனை அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இந்த போனில் MediaTek Dimensity 8350 SoC சிப்செட் மற்றும் மூன்று கேமரா செட்டப் வழங்குகிறது மேலும் இந்த போன் ஒரு 30,000ரூபாய் செக்மண்டில் அறிமுகம் செய்யப்பட்டது இதன் விலை மற்றும் அம்சங்களின் தகவலை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Motorola Edge 60 Pro விலை தகவல்.

Motorola Edge 60 Pro போனின் விலையை பற்றி பேசினால் இதன் 8GB+256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ,29,999 மற்றும் அதன் 12GB+256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 33,999ரூபாய்க்கு வைக்கப்பட்டுள்ளது மேலும் இது Pantone Dazzling Blue, Pantone Sparkling Grape மற்றும் Pantone Shadow கலரில் வாங்கலாம் மேலும் இந்த போனை மே7 அன்று வாங்கலாம்

Motorola Edge 60 Pro சிறப்பம்சம்

Motorola Edge 60 Pro போனின் அம்சம் பற்றி பேசினால் இதில் 6.7-இன்ச் டிஸ்ப்ளே உடன் இது 1.5K ரெசளுசன் வழங்குகிறது மேலும் இதில் இந்த போனில் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 4500nits ஹை ப்ரைட்னஸ் சப்போர்த்டன் கர்வ்ட் POLED ஸ்க்ரீன் கொண்டுள்ளது. இந்த போனின் மேலே கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i ப்ரோடேக்சன் கொண்டுள்ளது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 8350 SoC மூலம் இயக்கப்படுகிறது, மேலும் 12GB வரை LPDDR4x ரேம் மற்றும் UFS 4.0 இன்டெர்னல் ஸ்டோரேஜ் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த போ னில் கேமரா பற்றி பேசினால் மோட்டோ எட்ஜ் 60 ப்ரோ பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 50MP ப்ரைமரி Sony LYTIA 700C சென்சார், 50MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10MP டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவை உள்ளன. செல்ஃபிக்களுக்கு, முன்புறத்தில் 50MP சென்சார் உள்ளது.

மேலும் இந்த போனில் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் இந்த போனில் 90W டர்போபவர் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான சபூர்டுடன் 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும் இது செக்யுரிட்டிக்காக IP68 மற்றும் IP69 ரேட்டிங்கை கொண்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo