ஏர்டெலுக்கு பிறகு இப்பொழுது ஜியோ மும்பையில்5G சோதனையை ஆரம்பித்துள்ளது.

ஏர்டெலுக்கு  பிறகு இப்பொழுது ஜியோ மும்பையில்5G சோதனையை ஆரம்பித்துள்ளது.
HIGHLIGHTS

ஜியோ மும்பையில் 5 ஜி சோதனையைத் தொடங்குகிறார்

ஏர்டெல் சமீபத்தில் 5 ஜி சோதனை செய்துள்ளது

ஜியோ நடுத்தர மற்றும் mm-wave பட்டைகள் பயன்படுத்துகிறது

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மும்பையில் 5ஜி சேவையை வழங்குவதற்கான சோதனையை துவங்கி இருக்கிறது. முன்னதாக ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவையை குர்கிராமில் துவங்கியது. ஏர்டெல் சோதனையில் 1Gbps வரையிலான டவுன்லோட் வேகம் கிடைத்தது. 
 
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குஜராத், மும்பை, டெல்லி மற்றும் ஐதராபாத் பகுதிகளில் 5ஜி சோதனையை நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் 5ஜி சோதனைக்காக தனது சொந்த தொழில்நுட்பங்களை ஜியோ பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் ஆறு மாத காலத்திற்கு 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சோதனைகளை மேற்கொள்ள மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் இந்த ஆண்டு மே மாதத்தில் அனுமதி அளித்தது. இதற்கென 700MHz, 3.2 முதல் 3.6GHz மற்றும் 24.25 முதல் 28.5GHz பேண்ட்களை ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு ஒத்துக்கீடு செய்யப்பட்டு உள்ளது

டெல்லியில் 5ஜி வழங்க எரிக்சன் நிறுவனத்துடன், பூனேவில் சோதனையை மேற்கொள்ள நோக்கியா நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஜியோ இணைந்துள்ளது. இதேபோன்று குஜராத்தில் சோதனையை மேற்கொள்ள ரிலையன்ஸ் ஜியோ சாம்சங் நிறுவனத்துடன் இணைகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo