Lava Bold N4 Lite Sale
நீங்கள் ரூ,10,000க்கு குறைந்த விலையில் போன வாங்க நினைத்தாள் LAVA Bold N4 Lite போன இன்று இ-காமர்ஸ் தளமான அமேசானில் பகல் 12 மணிக்கு முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது, இந்த போனில் 5000Mah பேட்டரியுடன் வருகிறது மேலும் இந்த போனில் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Lava Bold N4 Lite போனை வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது இந்த போனின் 3GB RAM மற்றும் 32GB ஸ்டோரேஜ் விலை ரூ,8,099 ஆகும், ஆனால் அதிலிருந்து அறிமுக சலுகையாக பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,7,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற சலுகை பெறலாம்.
லாவா போல்ட் N4 லைட் 6.56-இன்ச் ஸ்க்ரீனை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் யூனிசாக் 9863A சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இது 3ஜிபி ரேமுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் கூடுதலாக 3ஜிபி வரை விர்ச்சுவல் ரேமை சப்போர்ட் செய்கிறது. இந்த போனில் 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது, இதை 64ஜிபி வரை அதிகரிக்க முடியும். இது ஆண்ட்ராய்டு 16 கோ எடிஷனில் இயங்குகிறது. இந்த சாப்ட்வேரில் தேவையற்ற சாப்ட்வேர்ட்கள் (ப்ளோட்வேர்) இல்லை என்றும், இரண்டு ஆண்டுகளுக்கு பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்றும் லாவா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:இன்று முதல் முறையாக விற்பனைக்கு Realme யின் புதிய போன் இன்ஸ்டன்ட் பேங்க் ஆபரில் வாங்கலாம் கம்மி விலையில்
போட்டோ எடுப்பதற்காக, லாவா போல்ட் N4 லைட், 8 மெகாபிக்சல் AI பின்புற கேமராவையும், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக5 மெகாபிக்சல் முன்புற கேமராவையும் கொண்டுள்ளது. இந்த போனில் 10W வயர்டு சார்ஜிங் சப்போர்டுடன் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட்சென்சார் மற்றும் ஆடியோவை இயக்குவதற்காக ஒரு ஸ்பீக்கர் உள்ளது. மேலும், இந்த போன் நீடித்து உழைப்பதற்காக MIL-STD-810H ரேட்டிங் பெற்றுள்ளது.