Airtel Perplexity Pro நன்மை இன்னும் எடுக்க வில்லையா இந்த தேதி தான் கடைசி
Perplexity Pro என்ற AI சேவையின் சந்தாவை இலவசமாக வழங்குவதாக அறிவித்து இருந்தது.
இந்த சந்தாவின் மதிப்பு ரூ.17,000 ஆகும்
Perplexity Pro யின் இந்த இலவச நன்மை ஜூலை 17 2025 லிருந்து ஜனவரி 17, 2026 வரை இருக்கும்
Bharti Airtel தனது பயனர்களுக்கு பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ (Perplexity Pro) என்ற AI சேவையின் சந்தாவை இலவசமாக வழங்குவதாக அறிவித்து இருந்தது. இந்த சந்தாவின் மதிப்பு ரூ.17,000 ஆகும். இதனால் ஏர்டெல் கஸ்டமர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏர்டெல் மொபைல், பிராட்பேண்ட், DTH உள்ளிட்ட அனைத்து சேவைகளின் பயனர்களும் இதை க்ளெயிம் செய்யலாம். பெர்ப்ளெக்சிட்டி என்பது ஏஐ அடிப்படையிலான செர்ச் இன்ஜின் (Search Engine). இது உங்கள் கேள்விகளுக்கு உடனடி, துல்லியமான பதில்களை வழங்கும். இந்த இலவச சலுகை, ஏர்டெல் நிறுவனத்தின் 360 மில்லியன் பயனர்களுக்கும் கிடைக்கும்.airtel யின் இந்த நன்மை ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் இரண்டு கஸ்டமர்களுக்கும் கிடைக்கும் மேலும் இந்த நன்மை எதுவரை கிடைக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க.
SurveyAirtel யின் Perplexity Pro ஆபர் நன்மையின் கடைசி தேதி என்ன
ஏர்டெல் யின் அதன் Perplexity Pro யின் இந்த இலவச நன்மை ஜூலை 17 2025 லிருந்து ஜனவரி 17, 2026 வரை இருக்கும் அதாவது இது ஆறு மாதங்கள் வரை இந்த நன்மையை பெற முடியும் .
இந்த Perplexity Pro நன்மையை பெற விரும்பினால் நீங்கள் எளிதாக Airtel Thanks app மூலம் பெற முடியும், அதன் பிறகு லாகின் செய்வதற்க்கு Google ID அல்லது Apple ID கேட்க்கும் அதன் மூலம் இந்த இலவச நன்மை பெறலாம். இந்த இலவச ஆபர் pro சப்ஸ்க்ரிப்சன் யில் மட்டுமே கிடைக்கும் மற்றும் இது எண்டர்ப்ரைசஸ் அல்லது Max அப்க்ரேடுக்கு செல்லாது.
இதையும் படிங்க Airtel ரூ,17,000 மதிப்பிலான Perplexity Pro நன்மையை வழங்குகிறது அதை எப்படி பெறுவது இதனால் என்ன பயன்
Perplexity Pro நன்மை என்ன?
Perplexity Pro சாதாரண சர்ச் இன்ஜின்களை விட சிறப்பானது. இது உங்கள் கேள்விகளுக்கு உடனடி பதில்களை வழங்கும், அதுவும் ஆதாரங்களுடன் வழங்கும். உதாரணமாக, பயண திட்டம், சமையல் குறிப்பு, ஆராய்ச்சி தகவல்கள் போன்றவற்றை எளிதாகப் பெறலாம்.
- இது ஒரு நாளைக்கு 300 வரையிலான AI-பவர்ட் சர்ச் நடைபெறும்.
- இதில் GPT-4, Claude, மற்றும் Gemini யின் போன்ற top-tier மாடல் பயன்படுத்தப்படுகிறது.
- நீங்கள் எளிதாக டாகுமென்ட் அப்லோட் மற்றும் பைலை இன்ச்டடண்டாக சரி பார்ப்பது மற்றும் புரியும் வகையில் சுருக்கம் போன்றவற்றை பெறலாம்.
- இதனுடன் இதில் DALL·E மற்றும் Flux போன்ற Ai பவர்ட் தூள் பயன்படுத்தி விஷுவல் இமேஜ் பெறலாம்.
- priority சரியான ஸ்பீட் உடன் தெளிவான அக்சஸ் மற்றும் விளம்பரம் இல்லாத இன்டர்பேஸ் பெற முடியும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile