இன்று முதல் முறையாக விற்பனைக்கு Realme யின் புதிய போன் இன்ஸ்டன்ட் பேங்க் ஆபரில் வாங்கலாம் கம்மி விலையில்
Realme சமிபத்தில் அதன் புதிய realme P4s 5G போனைகடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது
இந்த போன் இன்று பகல் 12 மணிக்கு முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது
இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Realme சமிபத்தில் அதன் புதிய realme P4s 5G போனைகடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த போன் இன்று பகல் 12 மணிக்கு முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது மேலும் இந்த போனில் அறிமுக சலுகையாக இன்ஸ்டன்ட் ரூ,3000பேங்க் ஆபர் நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் பவர்புல் 8000 mAh பேட்டரியுடன் வரும் மிக சிறந்த ப்லாக்ஷிப் போன ஆகும், மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyRealme P4s 5G டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.
Realme P4s 5G-போனின் விலை , 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடலுக்கு ரூ. 34,999-இல் தொடங்குகிறது. அதே சமயம், ஹை ரக 8GB + 256GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 37,999 ஆகும். இறுதியாக, 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட டாப்-ஆஃப்-லைன் மாடலின் விலை ரூ. 41,999 ரூபாய்க்கும் அறிமுகம் செய்யப்பட்டது இந்த போனை இன்று பகல் 12 மணிக்கு இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கர்டில் வாங்கலாம் மேலும் அறிமுக சலுகையாக HDFC பேங்க் , ICICI பேங்க் மற்றும் SBI கார்டுகளுடன் நிறுவனம் ரூ. 3,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்குகிறது இதன் மூலம் இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல சலுகை பெறலாம்.

Realme P4s 5G சிறப்பம்சம்.
Realme P4s போனில் 6.78-இன்ச் 1.5K (1,272 x 2,772 பிக்சல்கள்) சாம்சங் எம்14 அமோலெட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 144Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 450 ppi பிக்சல் டென்சிட்டி , 3,000Hz உடனடி டச் சாம்பிளிங் ரேட், HDR10+ மற்றும் 6,500 நிட்ஸ் வரையிலான ஹை ப்ரைட்னஸ் பிரகாசம் ஆகியவற்றை வழங்குகிறது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக இந்த கைபேசி IP66 + IP68 + IP69 சர்டிபிகேஷன் உடன் வருவதாக அந்த தொழில்நுட்ப நிறுவனம் கூறுகிறது.
Realme P4s 5G ஸ்மார்ட்போனில், ஆக்டா-கோர் MediaTek Dimensity 7400 Ultra 5G சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இது 2.6GHz ஹை கிளாக் ஸ்பீடை வழங்குவதோடு, ஸ்டோரேஜிற்காக HyperVision+ AI சிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 12GB வரையிலான LPDDR4x ரேம் உள்ளது, இதை 14GB வரை அதிகரிக்க முடியும். மேலும், 256GB வரையிலான UFS 3.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் இதில் அடங்கும். , இந்த ஸ்மார்ட்போனில் ஏர்ஃப்ளோ வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது 7,000 சதுர மிமீ வெப்ப வெளியேற்றப் பகுதியையும், 13,624 சதுர மிமீ கிராஃபைட் பகுதியையும் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட ரியல்மி யுஐ 7.0 உடன் வரும் ஒரு டூயல்-சிம் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனுக்கு மூன்று வருட ஓஎஸ் மேம்படுத்தல்களையும், நான்கு வருட பாதுகாப்பு அப்டேட் வழங்குவதாக அந்நிறுவனம் உறுதியளிக்கிறது
இதையும் படிங்க திடீர் என மக்கள் மனதில் மிக பெரிய இடியை இறக்கிய Redmi, அதன் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,4,000 குறைப்பு
கேமராக்களைப் பொறுத்தவரை, ரியல்மி பி4எஸ் 5ஜி இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில், இரு-பிரிண்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 77.9 டிகிரி வியூவ் எங்கிளுடன் கூடிய 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவும், 112 டிகிரி வைட் எங்கிளுடன்கூடிய 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவும் இடம்பெற்றுள்ளன. முன்புறத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 16 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது. இந்த போனில் 4K/30 fps வரை வீடியோக்களைப் ரெக்கார்டிங் செய்யும் பவர் கொண்டுள்ளது.
Realme P4s 5G போனில் மிக சிறந்த பேட்டரி பெக்கபுக்கு 8000Mah பேட்டரியுடன் 80W பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது இது 28.5 நிமிடங்களில் முழுசாக 75% சார்ஜ் ஆகிவிடுகிறது இதனுடன் இந்த போனில் மிக சிறந்த கனேக்டிவிட்டிக்கு 5G, 4G LTE, Wi-Fi 5, Bluetooth 5.4, a USB Type-C port, Beidou, GPS, GLONASS, Galileo, மற்றும் QZSS வழங்கப்படுகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
