கடைக்கு போகாமல் ஆன்லைனில் இருந்தபடி வேறு நெட்வொர்க்குக்கு சிம் கார்டை எப்படி மாற்றுவது

கடைக்கு போகாமல் ஆன்லைனில்  இருந்தபடி வேறு நெட்வொர்க்குக்கு சிம் கார்டை எப்படி மாற்றுவது
HIGHLIGHTS

உங்களின் எண்ணை போர்ட்டிங் செய்தால் சேவை கேன்ஸில் செய்யப்படுமா?போர்ட்டிங் செயல்முறை சில நிமிடங்களை மட்டுமே எடுத்துக்கொள்ளும்

2. பழைய நெட்வொர்க்கிற்கு உங்களின் போன் நம்பரை மீண்டும் போர்ட் செய்ய முடியுமா?

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் பெரும்பாலான மக்கள் தற்போது 'வீட்டிலிருந்து வேலை' செய்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், இணையத்தை சார்ந்திருப்பது முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளது. நீங்கள் ஒரு வைஃபை இணைப்பை வாங்க முடியாவிட்டால், நீங்கள் மொபைல் டேட்டவை முழுமையாக சார்ந்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே பைல்களைப் பதிவிறக்குவதற்கும் பதிவேற்றுவதற்கும், காலிங் மற்றும் வீடியோ காலிங் அனுபவத்திற்கும் உங்கள் மொபைல் நெட்வொர்க் வலுவாக இருப்பது முக்கியம்.உங்கள் மொபைல் டேட்டாவின் வேகம் அதிகரிப்பது  குறைந்து கொண்டே இருந்தால் – உங்கள் வேலையும் பாதிக்கப்படும். உங்கள் மொபைல் எண்ணை வேறொரு நெட்வர்க்கில் மாற்றுவதற்கான வேலையை  பார்க்க வேண்டி இருக்கும்.

1. உங்களின் எண்ணை போர்ட்டிங் செய்தால் சேவை கேன்ஸில் செய்யப்படுமா?போர்ட்டிங் செயல்முறை சில நிமிடங்களை மட்டுமே எடுத்துக்கொள்ளும். ஆனால் சில சமயங்களில் தொலைபேசி எண்ணை வெற்றிகரமாக மாற்ற 24 மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நேரமும் ஆகலாம். எண் மாற்றப்பட்டு செயலில் சேவை முடிந்ததும், புதிய சேவை வழங்குநர் வாடிக்கையாளருக்கு தகவல் அனுப்புவார். மேலும் அந்த இடைப்பட்ட காலத்தில், பழைய சேவை வழங்குநரின் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

2. பழைய நெட்வொர்க்கிற்கு உங்களின் போன் நம்பரை மீண்டும் போர்ட் செய்ய முடியுமா?

ஆம், நீங்கள் உங்கள் பழைய நெட்வொர்க்கிற்கு மீண்டும் செல்லலாம். ஆனால் 90 நாட்கள் காத்திருக்க வேண்டும். இந்த 90 நாட்கள் காலம் MNP லாக்-இன் காலம் என்று அழைக்கப்படுகிறது. பழைய நெட்வொர்க்கிற்கு மீண்டும் போர்ட்டிங் செய்யும் முறை ஒன்றே, உங்கள் தரப்பிலிருந்து தேவைப்படுவது சரியான நடைமுறையைப் பின்பற்றுவதே ஆகும்.

3. 90 நாட்களுக்கு முன்னர் எனது தொலைபேசி எண்ணை நான் போர்ட் செய்ய முடியுமா?

நீங்கள் ஒரு புதிய அல்லது ஏற்கனவே உபயோகித்த எண்ணை வாங்கியிருந்தால், 90 நாட்களுக்கு முன்னர் உங்கள் மொபைல் எண்ணை நீங்கள் போர்ட் செய்ய முடியாது.

4. ஒரு மாதத்தில் இரண்டு முறை போர்ட் செய்ய முடியுமா?

உங்கள் மொபைல் எண்ணை உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பல முறை மாற்றலாம். ஆனால், முந்தைய போர்ட்டிங்கிற்கு இடையில் 90 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்பதே நிபந்தனையாகும். மேலும், ஒவ்வொரு 90 நாட்களுக்கும் உங்களது விருப்பம் போல் ஒரு புதிய எண்ணுக்கு மாறலாம்.

5. புதிய சிம் கார்டை உபயோகிக்க தொடங்கும்போது, அனைத்து டெக்ஸ்ட் மெசேஜ்களும் இழக்க நேரிடுமா?

இல்லை. உங்கள் மெசேஜ்கள் மொபைல் போனின் நினைவகத்தில் சேமித்து வைத்திருப்பதால் நீங்கள் அவற்றை இழக்க மாட்டீர்கள். மேலும் உங்கள் சிம் கார்டில் சேமிக்கப்பட்டுள்ள சில தொடர்புகள் இருக்கும். அந்த தொடர்புகள் அல்லது டயலர் பயன்பாட்டின் சில அமைப்புகளை மாற்றியமைப்பதற்கு ஒரு சில நடவடிக்கைகள் தேவைப்படும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo