BSNL யின் இந்த திட்டத்தின் ரூ,100 டிஸ்கவுண்ட் உடன் கிடைக்கும் 3300GB டேட்டா
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) ரூ,399 யில் வரும் Broadband திட்டத்தை கொண்டுவருகிறது,
இப்போது நீங்கள் அதை ₹399க்கு பெறலாம்
நிறுவனம் சமீபத்தில் தனது X அக்கவுன்ட் மூலம் இந்த சலுகையை அறிவித்தது.
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) ரூ,399 யில் வரும் Broadband திட்டத்தை கொண்டு வருகிறது, நாம் BSNL ஃபைபர் பேசிக் பற்றிப் பேசுகிறோம், இதன் ஆரம்ப விலை ₹499. நல்ல செய்தி என்னவென்றால், இப்போது நீங்கள் அதை ₹399க்கு பெறலாம். நிறுவனம் சமீபத்தில் இந்த சலுகையை அதன் தற்போதைய கஸ்டமர்களுக்கு அறிவித்தது. நிறுவனம் சமீபத்தில் தனது X அக்கவுன்ட் மூலம் இந்த சலுகையை அறிவித்தது. இந்த திட்டம் 60Mbps வேகமான கனெக்ஷன் ஸ்பீடை வழங்குகிறது மேலும் இதன் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL ரூ,399 திட்டம்
BSNL Fibre Basic முதலில் மாதத்திற்கு ரூ,,499 விலையில் இருந்தது. இப்போது கஸ்டமர்கள் மாதத்திற்கு ரூ,399க்கு இதைப் பெறலாம் என்று நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது. சலுகையின் ஒரு பகுதியாக, பிஎஸ்என்எல் முதல் மாதத்திற்கு இலவச சேவையையும் வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் மூன்று மாதங்களுக்கு தங்கள் பில்களில் ₹100 தள்ளுபடியையும் பெறுவார்கள்.
Looking for a powerful & affordable home broadband plan?
— BSNL India (@BSNLCorporate) December 11, 2025
Upgrade to BSNL Fibre Basic @ ₹399 and enjoy 3300GB data, up to 60 Mbps speed, first month service FREE, and ₹100 OFF for 3 months, for home internet that truly keeps up with your life!
Say 'Hi' on WhatsApp at 1800-4444… pic.twitter.com/B8VV4BXPLT
இந்த திட்டம் 3300GB வரை 60Mbps வேகத்தை வழங்குகிறது, மேலும் அந்த தரவு தீர்ந்த பிறகு, வேகம் 4Mbps ஆக குறைகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் காலிங்கிற்க்கான இலவச லேண்ட்லைன் கனெக்ஷன் வழங்குகிறது, கஸ்டமர்கள் லேண்ட்லைன் டூலை தாங்களாகவே வாங்க வேண்டும், இதை 6 மாதங்கள் அல்லது 12 மாதங்களுக்கு வாங்கலாம்,
இதையும் படிங்க:Jio vs Airtel vs Vi: ஒரே மாதுரி விலை கொண்ட திட்டத்தில் ஜியோவையும் தோற்கடித்த வோடபோன் ஐடியா
இந்தத் திட்டத்தை வாங்க நீங்கள் ஆர்வமாக இருந்தால், விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள BSNL அலுவலகத்தைப் பார்வையிடலாம். வாடிக்கையாளர்கள் BSNL வலைத்தளம், 1800-4444 என்ற வாட்ஸ்அப் எண் அல்லது BSNL SelfCare ஆப் மூலமாகவும் தகவல்களைப் பெறலாம். இந்தச் சலுகை காலாவதியாகும் முன்பே அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile