நாடெங்கும் மிக சிறந்த 4G கவரேஜ் BSNL யின் அதிரடி,இனி நெட்வொர்க் பிரச்சனை இருக்காது

HIGHLIGHTS

BSNL செப்டம்பர் 27 ஆம் தேதி இந்தியா முழுவதும் தனது 4G சேவையை அறிமுகம்

BSNL தனது அதிகாரப்பூர்வ X அக்கவுன்ட் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது

பிஎஸ்என்எல் 9 கோடிக்கு அதிகமான வயர்லஸ் சப்ஸ்க்ரிப்சன் வழங்கப்படுகிறது

நாடெங்கும் மிக சிறந்த 4G கவரேஜ் BSNL யின் அதிரடி,இனி நெட்வொர்க் பிரச்சனை இருக்காது

அரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனம் தனது வேகமான நெட்வொர்க் சேவையை தனது கஸ்டமர்களுக்கு கிடைக்கச் செய்யும் நேரம் இறுதியாக வந்துவிட்டது. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) செப்டம்பர் 27 ஆம் தேதி இந்தியா முழுவதும் தனது 4G சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. 4G சேவைகள் அனைத்து இடங்களிலும் கிடைக்க உள்ளதாக BSNL தனது அதிகாரப்பூர்வ X அக்கவுன்ட் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஏ ராபர்ட் ஜே ரவி, செப்டம்பர் 27 ஆம் தேதி நாடு முழுவதும் நாங்கள் தொடங்கி வைக்கும் எங்கள் உள்நாட்டு தொழில்நுட்பம் இது என்று இந்தியா டிஜிட்டல் இன்ஃப்ரா உச்சி மாநாடு 2025 இல் தனது உரையின் போது கூறினார்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதன் மிக பெரிய நன்மையாக பிஎஸ்என்எல் 9 கோடிக்கு அதிகமான வயர்லஸ் சப்ஸ்க்ரிப்சன் வழங்கப்படுகிறது அதனை தொடர்ந்து விரைவில் 5G மொபைல் நெட்வொர்க் ரோல்அவுட் செய்யப்படுகிறது.

BSNL 4G சேவை நன்மை

BSNL அதன் 4G சேவையை செப்டம்பர் 27 ஆரம்பம் செய்ய இருக்கிறது, இதன் மூலம் கஸ்டமர்கள் எந்த ஒரு இடையூறு இன்றி மிக சிறந்த நெட்வொர்க் கிடைக்கும் இந்த அதிரடி முடிவானது கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனியார் டெலிகாம் நிறுவங்கள் அதன் திட்டத்தின் விலையை உயர்த்திய காரணத்தால் மக்கள் அரசு பக்கம் சாய ஆரம்பித்தனர் எனவே பிஎஸ்என்எல் பல திட்டத்தில் மிக சிறந்த நன்மையை கொண்டு வருகிறது மேலும் தற்பொழுது 5G சேவை பல இடங்களில் கிடைக்க ஆரம்பித்துள்ளது

இதையும் படிங்க:வீடு தேடிவரும் BSNL SiM ஆன்லைனில் ஆர்டர் செய்வது தெரிதவிங்க தெருந்சுகொங்க

BSNL 4G சேவை தாமதமானது ஏன் ?

முன்னதாக, தொலைத்தொடர்பு நிறுவனம் ஆகஸ்ட் 15, 2025 க்குள் இந்தியா முழுவதும் 100,000 தளங்களில் 4G ஐ அறிமுகப்படுத்துவதாக அறிவித்திருந்தது. இருப்பினும், இது நிறைவேறவில்லை. கடனில் சிக்கித் தவிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தலைமையிலான ஒரு கூட்டமைப்பிலிருந்து தொழில்நுட்ப ஆதரவைப் பெறுகிறது. இந்த கூட்டமைப்பில் தேஜாஸ் நெட்வொர்க்குகள் மற்றும் C-DOT (டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம்) ஆகியவை அடங்கும். அரசாங்கம் ஒரு நிவாரணப் பெக்கின் ஒரு பகுதியாக டெலிகாம் நிறுவனத்திற்கு 4G ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கியது.

BSNL 4G சேவையின் சிறப்பு விஷயம் என்ன ?

700 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் 4ஜி சேவைகளை வழங்கும் நாட்டிலேயே ஒரே டெலிகாம் நிறுவனமாக பிஎஸ்என்எல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்களின்படி, டெலிகாம் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம், அடுத்த ஆண்டில் அதன் ARPU 50% வளர்ச்சியடையும் என்றும், அதன் நிறுவன வணிகமும் 25-30% வளர்ச்சியடையும் என்றும் கூறினார் . செப்டம்பர் 27 ஆம் தேதிக்குள் அனைவரும் பிஎஸ்என்எல்லின் 4ஜி நெட்வொர்க்கைப் பயன்படுத்த முடியும் என்று கூறினார்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo