Samsung Galaxy S25 VS amsung Galaxy S25+: இந்த இரு போனில் என்ன வித்தியாசம் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்
சாம்சங் அதன் Galaxy Unpacked நிகழ்வில் அதன் Samsung Galaxy S25 சீரிஸ் அறிமுகம் செய்தது, இந்த சீரிஸ் கீழ் Galaxy S25 Ultra, Galaxy S25+ மற்றும் Galaxy S25 ஸ்மார்ட்போன் ஆகியவை அடங்கும், இப்பொழுது Samsung Galaxy S25 மற்றும் Samsung Galaxy S25plus இந்த இரு போனுக்கு என்ன வித்தியாசம் மற்றும் விலையில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம், மேலும் இதன் டிஸ்ப்ளே, ப்ரோசெசர்,கேமரா மற்றும் பல ஒப்பிட்டு பார்க்கலாம்.
SurveySamsung Galaxy S25 VS amsung Galaxy S25+: விலை மற்றும் கிடைக்கும்
Samsung Galaxy S25 ஆனது இந்தியாவில் ரூ.80,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது அடிப்படை 12GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் உள்ளமைவில் வருகிறது. இது 12 ஜிபி + 256 ஜிபி மற்றும் 12 ஜிபி + 512 ஜிபி வகைகளிலும் கிடைக்கும். விலைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அதன் முன்பதிவு நடந்து வருகிறது.
அதேசமயம், Samsung Galaxy S25+ யின் அடிப்படை 12GB + 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.99,999. இந்த போன் 12ஜிபி + 512ஜிபி வகையிலும் கிடைக்கும், இதன் விலை இன்னும் வெளியிடப்படவில்லை. அதன் முன்பதிவும் திறக்கப்பட்டுள்ளது.

டிஸ்ப்ளே
Samsung Galaxy S25 ஆனது 6.2-இன்ச் முழு HD பிளஸ் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 1,080×2,340 பிக்சல்கள் ரேசளுசன் , 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2600 nits ஹை ப்ரைட்னாஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது.
அதேசமயம் Samsung Galaxy S25+ ஆனது 6.7 இன்ச் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே, அதன் ரேசளுசன் 1,440×3,120 பிக்சல்கள், 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2600 nits ஹை ப்ரைட்னாஸ் மற்றும் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது.
ப்ரோசெசர்
சாம்சங் கேலக்ஸி எஸ்25 மற்றும் Samsung Galaxy S25+ இந்த இரு போனிலும் ஒரே மாதுரியான octa core Qualcomm Snapdragon 8 Elite ப்ரோசெசர் கொண்டுள்ளது. இதன் ஒப்பரேட்டிங் சிஸ்டம் பற்றி பேசினால் இந்த இரு போனிலும் ஒரே மாதுரியான ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான One UI 7 பிளாட்பார்மில் இயங்குகிறது

ரேம் மற்றும் ஸ்டோரேஜ்
Samsung Galaxy S25 ஆனது 12GB LPDDR5x ரேம் மற்றும் 128GB, 256GB மற்றும் 512GB வரை உள்ளடங்கிய சேமிப்பு விருப்பங்களுடன் உள்ளது. அதேசமயம் Samsung Galaxy S25+ ஆனது 12GB வரை LPDDR5x RAM உடன் 256GB மற்றும் 512GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் விருப்பங்களில் கிடைக்கிறது.
கேமரா அமைப்பு
Samsung Galaxy S25 யின் பின்புறம் f/1.8 அப்ரட்ஜர் , OIS சப்போர்ட் மற்றும் 2x யின் -சென்சார் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, f/2.2 அப்ரட்ஜர் மற்றும் 120 டிகிரி பார்வை கொண்ட 10-மெகாபிக்சல் அல்ட்ராவைட் கேமரா, மற்றும் f/ 2.4 அப்ரட்ஜர் 3.7x ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS சப்போர்டுடன் 10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. பின்புறத்தில்,
அதே சமயம் Samsung Galaxy S25+ ஆனது f/1.8 அப்ரட்ஜர் OIS சப்போர்டுடன் மற்றும் 2x இன்-சென்சார் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, f/2.2 அப்ரட்ஜர் மற்றும் 120 டிகிரி பார்வை கொண்ட 10-மெகாபிக்சல் அல்ட்ராவைட் கேமரா மற்றும் f/2.4 ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 3.7x ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS சப்போர்டுடன் 10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது. முன்புறத்தில், f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பேட்டரி பேக்கப்
Samsung Galaxy S25 ஆனது 4000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 25W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிரது. Samsung Galaxy S25+ ஆனது 4900mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 45W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.
கனெக்டிவிட்டி விருப்பங்கள்
Samsung Galaxy S25 கனெக்சன் விருப்பங்களில் இரட்டை சிம் சப்போர்ட் , 5G, 4G LTE, Wi-Fi 6E, ப்ளூடூத் 5.3, GPS, USB Type C போர்ட் மற்றும் NFC சப்போர்ட் ஆகியவை அடங்கும். அதேசமயம் Samsung Galaxy S25+ ஆனது இரட்டை சிம் ஆதரவு, 5G, 4G LTE, Wi-Fi 6E, Bluetooth 5.3, GPS, NFC மற்றும் USB Type C போர்ட் ஆகியவற்றை உள்ளடக்கியது.
Samsung Galaxy S25 146.9 mm, நீளம், 70.5 mm அகலம், 7.2 mm திக்னஸ் மற்றும் 162 கிராம் எடை கொண்டது. Samsung Galaxy S25+ யில் நீளம் 158.4 mm, அகலம் 75.8 mm, திக்னஸ் 7.3 mm மற்றும் இடை 190 கிராம் இருக்கிறது.
இதையும் படிங்க:amsung மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் இதன் சுவாரஸ்ய அம்சங்கள் பாருங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile