Lava யின் புதிய 5G போன் கம்மி விலையில் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

HIGHLIGHTS

Lava இந்தியாவில் அதன் பட்ஜெட் விலை போனான Lava Shark 5G போனை அறிமுகம் செய்துள்ளது

இந்த குறைந்த விலை லாவா ஷார்க் 5G போனின் விலை ரூ .7,999 யில் அறிமுகம் செய்யப்பட்டது

இந்த போனுடன் அதன் பயனர்களுக்கு 1 வருட இலவச ஹோம் சேவை ரீப்லேச்மென்ட் வழங்குகிறது.

Lava யின் புதிய 5G போன் கம்மி விலையில் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

Lava இந்தியாவில் அதன் பட்ஜெட் விலை போனான Lava Shark 5G போனை அறிமுகம் செய்துள்ளது , மேலும் இந்த போன் ரூ, 8,000க்குள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போன் ப்ரீமியம் லுக் டிசைன் கொண்டுள்ளது மேலும் இந்த போன் 5G கனேக்டிவிட்டியுடன் Unisoc T765 சிப்செட்டுடன் பல சுவாரஸ்யமான அம்சம் கொண்டுள்ளது மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Lava Shark 5G விலை தகவல்

லாவா ஷார்க் 5ஜி போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இது ஒற்றை மெமரி வேரியண்டில் மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த குறைந்த விலை லாவா ஷார்க் 5G போனின் விலைரூ .7,999 . பயனர்கள் 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பிடத்தைப் பெறுவார்கள். இந்த மொபைலின் விற்பனை இன்று முதல் ஸ்டெல்லர் கோல்ட் மற்றும் ஸ்டெல்லர் ப்ளூ கலரில் அறிமுகம் செய்துள்ளது, மேலும் நிறுவனம் இந்த போனுடன் அதன் பயனர்களுக்கு 1 வருட இலவச ஹோம் சேவை ரீப்லேச்மென்ட் வழங்குகிறது.

Lava Shark 5G டாப் அம்சம்.

டிஸ்ப்ளே: Lava Shark 5G போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் 6.75-இன்ச் இதனுடன் இதில் 1612 × 720 பிக்சல் ரேசளுசன் வழங்கப்படுகிறது மேலும் இதில் U வடிவில் ஆன வாட்டர் ட்ரோப் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மேலும் இது 90HZ ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது.

ஸ்டோரேஜ்:-: இந்த போனில் Unisoc இன் T765 ஆக்டா-கோர் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு மொபைல் CPU ஆகும், இந்த போன் Mali-G57 MC2 GPU-வை சப்போர்ட் செய்கிறது.

ரேம் ஸ்டோரேஜ் :-இதனுடன் இதில் ரேம் ஸ்டோரேஜ் பற்றி பேசினால் 4GB LPDDR4x RAM உடன் 4GB வெர்ஜுவல் ரேம் வழங்குகிறது மற்றும் இதில் 64GB UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் நீங்கள் 512GB வரை மைக்ரோ SD கார்ட் வழியாக அதிகரிக்கலாம்

கேமரா :- போட்டோ எடுப்பதற்காக, லாவா ஷார்க் 5G போனின் பின்புறம் மற்றும் முன் பேனல்களில் சிங்கிள் கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது. பின்புற கேமரா அமைப்பில் LED ஃபிளாஷ் பொருத்தப்பட்ட 13-மெகாபிக்சல் சென்சார் உள்ளது, இது AI தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்கு , இந்த ஸ்மார்ட்போன் 5 மெகாபிக்சல் முன் கேமரா சென்சாரை சப்போர்ட் செய்கிறது.

பேட்டரி:-இதன் பேட்டரி பற்றி பேசினால் இது ஒரு குறைந்த விலை 5G போன் லாவா ஷார்க் சக்திவாய்ந்த 5,000 mAh பேட்டரியை சப்போர்ட் செய்கிறது. இந்த பெரிய பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்ய, மொபைல் போனில் 18W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் கஸ்டமர்களுக்கு பெட்டியில் 10W சார்ஜரைப் வழங்கப்படும்.

இதையும் படிங்க:Alcatel V3 சீரிஸ் அறிமுகத்திற்கு தயார் பல சுவாரஸ்ய அம்சங்கள் நிறைந்திருக்கும் எப்போ தேதி பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo