Digit.in

Youtube Shorts இந்தியாவில் அறிமுகம், ரீல்ஸ் மற்றும் டிக்டாக் போன்றே செயல்படுகிறது

Highlights

கூகுள் ஃபார் இந்தியா 2021 நிகழ்வில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை கூகுள் வெளியிட்டது

யூடியூப் ஷார்ட்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது

யூடியூப் ஷார்ட்ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்து இருக்கிறது.

Youtube Shorts இந்தியாவில் அறிமுகம்,  ரீல்ஸ் மற்றும் டிக்டாக் போன்றே செயல்படுகிறது

கூகுள் ஃபார் இந்தியா 2021 நிகழ்வில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை கூகுள் வெளியிட்டது. கடந்த ஆண்டு யூடியூப் ஷார்ட்ஸ் பீட்டா வடிவில் வெளியிடப்பட்டது. தற்போது யூடியூப் ஷார்ட்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. 

உலகளவில் யூடியூப் ஷார்ட்ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்து இருக்கிறது. இந்தியாவில் 1500 கோடிக்கும் அதிக பார்வையாளர்களை யூடியூப் ஷார்ட்ஸ் பெற்று வருகிறது. வரும் நாட்களில் யூடியூப் ஷார்ட்ஸ் பல்வேறு புது அம்சங்களை பெற இருக்கிறது. 

யூடியூப் ஷார்ட்ஸ் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் டிக்டாக் போன்றே செயல்படுகிறது. இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது முதல் பல்வேறு குறு வீடியோ உருவாக்கும் செயலிகளுக்கு கடும் வரவேற்பு கிடைத்து வருகிறது. டிக்டாக் தடையை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது.

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile