Poco C85x 5G vs Redmi A7 Pro 5G: ரூ,15,000 பட்ஜெட்டில் வரும் போனில் எது பெஸ்ட்?
நீங்கள் 15,000 ரூபாய் பட்ஜெட்டில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால், Poco C85x 5G மற்றும் Redmi A7 Pro 5G ஆகியவை இந்த பட்ஜெட்டில் சந்தையில் கிடைக்கின்றன. இந்த இரு ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் இங்கே விரிவாக ஒப்பிடுகிறோம், இதன் மூலம் உங்களுக்கு எந்த போன் சிறந்தது என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும். Poco C85x 5G-ல் 6300mAh பேட்டரியும், Redmi A7 Pro 5G-ல் 6300mAh பேட்டரியும் வழங்கிறது இப்பொழுது இந்த இரு போனின் ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
Poco C85x 5G vs Redmi A7 Pro 5G விலை:-
போக்கோ C85x 5G-யின் 4GB+64GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ₹13,749-க்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெட்மி A7 ப்ரோ 5G-யின் 4GB+64GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ₹14,489-க்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Poco C85x 5G vs Redmi A7 Pro 5G டிஸ்ப்ளே:-
போகோ C85x 5G ஆனது 1600x720 பிக்சல்கள் ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 810 நிட்ஸ் வரையிலான உச்சபட்ச பிரகாசம் கொண்ட 6.9-இன்ச் HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
ரெட்மி A7 ப்ரோ 5G-யும் இதேபோன்ற 6.9-இன்ச் HD+ ரெசல்யூஷன் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதுவும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சற்றே குறைவான 800 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது.
Poco C85x 5G vs Redmi A7 Pro 5G ப்ரோசெசர்:
போகோ C85x 5G, ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட சியோமி ஹைப்பர்ஓஎஸ்-இல் இயங்குகிறது. போகோ C85x 5G, ஆக்டா-கோர் யூனிசாக் T8300 ப்ரோசெசர் இயக்கப்படுகிறது.
ரெட்மி A7 ப்ரோ 5G, ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3.0-இல் இயங்குகிறது. இந்த ஃபோனில் ஆக்டா-கோர் T8300 5G ப்ரோசெசர் உள்ளது.
Poco C85x 5G vs Redmi A7 Pro 5G கேமரா அமைப்பு
போகோ C85x 5G ஆனது 32 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமரா மற்றும் ஒரு இரண்டாம் நிலை கேமராவைக் கொண்டுள்ளது. இதில் செல்ஃபிகளுக்காக 8 மெகாபிக்சல் முன்புற கேமரா உள்ளது.
ரெட்மி A7 ப்ரோ 5G-யிலும் பின்புறத்தில் F2.0 அபெர்ச்சர் கொண்ட 32 மெகாபிக்சல் AI கேமரா உள்ளது. வீடியோ கால்களுக்காக F2.0 அபெர்ச்சர் கொண்ட 8 மெகாபிக்சல் முன்புற கேமரா உள்ளது.
Poco C85x 5G vs Redmi A7 Pro 5G பேட்டரி பேக்கப்
போகோ C85x 5G ஆனது 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 6300mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
ரெட்மி A7 ப்ரோ 5G-யும் இதேபோன்ற 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 6300mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.