WhatsApp யில் இனி இன்டர்நெட் இல்லாவிட்டாலும் போட்டோ வீடியோ அனுப்ப முடியும்

WhatsApp யில் இனி இன்டர்நெட் இல்லாவிட்டாலும் போட்டோ வீடியோ அனுப்ப முடியும்
HIGHLIGHTS

WhatsApp புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது,

வாட்ஸ்அப் பயனர்களுக்கு இன்டர்நெட் கனெக்சன் இல்லாமல் பைல்களை பகிர சுதந்திரம் அளிக்கிறது,

இன்டர்நெட் இல்லாமல் கூட வாட்ஸ்அப்பில் பைல்களை பகிர முடியும் என்று கூறப்படுகிறது.

WhatsApp புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது, இது வாட்ஸ்அப் பயனர்களுக்கு இன்டர்நெட் கனெக்சன் இல்லாமல் பைல்களை பகிர சுதந்திரம் அளிக்கிறது, விரைவில் நீங்கள் இன்டர்நெட் இல்லாமல் கூட வாட்ஸ்அப்பில் பைல்களை பகிர முடியும் என்று கூறப்படுகிறது.

பயனர்கள் ஆஃப்லைனில் இருந்தாலும் போட்டோக்கள் வீடியோக்கள், ம்யுசிக் மற்றும் டாக்யுமென்ட் போன்றவற்றைப் ஷேர் செய்ய உதவும் அம்சத்தில் மெசேஜிங் ஆப் செயல்படுவதாக சமீபத்திய லீக் தெரியவந்துள்ளது. இது நடந்தால், அதை ஒரு புரட்சிகர முயற்சி என்று அழைக்கலாம், ஏனென்றால் தற்போது இன்டர்நெட் இல்லாமல் வாட்ஸ்அப்பில் எந்த பைலையும் ஷேர் செய்ய முடியாது.

இந்த அம்சத்தை பற்றி வந்த ரிப்போர்டில் என்ன கூறப்படுகிறது

WABetaInfo யின் ஒரு ரிப்போர்ட் படி வாட்ஸ்அப் இந்த அம்சத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது, இதனால் பயனர்கள் இன்டர்நெட் கனெக்சன் இல்லாமல் வெவ்வேறு வகையான பைல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம்.

இது தவிர, இந்த அம்சமும் என்ட் டு என்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது, ஏனெனில் வாட்ஸ்அப் பயனர்களின் செக்யூரிட்டி மற்றும் ப்ரைவசியில் அதிக கவனம் செலுத்துகிறது. எளிமையான மொழியில், நீங்கள் ஆஃப்லைனில் ஒரு பைலை பகிர்ந்தால், அதுவும் என்க்ரிப்ட் செய்யப் போகிறது என்று சொல்லலாம், அதாவது, அதை யாரும் எந்த வகையிலும் சேதப்படுத்த முடியாது.

ஆண்ட்ரோய்ட் பீட்டாவில் வெளிவந்த தகவல்

ஆண்ட்ராய்டுக்கான லேட்டஸ்ட் வாட்ஸ்அப் பீட்டாவில் இருந்து லீக் ஸ்கிரீன் ஷாட்கள், அம்சம் செயல்படுவதற்கு ஆப்ஸ் தேவைப்படும் அனுமதிகளைக் காட்டுகிறது. இந்த ஆஃப்லைன் பைல் ஷேரிங் அம்சத்தை சப்போர்ட் செய்யும் அருகிலுள்ள ஃபோன்களைக் கண்டறிவது ஒரு முக்கியமான விருப்பமாகும். இது ஆண்ட்ராய்டில் உள்ள ஸ்டேடண்டர்ட் சிஸ்டம் அனுமதியாகும், இது லோக்கல் பைல் ஷேருக்காக புளூடூத் வழியாக அருகிலுள்ள போன்களை ஸ்கேன் செய்ய ஆப்களை அனுமதிக்கிறது. இருப்பினும், பயனர்கள் விரும்பினால் இந்த அக்சஸ் மூடவும் செய்யலாம் விருப்பமும் இருக்கும்.

ப்ளூடூத் மூலம் இந்த புதிய அம்சம் வேலை செய்யும்.

அருகிலுள்ள டிவஸ்களை தேடுவதைத் தவிர, உங்கள் மொபைலில் உள்ள சிஸ்டம் பைல்கள் மற்றும் போட்டோ கேலரிகளை அணுகவும் WhatsApp-க்கு அனுமதி தேவை. பிற டிவைஸ் இணைக்கும் அளவுக்கு அருகில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க, ஆப்பிற்கு லோகேசன் அனுமதியும் தேவைப்படும். இந்த அனுமதிகள் இருந்தபோதிலும், WhatsApp ஃபோன் நம்பர்களை மறைத்து, ஷேர் செய்யப்பட்ட பைல்களை என்க்ரிப்ட் செய்து, ஷேர் செய்யும் செயல்முறை பாதுகாப்பானது என்பதை உறுதி செய்யும்.

ShareIT போன்ற புதிய WhatsApp அம்சம் வரிகளில் வேலை செய்யும்

ShareIT போன்ற பியர்-டு-பியர் ஃபைல்-ஷேரிங் அப்ளிகேஷன்கள் எப்படிச் செயல்பட்டதோ அதைப் போலவே இந்தப் புதிய அம்சமும் உள்ளது. செல்லுலார் அல்லது வைஃபை கனெக்சன் இல்லாமல் டிவஸ்களுக்கு இடையே பைல்களை ஷேர் செய்ய இந்தப் ஆப்கள் பயனர்களை அனுமதிக்கின்றன. வாட்ஸ்அப் பயனர்கள் பல்வேறு வகையான மீடியா பைல்கள் மற்றும் டாக்யுமென்ட்களை பகிர்வதைக் கருத்தில் கொண்டு, இந்த புதிய அம்சம் ஆப் பயனர்களுக்கு சிறந்ததாக இருக்கும்.

இந்த அம்சம் WhatsApp யில் எப்பொழுது வரும்

இந்த அம்சம் பயனர்களுக்கு எப்போது கிடைக்கும் என்று WhatsApp அறிவிக்கவில்லை, ஆனால் இது ஏற்கனவே பீட்டா டெஸ்ட்டிங்கில் இருப்பதால், இது விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்த புதிய அம்சம் உலகெங்கிலும் உள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு பைல் ஷேர் செய்ய மிகவும் வசதியாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும் திறனைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:Airtel அறிமுகம் செய்தது வெறும் ரூ,133 யில் கிடைக்கும் இண்டர்நேசனல் ரோமிங் உடன் கிடைக்கும் Free சிம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo