Redmi 14C 5G vs Oppo A3x 5G: வெறும் 10,000ரூபாய்க்குள் வரும் போனில் எது பெஸ்ட்?
Redmi 14C 5G மற்றும் Oppo A3x 5G இரண்டும் 5G கனெக்சன் வழங்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள். இரண்டு போன்களிலும் பல சுவாரஸ்மான அம்சங்கள் உள்ளன. ஆனால் நீங்கள் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்றால், எந்த ஃபோன் சிறப்பாக இருக்கும்? Redmi 14C 5G மற்றும் Oppo A3x 5G யின் இந்த இரு போனின் டிஸ்ப்ளே,ப்ரோசெசர்,மற்றும் பேட்டரி போன்றவற்றை ஒப்பிட்டு 10,000ரூபாய்க்குள் வரும் இந்த போனில் எது பெஸ்ட் என்பதை பார்ப்போம்
SurveyRedmi 14C 5G vs Oppo A3x 5G: டிஸ்ப்ளே
Redmi 14C 5G ஆனது 6.88-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட்டை கொண்டுள்ளது. இது டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிச்டன்ட் அம்சத்தையும் கொண்டுள்ளது. அதேசமயம், Oppo A3x 5G ஆனது 6.67 இன்ச் IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 120Hz ரெப்ராஸ் ரேட்டை கொண்டுள்ளது. ஆனால் Oppo இன் ஃபோன் 1000 nits யின் ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது, இது ரெட்மியின் போனை விட அதிகம். IP54 ரேட்டிங் மற்றும் MIL-STD-810H சர்டிபிகேசன் Oppo ஃபோன்களில் கிடைக்கிறது. ரெட்மி ஃபோன்கள் பெரிய டிஸ்பிளேவைக் கொண்டுள்ளன, ஆனால் ஒப்போ போன்கள் பிரகாசமான டிஸ்ப்ளே மற்றும் நீடித்துழைக்கும் தன்மையைக் கொண்டுள்ளன.

Redmi 14C 5G vs Oppo A3x 5G: ப்ரோசெசர்
Redmi 14C 5G ஆனது Snapdragon 4 Gen 2 சிப்செட் கொண்டது. இது 4nm செயலாக்க தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 6GB RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. Oppo A3x 5G ஆனது டைமென்சிட்டி 6300 சிப்செட்டைக் கொண்டுள்ளது, இது 6nm செயலாக்கத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
Redmi 14C 5G vs Oppo A3x 5G: கேமரா
Redmi 14C 5G ஆனது 50MP ப்ரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. போனில் 8MP செல்ஃபி கேமரா உள்ளது. அதேசமயம், Oppo A3x 5G ஆனது 8MP ப்ரைமரி கேமரா கேமரா மற்றும் 5MP முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது. இங்கே ரெட்மியின் ஃபோன் கேமராவைப் பொறுத்தவரை சிறந்தது என்பதை நிரூபிக்க முடியும். இருப்பினும், Oppo யின் இந்த போனில் 1080p வீடியோக்களை 60fps யில் ரெக்கார்டிங் செய்யும் பவரை கொண்டுள்ளது. ரெட்மியின் போன் இந்த வசதியை வழங்கவில்லை. ஆனால் போட்டோ எடுப்பதில், Redmi போன் தெளிவான வெற்றியாளராகத் தெரிகிறது. இந்தியாவில் Redmi 14C 5G விலை ரூ.9,999 முதல் தொடங்குகிறது

Redmi 14C 5G vs Oppo A3x 5G: பேட்டரி
Redmi 14C 5G ஆனது 5160mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், Oppo A3x 5G ஃபோனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5100mAh பேட்டரி உள்ளது. இங்கு ரெட்மியின் போன் பேட்டரி திறனில் முன்னணியில் உள்ளது ஆனால் ஓப்போவின் போன் வேகமாக சார்ஜ் செய்வதில் முன்னணியில் உள்ளது.
விளம்பரம்
Redmi 14C 5G vs Oppo A3x 5G எது பெஸ்ட்?
ஒப்போவின் போன்களை விட இதன் விலை சற்று அதிகம். Oppo A3x 5G விலை 8,999 ரூபாயில் தொடங்குகிறது. ரெட்மி போனில் பெரிய பேட்டரி, 50எம்பி பிரதான கேமரா உள்ளது. அதே நேரத்தில், Oppo A3x 5G விரைவான சார்ஜிங் அம்சத்துடன் மலிவான தொலைபேசியை விரும்பும் பயனர்களை ஈர்க்கும்.
இதையும் படிங்க:Samsung Galaxy S25 VS amsung Galaxy S25+: இந்த இரு போனில் என்ன வித்தியாசம் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile