சாம்சங் நிறுவன புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் நிறுவன புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்
HIGHLIGHTS

சாம்சங் நிறுவனத்தின் 2018 தொலைகாட்சி மாடல்கள் - கியூ எல்இடி (QLED), மிட்-ரேஞ்ச் யுஹெச்டி (UHD) மற்றும் மேக் ஃபார் இந்தியா கான்செர்ட் சீரிஸ் டிவிக்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

புதிய TV மாடல்களில் தலைசிறந்த வடிவமைப்பு, அவ்ப்ட்டேட்  செய்யப்பட ஸ்கிறீன் மற்றும் ஸ்மார்ட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. சாம்சங் புதிய கியூ எல்இடி டிவிக்களில் ஆம்பியன்ட் மோட் வழங்கப்பட்டு இருக்கிறது, இது நாள் முழுக்க பயனுள்ள தகவல்களை வழங்கி கொண்டிருக்கும். இந்த டிவி சுவரில் மிக நேர்த்தியாக பொருந்திக் கொண்டு காட்சிகளை சிறப்பாக ஒளிபரப்புகிறது. 

இத்துடன் வெப்பநிலை விவரங்களை திரையில் வழங்குவதோடு, உங்களின் புகைப்படங்களை பேக்கிரவுன்டு புகைப்படங்களாக செட் செய்யும் வசதியை வழங்குகிறது.

இவற்றில் உள்ள ஒன் இன்விசிபிள் கனெக்ஷன், சிறிய கேபிள் பயனரின் பவர் மற்றும் ஏவி தகவல்களை டிவிக்கு கொண்டு செல்கிறது. அதிகபட்சம் 15 மீட்டர் நீலமாக இருக்கும் இந்த கேபிள் டிவியை டேட்டா அல்லது மின்சார இணைப்பு இருக்கும் இடத்தில் வைக்க வேண்டிய தேவையை போக்குகிறது.

இத்துடன் எஸ் வாய்ஸ் (S VOICE) உடன் உரையாட முடியும். மேலும் ஸ்மார்ட் திங்ஸ் ஆப் வழங்கப்பட்டு இருப்பதால், டிவியை மற்ற இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IOT) சாதனங்களுடன் இணைத்து, தகவல் பரிமாற்றம், நோட்டிஃபிகேஷன் மற்றும் ஸ்கிரீன் மிரரிங் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.

புதிய சாம்சங் யுஹெச்டி டிவிக்களில் சுப்பீரியர் ஹை-டைனமிக் ரேஞ்ச் (superior High Dynamic Range) மூலம் இயங்குகிறது. இவை மிக நுனுக்கமான பிரைட்னஸ், டீப் கான்ட்ராஸ்ட், காட்சிகளை அதிக தெளிவாக அவற்றின் இயற்கை நிறங்களில் பிரதிபலிக்கும். இதன் டைனமிக் க்ரிஸ்டல் கலர் தொழில்நுட்பம் அதிக தரத்தில் காட்சிகளை பார்க்க வழி செய்கிறது. யுஹெச்டி வேரியன்ட்களில் ரிமோட் கன்ட்ரோல், ஸ்மார்ட் ஹப் மற்றும் ஸ்மார்ட் கன்வெர்ஜன்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கான்செர்ட் சீரிஸ் மாடல்களில் ஸ்மார்ட் கான்செர்ட் மற்றும் ஜாய் கான்செர்ட் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. 2018 கான்செர்ட் சீரிஸ் டிவிக்களில் புதிய சவுன்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது ஹார்டுவேர் மற்றும் மென்பொருள்களை இணைந்து அதிக தரமுள்ள சினிமாடிக் அனுபவத்தை வழங்குகிறது. இதில் வழங்கப்படடு இருக்கும் 4 ஸ்பீக்கர்கள் ஒவ்வொன்றும் 10W சவுன்ட் வழங்குகிறது. 

இத்துடன் ப்ளூடூத் சப்போர்ட் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் ஸ்மார்ட் ஹப் அம்சம் இணையத்தில் தரவுகளை வழங்கும் ஜியோ சினிமா, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற பல்வேறு சேவைகளில் உள்ள வீடியோக்களை பார்த்து ரசிக்க முடியும்.

புதிய 8 சாம்சங் கியூ எல்இடி டிவிக்கள் 55-இன்ச் முதல் 75-இன்ச் வரை கிடைக்கின்றன, இவற்றின் விலை ரூ.2,45,000 முதல் துவங்குகிறது. என்ட்ரி-லெவல் யுஹெச்டி மாடல் 7100 சீரிஸ் முதல் துவங்குகிறது. யுஹெச்டி டிவி விலை ரூ.64,900 முதல் துவங்குகிறது. ஸ்மார்ட் கான்செர்ட் மற்றும் ஜாய் கான்செர்ட் டிவி மாடல்கள் விலை ரூ.27,500 முதல் துவங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo