Motorola ZX2 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.

Motorola ZX2 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.
HIGHLIGHTS

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா ZX2 சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

குவாட்கோர் மீடியாடெக் எம்டி9602 பிராசஸர், மாலி ஜி52 எம்சி1 ஜிபியு மற்றும் டூயல் பேண்ட் வைபை வசதி வழங்கப்பட்டு இருக்கின்றன

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா ZX2 சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை 32 இன்ச் ஹெச்டி, 40 இன்ச் புல் ஹெச்டி, ரிவோ சீரிஸ் 43 இன்ச், 55 இன்ச் 4கே ஆண்ட்ராய்டு 10 என பல்வேறு மாடல்களில் கிடைக்கிறது.

இவற்றில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் எம்டி9602 பிராசஸர், மாலி ஜி52 எம்சி1 ஜிபியு மற்றும் டூயல் பேண்ட் வைபை வசதி வழங்கப்பட்டு இருக்கின்றன. 

இந்தியாவில் புதிய மோட்டோ ஸ்மார்ட் டிவி- 32 இன்ச் ஹெச்டி ரெடி மாடல் ரூ. 13,999, 40 இன்ச் புல் ஹெச்டி டிவி ரூ. 19,999, ரெவோ 43 இன்ச் அல்ட்ரா ஹெச்டி மாடல் ரூ. 30,999, ரெவோ 55 இன்ச் அல்ட்ரா ஹெச்டி டிவி ரூ. 40,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

அனைத்து மாடல்களிலும் டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் 4கே மாடல்களில் லினென் பினிஷ் இன்டகிரேட் செய்யப்பட்ட சவுண்ட்பார், ரேசர் தின் டிசைன் மற்றும் எண்ட்லெஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. 

புதிய மோட்டோரோலா ஸ்மார்ட் டிவி மாடல்களின் விற்பனை அக்டோபர் 15 ஆம் தேதி துவங்குகிறது. இவை ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கின்றன

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo