Apple surprise and shine event
டெக் நாம் மிகவும் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த Apple யின் மிக பெரிய நிகழ்வு ‘Surprise and Shine’ அறிமுகம் நாளை அதாவது செப்டம்பர் 9,2026 அன்று நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு ஆப்பிளின் நிகழ்வு சிறப்பாக இருக்கும் ஏன் என்றால் நிறுவனத்தில் புதிய தலைமை அதிகாரி CEO (John Ternus) முதல் மிக பெரிய நிகழ்வாகும்.
இது மட்டுமில்லாமல் இந்த நிகழ்வில் மக்கள் மிகவும் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த, ஆப்பிளின் புதிய போல்டபில் போன அறிமுகம் செய்யும், இதை தவிர iPhone 18 சீரிஸ் Apple Watch Series 12 மற்றும் புதிய AirPods 5 ஆகியவை இந்த அறிமுக நிகழ்வில் எதிர்ப்பார்க்கப்படுகிறது இப்பொழுது இந்த ஆப்பிளின் நிகழ்வு இந்தியாவில் எப்பொழுது மற்றும் எந்த நேரத்தில் நிகழ்வை LIVE நேரடியாக பார்க்க முடியும்.
இந்த மாபெரும் ஆப்பிள் நிகழ்ச்சி, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பார்க்கில்( Apple Park) அமைந்துள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெறுகிறது.
இந்தியாவில் லைவில் பார்ப்பது எப்படி, எங்கே?
உங்கள் போன், லேப்டாப் அல்லது ஸ்மார்ட் டிவியில் இந்த நிகழ்வை லைவில் பார்க்க விரும்பினால், உங்களுக்குப் பல எளிய வழிகள் உள்ளன.
ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அவற்றின் 6.3-இன்ச் மற்றும் 6.9-இன்ச் திரைகளைத் தக்கவைத்துக் கொள்ளும் என்றும், ஆனால் சிறிய டைனமிக் ஐலேண்ட் மற்றும் சிறந்த ஆற்றல் சேமிப்புத் திறனுடன் வரும் என்றும் வதந்திகள் பரவி வருகின்றன. இரண்டு போன்களிலும் மேம்படுத்தப்பட்ட 48MP கேமராக்கள் இடம்பெறலாம், மேலும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸில் உள்ள பிரதான சென்சார், சரிசெய்யக்கூடிய அபெர்ச்சர் மற்றும் வலுவான ஜூம் வசதியைப் பெறக்கூடும்.
இரண்டு மாடல்களும் 2nm ப்ரோசெசரில் உருவாக்கப்பட்ட புதிய A20 Pro சிப்பில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஒட்டுமொத்தமாக சிறந்த பர்போமன்ஷ் வழங்கும். மேலும், ப்ரோ மேக்ஸ் அதன் முந்தைய மாடலை விட பெரிய பேட்டரியைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிளின் இந்த ‘iPhone Ultra மாடல் போனில் 7.8-இன்ச் மிக பெரிய இன்னர் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே கிடைக்கும், மேலும் இந்த போனில் அவுட்டர் 5.3-இன்ச் கவர் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே வழங்குகிறது, இதனுடன் இந்த போனில் A20 Pro சிப் உடன் இதில் 12GB ரேம் வரை வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
இதை தவிர இந்த போனில் செக்யூரிட்டிக்கு Face ID இடத்தில சைடில் Touch ID பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படும், இதன் விலை ரேன்ஜ் பொறுத்தவரை $2,500 ஆகா இருக்கும் அதாவது இந்திய மதிப்பின்படி இதன் விலை 2 லட்சத்திற்கும் அதிகம் இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க பக்கவான பிரெண்டான Sony TV தூக்க சரியான நேரம் பேங்க் மற்றும் கூப்பன் ஆபரில் ரூ,6000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்
ஸ்மார்ட்போன்களைத் தவிர, ஸ்மார்ட்வாட்ச் பிரிவிலும் ஆப்பிள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12, பயனரின் உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் புதிய சுகாதார சென்சார்களைக் கொண்டிருக்கும். சாகசப் பிரியர்களுக்காக, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 4, செராமிக் வெர்ஷன் மற்றும் புதிய தோற்றத்துடன் டிசைன் செய்யப்படுகிறது
இசைப் பிரியர்களுக்காக, ஏர்பாட்ஸ் 5 இரண்டு வகைகளில் (ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் ANC இல்லாதது) அறிமுகப்படுத்தப்படலாம். மிக முக்கியமாக, இந்த முறை ஏர்பாட்ஸில் இதயத் துடிப்பைக் கண்காணிக்கும் ஒரு தனித்துவமான அம்சமும் இடம்பெறக்கூடும். ஸ்மார்ட் வீடுகளைப் பற்றிப் பேசுகையில், ஆப்பிள் நிறுவனம் 7-அங்குலத் திரையுடன் கூடிய புதிய ‘ஹோம் ஹப்’, புதிய ஹோம்பாட் மினி மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் டிவி 4K ஆகியவற்றை அறிமுகப்படுத்தி, உங்கள் வீட்டை இன்னும் ஸ்மார்ட்டாக மாற்றத் தயாராகி வருகிறது.