Jio plans
இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு ரூ,319 யில் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தின் கீழ் வேலிடிட்டியோ Calender Month என குறிப்பிடப்பட்டுள்ளது எனவே அந்த மாதத்தில் எத்தனை நாட்கள் இருக்கிறதோ அத்தனை நாட்களுக்கு அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை வழங்குகிறது இந்த திட்டத்தின் நன்மை விவரங்கள் பார்க்கலாம் வாங்க.
ஜியோவின் இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ,319 ஆகும், அதாவது தினமும் உங்களுக்கு தோராயமாக ₹10.50 செலவாகும். இந்தத் திட்டத்தின் நன்மைகளில் இலவச தேசிய ரோமிங் மற்றும் இந்தியா முழுவதும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் ஆகியவை அடங்கும். மேலும், இந்தத் திட்டம் தினமும் 100 இலவச SMS மெசேஜ்கள் மற்றும் 1.5ஜிபி அதிவேக டேட்டாவையும் வழங்குகிறது.
இது மொத்தம் 45GB அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இருப்பினும், இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் இலவச அன்லிமிடெட் 5G டேட்டாவை வழங்கவில்லை. ஜியோ AI கிளவுட் மற்றும் ஜியோ டிவி OTT ஆப்களுக்கான அக்சஸ் மற்ற நன்மைகளில் அடங்கும். மேலும், இந்நிறுவனம் கூகுள் ஜெமினி ப்ரோவிற்கான 18 மாத சப்ஸ்க்ரிப்ஷன் ஒரு இலவச சலுகையாக வழங்குகிறது.
பிஎஸ்என்எல் இந்தத் திட்டம் குறித்த தகவலைத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் ஹேண்டில் மூலம் பகிர்ந்துள்ளது. பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் வழங்கும் இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ. 349 ஆகும். இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் பலன்களில் இந்தியா முழுவதும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் இந்தியா முழுவதும் இலவச நேஷனல் ரோமிங் ஆகியவை அடங்கும்.
இந்த BSNL ப்ரீபெய்ட் திட்டத்துடன் 300GB அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டாவிற்கு லிமிட் இல்லை, அதாவது பயனர்கள் இந்த டேட்டாவை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கூடுதலாக, பயனர்கள் ஒரு நாளைக்கு 100 இலவச SMS-களையும் பெறலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி காலத்தைக் கொண்டுள்ளது.